Total Pageviews

Friday, December 30, 2011

Tamil Nadu Govt. allocated 150 crores to 'Thane' storm hitted people. I request our Chief Minister to take care that the amount goes to the storm affected people...

Tamil Nadu Govt. allocated 150 crores to 'Thane' storm hitted people. I request our Chief Minister to take care that the amount goes to the storm affected people...

Monday, December 26, 2011

Sunday, December 25, 2011

நமது அரசியல் கட்சிகளும் தலைவர்களும் வளர்ச்சிப் பணிகளில் ஈடு படுமாறு வேண்டிக் கொள்கிறோம்... உதாரணம்: மரம் நடுதல், மரத்திற்கு நீர் ஊற்றுதல்...

நமது அரசியல் கட்சிகளும் தலைவர்களும் வளர்ச்சிப் பணிகளில் ஈடு படுமாறு வேண்டிக் கொள்கிறோம்... உதாரணம்: மரம் நடுதல், மரத்திற்கு நீர் ஊற்றுதல்...

Saturday, December 24, 2011

கிடைத்த வேலையில் சேருங்கள். கனவு வேலை தானாக வரும்...

கிடைத்த வேலையில் சேருங்கள். கனவு வேலை தானாக வரும்...

http://suga-employment-services.blogspot.com/

Friday, December 23, 2011

இந்தியாவில் தமிழர்களும் கேரளத்தவர்களும் ஒற்றுமையாக இனிமையாக வாழ்ந்து வருகிறார்கள்... சில அரசியல்வாதிகள் மட்டுமே பிரச்சினை செய்து வருகிறார்கள்...

இந்தியாவில் தமிழர்களும் கேரளத்தவர்களும் ஒற்றுமையாக இனிமையாக வாழ்ந்து வருகிறார்கள்... சில அரசியல்வாதிகள் மட்டுமே பிரச்சினை செய்து வருகிறார்கள்...

இந்தியாவில் நிறைய வேலை வாய்ப்புகள் பெருகி வருகிறது...

இந்தியாவில் நிறைய வேலை வாய்ப்புகள் பெருகி வருகிறது...

http://suga-employment-services.blogspot.com/

இந்தியா ஒவ்வொரு நாளும் சிறப்பாக வளர்ந்து வருகிறது...

இந்தியா ஒவ்வொரு நாளும் சிறப்பாக வளர்ந்து வருகிறது...

Tuesday, November 1, 2011

ஏழ்மையை ஒழிப்பது எப்படி?

ஏழ்மையை ஒழிப்பது எப்படி?

ஏழைகள் தங்கள் அறியாமையை போக்கிக் கொள்ள நிறைய அறிவு வளர்க்கும் புத்தகங்களைப் படிக்க வேண்டும்.
ஏழ்மையை ஒழிக்க அரசு தீட்டும் திட்டங்களை அறிந்து கொண்டு ஏழைகள் அத்திட்டங்களை சரியான முறையில் உபயோகபடுத்திக் கொண்டு நல்ல தொழில்கள் மூலமாக பணம் சம்பாதிக்க கற்றுக் கொள்ள வேண்டும்.
நல்ல கல்வி அறிவு பெற்ற ஏழைகள், அரசு அதிகாரிகள் ஏழ்மை ஒழிப்புத் திட்டங்களில் ஊழல் செய்வதை அறிந்தால் அதை உயர் அதிகாரிகள் கவனத்திற்கு புகார் கொடுத்து தெரியப்படுத்த வேண்டும்.
ஏழைகள் தங்கள பாடுபட்டு சம்பாதித்த பணத்தை போதைப் பொருட்கள், மது போன்ற தவறான வழிகளில் செலவழிக்காமல் வீட்டுக்கு தேவையான செலவுகளைச் செய்து மீதியை சேமித்தல் ஏழ்மை ஒழியும்.

பாவத்தின் சம்பளம் மரணம்

ஒருவன் ஒரு பெண்ணின் மேல் ஆசைப்பட்டால் அது காதல். பல பெண்களின் மேல் ஆசைப்பட்டால் அது காமம். ஒருவன் நாள் முழுவதும் உழைத்து மற்றவர்களுக்கு நல்ல உதவிகளை செய்து பணம் சம்பாதித்தால் அது வருமானம். ஆனால் மற்றவர்களின் பணத்தில் ஆசைப்பட்டு அவர்கள் அறியாத சமயம் அவர்கள் பையில் இருந்து எடுத்தாலோ அல்லது வன்முறையை உபயோகித்து பிறரிடமிருந்து பணத்தைப் பிடுங்கினாலோ அவை திருட்டு, கொள்ளை எனப்படுகிறது. ஒரு ஆணும், பெண்ணும் கணவன் மனைவியாக வாழ்க்கையை ஏற்று உடல் உறவு கொண்டால் அது "இல்லறம்" என போற்றப்படுகிறது. அதுவே விருப்பம் இல்லாத பெண்ணை வற்புறுத்தி ஒருவன் உடல் உறவு கொண்டால் அது "கற்பழிப்பு" என தூற்றபடுகிறது.

இது போலவே மனிதர்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் நல்லது எது, கெட்டது எது என சமுதாயம் நிர்ணயம் செய்கிறது. தீய செயல்கள் பாவம் என சொல்லப்படுகிறது. இத்தீய செயல்களாகிய பாவத்தை செய்பவர்கள் கடைசியில் கொடிய மரணத்தை அடைகிறார்கள்.

மரணம் சாதாரணமாக வயதான காலத்தில்தான் வரும். ஆனால் அதிக பாவம் செய்பவர்களுக்கு மரணம் சீக்கிரமே வந்து விடும். ஆகவேதான் பாவத்தின் சம்பளம் மரணம் என்று சொல்லப்படுகிறது...

Tuesday, October 18, 2011

மொழி

மொழி

கோடானுகோடி உயிரினங்கள் வாழும் பூமியில் பரிணாம வளர்ச்சியின் உச்சத்தில் தோன்றிய மனித இனத்தில் சிறந்த மனிதர்கள் பல்லாயிரக்கணக்கான வருடங்களாக தங்கள் எண்ணங்களையும் சிந்தனைகளையும் வெளிப்படுத்த பலவித ஒலிகளையும், பலவித சைகைகளையும் பயன்படுத்தி வந்தனர். பிறகு சிறிது சிறிதாக வளர்ச்சி அடைந்து மனிதர்கள் எழுப்பும் ஒலிகளுக்கு ஒரு ஒழுங்கான வடிவம் கொடுத்து பேசும் மொழி உறவானது. பேசும் மொழி பலவிதங்களில் வளர்ச்சி அடைந்து அவற்றிற்கு எழுத்து கொடுக்கப்பட்டது. இவ்வாறு பலபகுதிகளில் உள்ள மக்கள் பலவித பேச்சு மற்றும் எழுத்து வடிவங்களை உருவாக்கி, பல மொழிகளை தோன்றின. இந்த மொழிகள் பலவும் இப்பொழுது ஒன்று சேர்ந்து இப்போது பலவித புதிய கலப்பு மொழிகள் தோன்றி வருகின்றன இவ்வாறு மனித சிந்தனைகளை வெளிபடுத்த உதவும் மொழிகளில் பல புதிய மாற்றங்கள் தோன்றிக்கொண்டே இருக்கின்றன. மொழிகள் வளர்ந்து கொண்டே இருக்கின்றன.

Tuesday, October 11, 2011

மாம்பழம்

மாம்பழம்
கோடைக்காலத்தில் விளையும் பொருட்களிலேயே மாம்பழம் மிகச் சிறந்த பழமாகும். மாம்பழத்தின் இனிமையையும் சுவையையும் வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. அதன் சுவையை அனுபவித்தே அறிய முடியும்.
மாம்பழத்தில் பல வகைகள் உள்ளன. அவற்றை அப்படியே சாப்பிட்டாலும் இனிமைதான். மாம்பழச் சாற்றை குடித்தாலும் அருஞ்சுவையாய் இருக்கும்.
மாம்பழத்தை விளைவிப்பதால் பல்லாயிரகணக்கான விவசாயிகள் பலன் பெறுகிறார்கள். மாம்பழத்தை விற்பதிலும் பல இடங்களுக்கு கொண்டு செல்வதிலும் பல லட்சம் மக்கள் வேலை வாய்ப்பைப் பெறுகின்றனர்.
மாம்பழச் சாறுகள் செய்வதிலும் மாங்காய் ஊறுகாய் செய்வதிலும் பல தொழிற்சாலைகள் ஈடுபட்டு உள்ளனர். இவற்றால் பலர் வேலை வாய்ப்பைப் பெறுகின்றனர்.
மாவடு, ஆவக்காய் மாங்காய், மாங்காய் தொக்கு ஆகியவை மறக்க முடியாத ஊறுகாய்கள் ஆகும். அவற்றின் சுவைக்கு நிகரில்லை.
இத்தகையை இனிய மாம்பழங்களையும் காய்களையும் அளிக்கும் மாமரங்களுக்கு நன்றி சொல்வோம். மாமரங்களை போற்றி வளர்ப்போம்.
மாமரங்கள் இயற்கையின் பரிணாம வளர்ச்சியில் தோன்றிய இனிய சேர்க்கையாகும்.
இத்தகைய இனிய மாமரங்கள் தோன்றக் காரணமையிருந்த இயற்கைக்கும் பூமித்தாய்க்கும் நாம் நன்றி சொல்வோம்.

Monday, October 10, 2011

தாமஸ் ஆல்வா எடிசன்

தாமஸ் ஆல்வா எடிசன்
--தாமஸ் ஆல்வா எடிசனே ! உங்களுக்கு எனது பணிவான வணக்கங்கள். ஆயிரத்திற்கும் மேற்பட்ட அறிவியல் அற்புதங்களை கண்டு பிடித்து, மனித வாழ்வில் இனிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்த நல்லவரே ! நீங்கள் என்னை விட கோடானுகோடி மடங்கு உயர்ந்தவர். நீங்கள் கண்டுபிடித்த அனைத்து கருவிகளையும் அற்புதமான அறிவியல் தத்துவங்களையும் புரிந்து கொள்ளும் சக்தி கூட எனக்கு இல்லை. அறிவின் அடிப்படை விஷயங்களையே புரிந்து கொள்ள திணறும் சாதாரண மனிதனாகிய நான், அறிவியல் மாமேதையாகிய தங்களுக்கு என்ன கைம்மாறு செய்ய முடியும்? நான் அறிந்ததெல்லாம் தங்களைப் போன்ற மாமனிதர்களை, அவதார புருஷர்களை, பணிந்து வணங்குவது ஒன்றுதான். அழியாப் புகழ் பெற்ற தங்களுக்கு என் கோடானு கோடி நமஸ்காரங்கள்.

மின்சாரம்

மின்சாரம்
மனித அறிவினால் கண்டறியப்பட்டவிஷயங்களில் மின்சாரம் ஒரு மிகச் சிறந்த கண்டுபிடிப்பாகும். மின்சாரம் சக்தியின் மிகச் சிறந்த வடிவமாகும். மின்சக்தியை எந்த வித சக்தியாகவும் மிக எளிதில் மாற்ற நமக்கு பல கருவிகள் உள்ளன. மனிதர்கள் பணத்தைக் கொண்டு பல விஷயங்களை இவ்வுலகில் விலைக்கு வாங்க முடிவது போல மின்சாரத்தைக் கொண்டு பல காரியங்களை எளிதாச் செய்யலாம். நமது அன்றாட வாழ்வில் மின்சாரம் தற்போது சர்வ சாதாரணமாக உபயோகப்பட்டு வருகிறது. இத்தைகைய மின்சார உற்பத்தி தொழில்களான அனல் மின் சக்தி, நீர் மின் சக்தி, அணு மின் சக்தி நிலையங்களில் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெற்று வாழ்ந்து வருகிறார்கள். வீடுகளில் உபயோகபடுவது மட்டுமில்லாமல் பல லட்சக்கணக்கான தொழிற்சாலைகளில் உலகம் முழுவதும் பலவித வளர்ச்சிப் பணிகளுக்காகவும் ஆக்கப் பணிகளுக்காகவும் மின்சாரம் பயன்படுகிறது. மின்சாரம் மனித வாழ்வின் அத்யாவசிய தேவையாக மாறி விட்டது.

நல்லவர்களின் சிந்தனை

'மனிதர்களுக்கு ஏற்படும் கஷ்டங்களை களைய வேண்டும், மனிதர்களுக்கு நம்மால் முடிந்த அளவு உதவ வேண்டும்' என்பதே அறிவுடையோரின், நல்லவர்களின் சிந்தனையாக இருக்கிறது.

Tuesday, October 4, 2011

பணம்

பணம்

மனிதனின் மிகச்சிறந்த கண்டுபிடிப்புகளில் பணமும் ஒன்று. மிகச்சிறந்த உழைப்பாளி தனது உழைப்பை பணமாக மாற்ற இயலும். மிகச்சிறந்த கலைஞர்கள் தங்கள் கலைத்திறனை பணமாக மாற்ற இயலும். மிகச்சிறந்த அறிவாளி தனது அறிவை பணமாக மாற்ற இயலும். ஆகவே மனிதர்கள் தங்கள் அறிவை, திறமையை, புத்திசாலிதனத்தை, கலைத்திறனை, காலத்தை, உழைப்பை, சரியாக உபயோகிக்கவும் அளவிடவும் பணம் மிகச்சிறந்த கருவியாக செயல்படுகிறது. மனிதர்கள் தங்களிடம் உள்ளதை பணமாக மாற்றி தங்களுக்கு தேவையானவற்றை அந்த பணத்தை உபயோகித்து வாங்கி கொள்ள இயலும். மனிதர்கள் தாங்கள் சேர்த்த பணத்தை நல்ல வழியில் செலவழித்தால் நல்ல பெயரையும் அனைவரின் ஆதரவையும் அன்பையும் பெறுகிறார்கள். அதே போல் மனிதர்கள் தங்கள் பணத்தை நல்ல வியாபாரங்களிலும் நல்ல தொழில்களிலும் முதலீடு செய்தால் அவை சிறப்பாக வளர்ச்சியடைந்து அனைவருக்கும் நன்மை பயக்கிறது. மனிதர்கள் பணத்தை நல்ல வழியில் சம்பாதித்து நல்ல வழியில் செலவழிப்பது நல்லது.

Thursday, August 18, 2011

Insurance Software Solution Framework - for Global Insurance Practice - Video in YouTube...


In this video, I have given high level Insurance Software Solution Framework - for Global Insurance Practice. For any further details, contact me through my email. I can give next level Business Consultancy for Insurance Software Development requirements.

http://www.youtube.com/watch?v=zMmVTtQdYKI

Insurance Business Analysis - Video - in YouTube...


I have uploaded a clipping on Insurance Business Analysis for Software and IT Business Analysis in YouTube...

http://www.youtube.com/watch?v=TMe3-0vZjJ0

Tuesday, August 16, 2011

CBSE - XI - Mathematics - Part - 2 by N.Sugavanam


CBSE - XI - Mathematics - Part - 2 by N.Sugavanam - nsugavanam@gmail.com

http://www.youtube.com/watch?v=Wto8BKduIEQ

CBSE - XI - Mathematics - Part - 1 - Video clip


CBSE - XI - Mathematics - Part - 1 by N.Sugavanam - nsugavanam@gmail.com

http://www.youtube.com/watch?v=poN_65IbNi0

Tamil Children Story - Mambazha Kurangu Kathai - Part-2


I have uploaded the second part of Tamil Children Story - Mambazha Kurangu Kathai - Part-2 - as first part is appreciated by children... my Divine Audience... Please watch second part... Become a child yourself...

http://www.youtube.com/watch?v=RhR3-VLmXKQ

"How-to-beautify Marina Beach - in Tamil" in YouTube...



I have published "How-to-beautify Marina Beach - in Tamil" in YouTube...

Please watch and give your feedback...

http://www.youtube.com/watch?v=PVOWOqK6fes

Tamil Video - To Plant Asoka Trees in Road Partititions - by Sugavanam Natarajan



I have uploaded "Tamil - To Plant Asoka Trees in Road Partititions - by Sugavanam Natarajan"

http://www.youtube.com/watch?v=LWgs3Jy_o5w

Tamil Children Story - Maambazha Kurangu Kathai - Part - 1 Video - in YouTube...

I have published Tamil Children Story - Maambazha Kurangu Kathai - Part - 1 in YouTube...

http://www.youtube.com/watch?v=8uzIXmDbwyQ

Tamil Video about Rebirth - Genmam - Pona Genmam - Maru Genmam...


Please watch my tamil video about Rebirth - Genmam - Pona Genmam - Maru Genmam...

http://www.youtube.com/watch?v=ogU4-dbxti0

Video clipping on - Earth is our Mother. Sun is our Father. We All One Family in Tamil in YouTube...


I have published one Video clipping on - Earth is our Mother. Sun is our Father. We All One Family in Tamil in YouTube...

http://www.youtube.com/watch?v=duCKNzuEclw

Video about Tree Planting in youtube...by Sugavanam Natarajan



I have published my video about tree planting in youtube... Please watch and give your feedback....

http://www.youtube.com/watch?v=9iwXKCUHQtk

Children Tamil story ABCD Kakka Kathai in YouTube...

I have published Video clipping of children-tamil story ABCD Kakka Kathai in youtube...

http://www.youtube.com/watch?v=HszWNk3oqmk

Video clipping on Insurance Business Analysis for Software and IT Business Analysts in YouTube...

I have uploaded a Video clipping on Insurance Business Analysis for Software and IT Business Analysts in YouTube...

http://www.youtube.com/watch?v=TMe3-0vZjJ0

Tamil Video - Anbe Sivam - Love is GOD Part-3

I have published Tamil Video - Anbe Sivam - Love is GOD Part-3 in YouTube...

http://www.youtube.com/watch?v=aM9LWvE3f2s

Tamil Video - Anbe Sivam - Love is GOD Part-2


I have published Tamil Video - Anbe Sivam - Love is GOD Part-2 in YouTube...
http://www.youtube.com/watch?v=_mIweGzpM6U

Please visit my YouTube - Video Channel


Please visit my YouTube - Video Channel where I publish my video clippings:

http://www.youtube.com/user/nsugavanam

Sunday, July 31, 2011

அழிக்க நினைப்பவனுக்கு அழிவு நிச்சயம்.

தினை விதைப்பவன் தினை அறுப்பான். 
வினை விதைப்பவன் வினை அறுப்பான். 
தீவிரவாதிகள் தீவிரமாக கொல்லப்படுவார்கள்.
கத்தி எடுப்பவன் கத்தியால் அழிவான். 
துப்பாக்கி எடுப்பவன் துப்பாக்கியால் அழிவான்.
வெடிகுண்டு வீசுபவன் வெடிகுண்டால் அழிவான்.
கடைசியில் சொன்ன மூன்று ஆயுதங்கள் உபயோகிப்பவர்கள் மாறி மாறியும் அழியலாம். 
அழிக்க நினைப்பவனுக்கு அழிவு நிச்சயம். 

Saturday, July 30, 2011

ஆகா! இயற்கைதான் எவ்வளவு அழகான சுழற்சியை உருவாக்கியுள்ளது !!


நான் காலை வேளையில் ஒரு புத்தகத்தைப் படித்துக்கொண்டு எங்கள் வீட்டு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருந்தேன். ஆடிப் பிறக்கும் சமயமாதலால் ஈக்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. எங்கள் வீட்டுத் தரையிலும் நிறைய ஈக்கள் மொய்த்துக் கொண்டிருந்தன. படித்தக் கொண்டிருந்த என்னுடைய கவனம் ஈக்களின் மேல் திரும்பியது.  அவை என் முகத்திலும் முதுகிலும் மொய்த்து படிக்க விடாமல் வம்பு செய்து கொண்டிருந்தன.  ஏன் இப்படி இவை ஆனி, ஆடி மாதங்களில் மட்டும் அதிகம் தோன்றி வம்பு செய்கின்றன என்று சிந்தனை செய்து கொண்டிருந்தேன். அப்போது எங்கள் வீட்டுத் தரையில் பினாயில் கலந்த நீரைத் தெளித்து ஈயை ஓரளவுக்கு விரட்டலாம் என்று நாற்காலியில் இருந்து எழுந்திருக்க நினைத்தேன்.  அப்போது தரையில் ஒரு பல்லி கப்பென்று பாய்ந்து ஒரு ஈயைப் பிடித்துத் தின்று கொண்டிருந்தது.  


அதைப் பார்த்தவுடன் என் எண்ணம் இறைவனுடைய படைப்பிலும் இயற்கைச் சுழற்சியிலும் ஓட ஆரம்பித்தது. ஆகா! இயற்கைதான் எவ்வளவு அழகான சுழற்சியை உருவாக்கியுள்ளது குப்பை மேட்டிலே இந்த ஈக்கள் பிறக்கின்றன. அவை குப்பைக் கூளங்களையும் தின்பண்டங்களையும் மொய்த்து உயிர் வாழ்கின்றன.  அதை இந்த பல்லி பிடித்துத் தின்கிறது.  இந்தப் பல்லியை ஒரு கோழி பார்த்து விட்டால் லபக்கென்று கொத்தித் தின்று விடுகிறது.  அந்தக் கோழியை மனிதன் தின்று விடுகிறான்.  அந்த மனிதன் செத்து மடிந்தால், அவனுடைய அழுகிய பிணத்தில் இந்த ஈக்கள் தோன்றுகின்றன. 


இப்படி சிந்தித்துக் கொண்டே மீண்டும் தரையைப் பார்த்த போது இந்தப் பல்லி மட்டுமில்லாமல் மற்றுமொரு சிறு சிலந்திப் பூச்சியும் ஈக்களை பிடிக்க முயன்று கொண்டிருந்தது.  அதைப் பார்க்க எனக்கு வேடிக்கையாய் இருந்தது.  அந்தப் பல்லிக்காவது ஓரிரண்டு ஈக்கள் தின்னக் கிடைத்தது.  ஆனால் இந்த சிலந்திப் பூச்சிக்கு ஒரு ஈ கூட சிக்கவில்லை.  ஆனால் அப்படியும் அது தொடர்ந்து முயன்று கொண்டிருந்தது.  அது ஈயைப் பிடிக்க எடுக்கும் வழியினைப் பார்த்தால் மிகவும் சிறப்பாக இருந்தது. 
சிலந்திபூச்சி ஒரு ஈயை பிடிக்க எண்ணிவிட்டால் உடனடியாக மெதுவாக பதுங்கி பதுங்கி மிக மெதுவாக அந்த ஈயை நெருங்குகிறது. அந்த ஈயும் தரையை மொய்க்கும் கவனத்தில் இந்த சிலந்தியை கவனிப்பதில்லை. இந்த சிலந்தியும் மிக நெருங்கி இரண்டு அல்லது மூன்று செ.மீ. இடைவெளியே உள்ள சமயத்தில் கபீரென்று ஒரே பாய்ச்சல் கண்ணிமைக்கும் நேரத்தில் பாய்ந்தது.  ஆனால் , பாவம்  அந்த சிலந்திக்கு அந்த ஈ கிடைக்கவில்லை. அந்த ஈயும் கண்ணிமைக்கும் நேரத்தில் சர்ரென்று பறந்து விட்டது.  இதைப் பார்த்துக் கொண்டிருந்த எனக்கு ஏமாற்றம் தாங்கவில்லை.  ஓடிப் போய் நாலைந்து ஈயை பட் பட்டென்று அடித்துப் போட வேண்டும் போல துடிப்பு எழுந்தது.  அனால் அப்படிச் செய்தால் எங்கே அந்தச் சிலந்தி ஓடி விடுமோ என்று நான் நாற்காலியை விட்டு எழவில்லை. அந்த சிலந்தி எப்பொழுதுதான் ஒரு ஈயை பிடிக்கிறது என்று பாப்போம் என்று எண்ணிக்கொண்டு நான் உறுதியாக நாற்காலியை விட்டு அசையாமல் உட்கார்ந்திருந்தேன். அனால் அந்தச் சிலந்தி தன் பொறுமையை இழக்காமல் அமைதியாக அடுத்த ஈயை நோக்கி குறி செலுத்தி மெதுவாக நகர்ந்தது.  இப்பொழுதும் மேலே சொன்ன அனைத்துப் பொறுமையோடும் நான் பார்த்துக் கொண்டிருந்தேன்.  

இப்போதும் மிக நெருங்கிய தூரத்தில் ஈ மீது சிலந்தி பாய்ந்தது. புத்திசாலி ஈ பறந்தது. முட்டாள் சிலந்தி ஏமாந்தது. அனால் சிலந்தி தன்னம்பிக்கையை இழக்கவில்லை. அடுத்த ஈயை பிடிக்க தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டு நகர்ந்து கொண்டிருந்தது. என் மனதுள் மாபெரும் ஆச்சரியமும் சிந்தனையும் அலை மோதின. மனதில் பல எண்ணங்கள் அலை பாய்ந்தன. ஆகா! இந்தச் சிலந்திக்கு இருக்கும் பொறுமையும் தோல்வியைத் தாங்கும் சகிப்புத்தன்மையும் மனிதரில் பலருக்கு இல்லையே! இருந்திருந்தால் நிச்சயம் என்றாவது ஒரு நாள் வெற்றி பெறுவர். அனால் பலர் தங்கள் அடைய நினைத்தவற்றை ஒரே ஒரு முறை முயன்று அடைய முடியாவிட்டால் ஓர் ஓரத்தில் ஒடுங்கி விடுகிறார்கள். தோல்வியைத் தாங்கும் பலமில்லாமல் தற்கொலை செய்து கொள்ள ஓடுகின்றனர். வாழ்க்கையின் விரக்தி எல்லையை எட்டி விட்டதாக நினைத்து மூலையில் முடங்கி விடுகிறார்களே! அவர்கள் அனைவரும் இது போல ஒரே ஒரு ஈயைப் பிடிக்க ஒரு சிலந்தி படும் பாட்டைப் பார்த்தால் நிச்சயம் வாழ்க்கையில் தன்னம்பிக்கையை இழக்க மாட்டார்கள் என்று பலவிதமாக சிந்தித்தவாறு மீண்டும் சிலந்தி ஈ பிடிக்கும் நிகழ்ச்சியை தொடர்ந்து கவனிக்கலானேன். இவ்வாறாக அரை மணி நேரம் வரை சிலந்தி ஈ பிடிக்கும் முயற்சியை பார்த்துக் கொண்டு பலவாறாக சிந்தித்துக் கொண்டிருந்தேன்.

நாம் நமது சிந்தனைகளை அனைவருக்கும் உபயோகப்படும் விதத்தில் எழுதி வைக்க வேண்டும்.


நாம் நமது சிந்தனைகளை அனைவருக்கும் உபயோகப்படும் விதத்தில் எழுதி வைக்க வேண்டும். 

Thursday, July 21, 2011

பசித்துப் புசிப்பவன் நீண்ட நாள் உயிர் வாழ்வான்...


நாம் எந்த திசையில் உட்கார்ந்து சாப்பிட்டாலும் பசியாறும். நன்கு வயிறு பசித்த பின்பே உணவருந்த வேண்டும். பசித்துப் புசிப்பவன் நீண்ட நாள் உயிர் வாழ்வான்...

Tuesday, July 19, 2011

போலி சாமியார்கள்

போலி சாமியார்கள்

இந்து மதத்தில் அதன் உயர்ந்த கொள்கைகளை பரப்புவதற்காக அந்தக் காலத்தில் பல துறவிகள் தோன்றினர். இத்தைகைய துறவிகள் தங்கள் வாழ்வில் அனைத்தையும் துறந்து, கவி உடை உடுத்து பல நல்ல சிந்தனைகளையும், உயர்ந்த சிந்தனைகளையும் பரப்பி வந்தனர். இத்தைகைய துறவிகள் உலகில் நடக்கும் பல விஷயங்களை அறிவு பூர்வமாக ஆராய்ந்து, பல உண்மைகளை கண்டுபிடித்து அவற்றை மக்களுக்கு எடுத்து உணர்த்தினார்கள். இத்தைகைய துறவிகள் மக்களின் சிந்தனைகளைத தூண்டி மனித சிந்தனைகளை நல்வழியில் செலுத்தும் வழிமுறைகளைக் கண்டுபிடித்தார்கள். இவர்கள் மக்களை சிந்தித்து செயல்படவும் மற்றவர்கள் கூறும் கருத்துக்களில் உண்மையான தத்துவங்களை கண்டுபிடித்து ஏற்றுக்கொள்ளவும் வழிமுறைகளைக் கற்றுக் கொடுத்தார்கள். பிறகு இவர்களைப் போலவே உடை உடுத்துக்கொண்டு உண்மையான ஞானம் இல்லாமல் பல போலித் துறவிகள் தோன்றி உலவி வருகிறார்கள். நமது அறிவுத் திறனால் இத்தைகைய போலித் துறவிகளைக் கண்டு பிடித்து, அறிய வேண்டும்.

வளரும் இந்தியா

வளரும் இந்தியா

உலகிலேயே மிக அதிகமான மக்கள் தொகை கொண்ட இரண்டாவது நாடு இந்தியாதான். தற்போது 120 கோடியை நெருங்கிக் கொண்டிருக்கும் நமது நாட்டில் மனித சக்தி மிக எளிதில் கிடைக்கும் சக்தியாக விளங்கி வருகிறது. இவ்வளவு கோடிகணக்கான மக்கள் நம் நாட்டில் இருப்பதால் மாபெரும் சாதனைகளை படைக்க முடியும். நமது மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் (50 %- கிட்டத்தட்ட 60 கோடி மக்கள்) தினமும் நேர்மையாக உழைக்கிறார்கள். இந்த 60 கோடிக்கும் மேற்பட்ட மனிதர்கள் ஏதாவது ஒரு வழியில் இந்தியாவின் முன்னேற்றத்த்திற்கு உதவி வருகிறார்கள். பல உழைப்பாளிகள், பல தொழிலாளர்கள் அவர்கள் அறியாமலேயே இந்தியாவின் வளர்ச்சியில் பங்கு பெற்று இருக்கிறார்கள். இன்னும் சில ஆண்டுகளில் இந்தியா உலகில் மாபெரும் முக்கிய இடத்தை பெறப் போகிறது.

எந்திரன் ஜோக்ஸ் - 2

எந்திரன் ஜோக்ஸ் - 2

அ.ஆ.திமுக தேர்தல் அறிக்கை:
நாங்கள் ஆட்சிக்கு வந்தா, வீட்டுக்கு ஒரு ரோபோட் கொடுப்போம்.

கடவுள் இருக்கிறாரா? இல்லையா?

கடவுள் இருக்கிறாரா? இல்லையா?

நீங்கள் கடவுள் இருக்கிறார் என்று நம்பினால் கடவுள் இருக்கிறாரர். நீங்கள் கடவுள் இல்லை என்று நம்பினால் கடவுள் இல்லை.

கடவுள் தேவையா? இல்லையா?

கடவுள் தேவையா? இல்லையா?

நீங்கள் கடவுள் இருக்கிறார் என்று நம்பினால் உங்களுக்கு கடவுள் தேவை. நீங்கள் கடவுள் இல்லை என்று நம்பினால் உங்களுக்கு கடவுள் தேவை இல்லை. "கடவுள் இல்லை" என்று வாதிட்டு அதை நிலை நாட்டும் அளவிற்கு உங்களுக்கு வாதத் திறன் இருந்தால் நீங்கள் பலரை நாத்திகர்களாக மாற்ற முடியும். "கடவுள் இருக்கிறார் " என்று வாதிட்டு அதை நிலை நாட்டும் அளவிற்கு உங்களுக்கு வாதத் திறன் இருந்தால் நீங்கள் பலரை ஆத்திகர்களாக மாற்ற முடியும். ஆத்திகர்கள் "கடவுள் இருக்கிறார் " என்று ஆணித்தரமாக நம்புகிறார்கள். நாத்திகர்கள் "கடவுள் இல்லை " என்று ஆணித்தரமாக நம்புகிறார்கள்.

அகில உலக வியாபாரங்கள்

அகில உலக வியாபாரங்கள்


இன்று உலகின் ஒரு பகுதியில் உற்பத்தியாகும் பொருட்களை உலகம் முழுவதும் உபயோகிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. ஜப்பானில் உற்பத்தியாகும் டேப் ரிகார்டர்கள், டீ.வீக்கள், ரேடியோக்கள் உலகம் முழுவதும் படு அமோகமாக விற்பனையாகின்றன. இதே போல் ஒவ்வொரு நாட்டிலும் உற்பத்தியாகும் பல பொருட்கள் ஏற்றுமதி செய்யபடுகின்றன. அதே போல் ஒவ்வொரு நாடும் பல பொருட்களை வேற்று நாடுகளிலிருந்து இறக்குமதி செய்கின்றன. ஆகவே உலகம் முழுவதும் ஒரு மாபெரும் குடும்பமாக வாழ்ந்து வருகிறோம். இப்படி இருக்கும்போது நாம் மற்ற நாடுகளோடு சண்டை போடுவதோ பகையை வளர்த்துக் கொள்வதோ அர்த்தமற்றதாகும். அதே போல் மற்ற நாடுகளோடும் நம்மோடு ஒற்றுமையாக வாழ்வதே உலகிற்கு நல்லதாகும். இதை உணர்ந்ததாலேயே தற்போது பெரிய வல்லரசு நாடுகளெல்லாம் இணைந்து, பகையை மறந்து, நட்பை வளர்த்து வருகின்றன. உலகில் நாளுக்கு நாள் அமைதியும் ஒற்றுமையும் ஓங்கி வருகிறது.

என் இனிய கிரமத்து மக்களுக்கு: 4

என் இனிய கிரமத்து மக்களுக்கு: 4

உங்கள்கிராமங்களில்நடைபெறும்பட்டுவளர்ப்புத்தொழிலால்தான்இங்கேபட்டணத்தில்பல பணக்காரப்பெண்கள்பகட்டாக பட்டுப் புடவைகளை பட்டணத்தில்அணிந்து வீதிகளிலே நகர்வலம் வர முடிகிறது. நீங்கள் அங்கே பாடுபட்டு பட்டுப்புழுக்களை வளர்த்து, அந்தப்புழுக்களின் மேலுள்ள இரக்கத்தால் மல்பெரிச்செடிகளை வளர்த்து, அதன் இலைகளை நறுக்கி, பட்டுப்புழுக்களுக்கு உணவாக அளித்து, பட்டுப்புழுக்களை வளரச் செய்து,அவைபட்டு கூடுகள் கட்டியபிறகு, பட்டுநூலை பிரித்தெடுத்து, ஆடைபல வழிகளில் பதம் செய்து, பட்டுநூலாக்கி. அவற்றை சாயத்தில் தோய்த்து, பல வண்ணங்களில் தறியிலிட்டு, பல டிசைன்களில் பட்டுப்புடவைகளாக மாற்றி, அவற்றை பத்திரமாக பட்டணங்களுக்கு அனுப்பி வைக்கிறீர்கள். பட்டுப் புடவைகளை உற்பத்திச் செய்து பட்டுப் போன உங்கள் கைகளுக்கு கோடானு கோடி நன்றி! நீங்களும் பட்டுப் புடவை அணிந்து மகிழும் பசுமையான நாள் என்று வரும்?

என் இனிய கிரமத்து மக்களுக்கு: 3

என் இனிய கிரமத்து மக்களுக்கு: 3

உங்கள் கிராமங்கள் உற்பத்தியாகும் பருத்தியால்தான் இங்கே பல ஏழைகளின் மானம் எளிதாய் காப்பாற்றப்படுகிறது நீங்கள் பாடுபட்டு பருத்தி பயிர் செய்து, கஷ்டப்பட்டு பருத்திக் காயில் கொட்டைகளைப் பிரித்து எடுத்து, பஞ்சிலிருந்து நூலாக நூற்று, உங்கள் கைத்தறிகளில் எளிய துணிகளாக நெய்து, இங்கே நகரில் குறைந்த விலையில் வாங்க சிறந்த துணியாக உள்ளன. சிலர் இங்கே பருத்தித் துணிகளை விலை குறைவு என்பதற்காகவும், வெயிலுக்காகவும்,சிலர் அழகுக்காகவும், ஆடம்பரத்திற்கும் வாங்குகிறார்கள். எங்களுக்காக பாடுபட்டு பருத்தித் துணிகளை நெய்து தரும் உங்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நண்பர்களே! உயர்ந்த உள்ளம் படைத்தவர்கள் மற்றவர்களை ஏவி ஒரு காரியம் செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டால், மற்றவர்களை அன்புடனும், அடக்கத்துடனும் வேண்டி அவர்களால் அக்காரியம் செய்யப்படாத நேரத்திலும் சிறிதும் கோபப்படாமல் தாங்களே செய்து முடிப்பார்கள்.

Sunday, July 17, 2011

என் இனிய கிராமத்து நண்பர்களுக்கு- 2

என் இனிய கிராமத்து நண்பர்களுக்கு- 2  

உங்கள் கிராமங்களில் உற்பத்தியாகும் கரும்பினால்தான் இங்கே நகரத்தில் இனிமையான காலை காப்பி குடிக்க முடிகிறது.  நீங்கள் அங்கே பாடுபட்டு, கரும்பு பயிர் செய்து, நல்ல உரமிட்டு, பூச்சிகள் தாக்காமல் கரும்பைக் காப்பாற்றி, அறுவடை செய்து, திருட்டு போகாமல் பத்திரமாய் பாதுகாத்து, கரும்பாலைகளுக்கு அனுப்பி, அங்கே அவை சர்க்கரையாக உருப்பெற்று, இங்கே பல கடைகளில் இனிப்பு வகைகளாய் அழகாய் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. பாடுபட்டு, கரும்பு பயிர் செய்து, எங்களுக்கு இனிமையை வழங்கும் உங்களுக்கு எனது ன் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.  நண்பர்களே!  இங்கே நகரத்தில் சிறிது சிறிதாக பல தொழில்கள் உருவாகி வருகின்றன.  ஆனாலும் கிராம மக்களாகிய உங்களது அன்பும், பாசமும் உழைப்பும் எங்களை சந்தோஷபடுத்துகின்றன.  அதிக ஆடம்பரமில்லாத கிராம வாழ்க்கை எங்களுக்கு மனதுக்கு அமைதியைக் கொடுக்கிறது.  எங்கள் நகரத்து மக்களின் அன்பு என்றைக்கும் உங்களுக்கும்  உண்டு. 

என் இனிய கிராமத்து நண்பர்களுக்கு - 1

என் இனிய கிராமத்து நண்பர்களுக்கு  - 1

உங்கள் கிராமங்களில் உற்பத்தியாகும் நெல்லினால்தான் எங்கள் நகரத்து மக்களின் பசியாறுகிறது.  நீங்கள் அங்கே சேற்றில் இறங்கி, நாற்று நட்டு, களை பிடுங்கி, உரம் போட்டு, மோட்டார் பம்ப் செட் மூலம் நீர் பாய்ச்சி, நெல் விளைவித்து, அரிசியாக்கி எங்களுக்குக் கொடுப்பதால்தான் நாங்கள் எங்கள் சொகுசான வேலைகளைச் செய்து கொண்டு சௌகரியமாக இருக்க முடிகிறது.  உங்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.  நண்பர்களே! இவ்வுலகில் உயர்ந்த நிலையில் இருப்பவர்கள் மற்றவர்களுக்கு உற்சாகமான வார்த்தைகளைக் கூறி மற்றவர்கள் செய்யும் காரியங்களுக்கு சிறந்த ஆலோசனைகளை வழங்கி இனிய சொற்களை உபயோகித்துப் பேசுகிறார்கள்.  அனால் தாழ்ந்த நிலையில் உள்ளவர்கள் மற்றவர்களை குறை கூறி, இழித்துப் பேசி, வன்மையான சொற்களைப் பயன்படுத்தி மற்றவர்களின் மனதைப் புண்படுத்துகிறார்கள். 

எலிகளும் அணில்களும்

எலிகளும் அணில்களும்

எலிகள் நமது வயல்களில் விளையும் தானியங்களைத் தின்று விடுகிறது. வீடுகளில் உள்ள அரிசி, காய்கறிகள்  மற்றும் பல உண்ணும் பொருட்களைத் தின்று விடுகிறது.  வீட்டில் உள்ள பிளாஸ்டிக் கூடைகள், எலெக்ட்ரிக் ஒயர்கள் போன்ற பல பொருட்களைக் கடித்து நாசம் பண்ணி விடுகின்றன. ஆகவே பல நேரங்களில் நமது இத்தகைய நஷ்டங்களில் இருந்து தப்பிக்க எலிகளைக் கொல்ல வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.  எலிகள் பல அசுத்தமான இடங்களிலும், சாக்கடைகளிலும் சென்று விட்டு அப்படியே வீடுகளிலும் திரிவதால் இவற்றின் மூலம் பலவித நோய் கிருமிகள் பரவ வாய்ப்புள்ளது.  ஆகவே நமது நன்மைக்காக பலர் எலிகளை எலிப் பொறி வைத்துப் பிடித்துக் கொன்று விடுகிறார்கள்.  அதே போல் அணில்களும் தோட்டங்களில் உள்ள தென்னை மரம், முருங்கை  மரம், மாமரம் போன்றவற்றில் பூக்களையும், தென்னங் குருத்துக்களையும் கடித்துத் தின்று விடுவதால் விளைச்சல் குறைவதால் விவசாயிகள் பலர் அணில்களைக் கொன்று அவர்கள் தோட்டங்களைக்  காப்பாற்ற வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. 

பல்லிகள், ஓணான்கள்

பல்லிகள், ஓணான்கள்

உங்கள் வீட்டு சுவர்களில் மின்விளக்குகளின் அருகே, மற்றும் பல இடங்களில் பல்லிகள் இருப்பதைக் காணலாம். இப்பல்லிகளை கொல்லக்கூடாது.  ஏனென்றால் அவை வீடுகளில் உள்ள ஈ, கொசு, கரப்பான்பூச்சி, தேள்குட்டி, சிறிய வண்டுகள் இது போன்று பல தொல்லை தரும் பூச்சிகளை அழித்து நமக்கு நன்மைகளைச் செய்து வருகிறது.  நம்மை இது போன்று பலவித பூச்சிகளிடமிருந்து காப்பாற்றுவதால் பல்லி நமது நண்பனாகும்.  இதே போல் உங்கள் வீட்டுக் கொல்லையிலும் தோட்டங்களிலும் ஓணான்கள் இருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.   இந்த ஓணான்களைக் கொல்லக் கூடாது. ஏனென்றால் அவை நமது தோட்டங்களில் உள்ள சிறு பூச்சிகள் எறும்புகள், வண்டுகள், கொசுக்கள் போன்ற பல தொல்லை தரும் பூச்சிகளை அழித்து நமக்கு உதவுவதால் நாம் ஓணான்களைக் கொல்லக் கூடாது.  நம்மால் முடிந்தவரை மற்ற பிராணிகளையும், பறவைகளையும், பூச்சிகளையும் கொல்லாமல் தவிர்ப்பது நல்லது. 

Saturday, July 16, 2011

இயற்கையின் அங்கமாகிய மனிதன் எப்படி இயற்கையை வெல்ல முடியும்?

  1. இறைவன் எங்கும் நிறைந்திருப்பவன்.
  2. இறைவன் சர்வ வல்லமை படைத்தவன்.
  3. எத்தைகைய மனிதனாயினும் எல்லோருக்கும் ஒரே மாதிரி அருள் புரிபவன்.
  4. இறைவன் இல்லாமல் இவ்வுலகம்  இல்லை.
  5. இவ்வுலகின் இயக்கமே இறைவன்தான்.
நம் உடலில் இருக்கும் ஒவ்வொரு அணுவிற்கும் நாம்தான் இறைவன்
இப்பூமியிலுள்ள அனைத்துப் பொருள்களுக்கும் உயிரினங்களுக்கும் பூமிதான் இறைவன்
இந்த பூமிக்கு சூரியன் இறைவன்
சூரியனுக்கும் மற்ற நட்சத்திரங்களுக்கும் ஆதி மூலமான, ஒளிமயமான, ஒளிப்பிழம்புதான் இறைவன் .

இவ்வாறு மேற்கூறிய வரையறுக்கப்பட்ட விதிகளையும் மற்றும் சூரியன், பூமி, மற்ற ஜீவராசிகள் மனிதன் முதலியன தோன்றிய விதங்களைப் பார்க்கும்போது நாம் கடவுள் என்றும் இறைவன் என்றும் குறிப்பிடுவது நமக்கும் மேற்பட்ட ஒரு சக்தியைத்தான் என்பது தெரிய வருகிறது.  மனிதர்களில் பலர் இயற்கைதான் தெய்வம் என்று ஒப்புக் கொள்கிறார்கள்.  ஏனென்றால் மனிதன் எவ்வளவுதான் அறிவு வளர்ச்சியும் விஞ்ஞானம் முன்னேற்றமும் பெற்றாலும் இயற்கையை வெல்ல முடிவதில்லை.  ஆதலால் இயற்கை மனிதனை விட அதிக சக்தி வாய்ந்ததாக உள்ளது.

நாம் இயற்கை என்று எதை குறிப்பிடுகிறது?   நாம் வாழும் இந்த பூமி, அதனை சுற்றியுள்ள வாயு மண்டலம், நம் கண்ணுக்கு புலப்படும் நட்சத்திரங்கள்,  வெண்ணிலா, மற்றும் பூமியில் வாழும் உயிரினங்கள் ஆகியவை.  இப்படி பார்க்கும்போது மனிதனும் இயற்கையின் ஒரு அங்கமே.  ஆகையால் இயற்கையின் அங்கமாகிய மனிதன் எப்படி இயற்கையை வெல்ல முடியும்?

மற்றும் இந்த நட்சத்திரங்கள், கோள்கள் முதலியவை தோன்றிய விடத்தைப் பற்றி பலவிதமான கருத்துக்கள் நிலவினாலும் எல்லோராலும் பெரும்பாலும் ஒப்புக் கொள்ளப்பட்ட  விஞ்ஞானக் கொள்கை பிக்-பாங் (Big-Bang)  கோட்பாடு என்பதாகும்.

இந்த கோட்பாட்டின்படி  நட்சத்திரங்கள், சூரியன், பூமி முதலியவை எல்லாம் தோன்றுவதற்கு முன்னால் எல்லாம் சேர்ந்து ஒட்டு மொத்தமாக ஒரு பெரிய ஒலிகுழம்பாக பேரொளிக் கோட்டமாக இருந்தது எனவும், அது வெடித்துச் சிதறியதால் ஏற்பட்ட சிறு சிறு துகள்களும் துண்டுகளும் பல்வேறு திசையில் பரவிச் சென்று, அவை நாட்களாக நாட்களாக மேலும் எட்ட விலகிச் சென்று பல்வேறு  நட்சதிரன்களாக உள்ளன என்பதாகும்.

மனிதர்களை எடுத்துக் கொண்டால் நல்ல ஆரோக்ய உடம்பையும், வலிமையான உடம்பையும் உள்ளவர்கள் அதிக நாட்கள் வாழ்கிறார்கள். அதே போல்தான் மற்ற பொருட்களுக்கும்.  உதாரணத்திற்கு சூரியன் பூமியை விட அதிக வலிமை வாய்ந்தது.   ஆகையால் சூரியன் பூமியை விட அதிக நாட்கள் வாழும். முதலில் அழியப் போவது பூமிதான்.  பிறகுதான் சூரியன் இறக்கும் .  அதாவது அழியும். இவ்வாறு இறப்பும், பிறப்பும், மாற்றமும் மனிதனுக்கு மட்டுமல்ல! இந்த சுழற்சி இந்த பிரபஞ்சத்தில் அனைத்துப் பொருட்களுக்கும்  உண்டு. இந்த சுழற்சியை மாற்றத்தை யாராலும் நிறுத்த முடியாது.

இப்படி உலகில் உள்ள அனைத்துப் பொருளின் தோற்றத்திற்கும் ஆதாரமான  ஒலிகற்றையாகிய ஜோதியாகிய மாபெரும் சக்திதான் பரஞ்ஜோதியவார்.  அந்த பரஞ்சோதியே நமது இறைவன்.  அந்த பரஞ்சோதியான இறைவனிடமிருந்து அனைத்தும் தோன்றின.

அந்தப் பரஞ்ஜோதியிலிருந்து தோன்றியதுதான் விண்வெளி, நட்சத்திரங்கள், சூரியன், பூமி, சந்திரன் மற்றும் அனைத்து கிரகங்களும் ஆகும்.  இந்து மதத்தில் நம்பப்படும் மேலுலகம், பாதாள உலகம் உண்மையில் இருக்குமானால் அவையனைத்தும் இம்மாபெரும் ஒளிப் பிழம்பிலிருந்து தோன்றியதுதான். அந்தப் பரஞ்சோதியான ஒளிப் பிழம்பிற்கு ஆதியும் இல்லை.  அந்தமும் இல்லை.  ஆரம்பமும் இல்லை. முடிவும் இல்லை. அவற்றில் ஏற்படும் இம்மாற்றமெல்லாம் நம் மாயக் கண்களுக்குத் தோன்றும் மாற்றம்தான்.  இவ்வுலகில் வாழும் மனிதன் அறிவுக்கு எட்டியதெல்லாம் இவ்வளவுதான்.  இந்தப் பரஞ்சோதியைப் பற்றி உலகில் பல்வேறு பகுதி மக்கள் பல்வேறாக உணர்ந்தனர்.  அவற்றின் அடிப்படையில் பல்வேறு மதங்கள் தோன்றின.  இந்த ஒளிப் பிழம்பான இறைவனின் தூதர்களாக கருதப்படுபவர்கள்தான் நாம் இன்றைய உலகில் நாம் காணும் மதத் தலைவர்கள் ஆவர்.  இவ்வுலகில் வாழ்ந்த ஏசு, ஆதி சங்கரர், புத்தர், மகாவீரர்  போன்ற மாபெரும் மகான்கள் இந்த ஒளிக் கடவுளைத்தான் மக்களுக்குப் பல்வேறு விதத்தில் வெளிப்படுத்தி உள்ளனர்.  இப்படி உலக மகப் பெரியோர்கள் அனைவருமே இவ்விறைவனைப் பற்றி அவர்களுடைய விசாலமான அறிவுத் திறனாலும், ஞானத்தாலும் உணர்ந்துள்ளார்கள். இவ்வாறு உணரும் உணர்வுதான் முக்தி நிலையை அடைவதாகும்.  ஆனாலும் ஆதியில் ஒன்றான ஒரே கடவுளை, ஒரே இறைவனை, மாபெரும் ஜோதியை உலக மக்கள் தங்களது அறியாமையால்  அறிந்து கொள்ளாமல் வீண் சடங்குகளிலும், சம்பிரதாயங்களிலும் மூழ்கி ஒருவொருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்கின்றனர்.  இவ்வாறு உலகிலுள்ள அனைத்து மதப் பெரியோர்களுமே மூடப் பழக்கங்களையும், வீண் சடங்குகளையும், தேவையற்ற சடங்குகளையும் எதிர்த்துள்ளனர். இவ்வுண்மை ஏசு, நபிகள் நாயகம், ஆதி சங்கரர், புத்தர், மகாவீர், ராமகிருஷ்ணர், விவேகனந்தர் ஆகிய யாருடைய வாழ்க்கை வரலாற்றையும், அவர்களின் அறிவுரைகளையும், இறைவைனைப் பற்றி அவர்கள் சொன்னவற்றைப் படித்தால் விளங்கும்.  ஆகையால் மக்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவராயினும்  அந்தந்த மத வழக்கப்படி இறைவனை வழிபட்டு, வீண் சடங்குகளையும்,  மூடப் பழக்கங்களையும், தவிர்த்து எல்லையில்லாத ஒளிக்கடலான இறைவனை யாரும் அடைய முடியும். அறிய முடியும்.

இயற்கையின் அங்கமாகிய மனிதன் எப்படி இயற்கையை வெல்ல முடியும்?

  1. இறைவன் எங்கும் நிறைந்திருப்பவன்.
  2. இறைவன் சர்வ வல்லமை படைத்தவன்.
  3. எத்தைகைய மனிதனாயினும் எல்லோருக்கும் ஒரே மாதிரி அருள் புரிபவன்.
  4. இறைவன் இல்லாமல் இவ்வுலகம்  இல்லை.
  5. இவ்வுலகின் இயக்கமே இறைவன்தான்.
நம் உடலில் இருக்கும் ஒவ்வொரு அணுவிற்கும் நாம்தான் இறைவன் 
இப்பூமியிலுள்ள அனைத்துப் பொருள்களுக்கும் உயிரினங்களுக்கும் பூமிதான் இறைவன் 
இந்த பூமிக்கு சூரியன் இறைவன் 
சூரியனுக்கும் மற்ற நட்சத்திரங்களுக்கும் ஆதி மூலமான, ஒளிமயமான, ஒளிப்பிழம்புதான் இறைவன் .

இவ்வாறு மேற்கூறிய வரையறுக்கப்பட்ட விதிகளையும் மற்றும் சூரியன், பூமி, மற்ற ஜீவராசிகள் மனிதன் முதலியன தோன்றிய விதங்களைப் பார்க்கும்போது நாம் கடவுள் என்றும் இறைவன் என்றும் குறிப்பிடுவது நமக்கும் மேற்பட்ட ஒரு சக்தியைத்தான் என்பது தெரிய வருகிறது.  மனிதர்களில் பலர் இயற்கைதான் தெய்வம் என்று ஒப்புக் கொள்கிறார்கள்.  ஏனென்றால் மனிதன் எவ்வளவுதான் அறிவு வளர்ச்சியும் விஞ்ஞானம் முன்னேற்றமும் பெற்றாலும் இயற்கையை வெல்ல முடிவதில்லை.  ஆதலால் இயற்கை மனிதனை விட அதிக சக்தி வாய்ந்ததாக உள்ளது. 

நாம் இயற்கை என்று எதை குறிப்பிடுகிறது?   நாம் வாழும் இந்த பூமி, அதனை சுற்றியுள்ள வாயு மண்டலம், நம் கண்ணுக்கு புலப்படும் நட்சத்திரங்கள்,  வெண்ணிலா, மற்றும் பூமியில் வாழும் உயிரினங்கள் ஆகியவை.  இப்படி பார்க்கும்போது மனிதனும் இயற்கையின் ஒரு அங்கமே.  ஆகையால் இயற்கையின் அங்கமாகிய மனிதன் எப்படி இயற்கையை வெல்ல முடியும்?

மற்றும் இந்த நட்சத்திரங்கள், கோள்கள் முதலியவை தோன்றிய விடத்தைப் பற்றி பலவிதமான கருத்துக்கள் நிலவினாலும் எல்லோராலும் பெரும்பாலும் ஒப்புக் கொள்ளப்பட்ட  விஞ்ஞானக் கொள்கை பிக்-பாங் (பிக்-பாங்)  கோட்பாடு என்பதாகும்.

இந்த கோட்பாட்டின்படி  நட்சத்திரங்கள், சூரியன், பூமி முதலியவை எல்லாம் தோன்றுவதற்கு முன்னால் எல்லாம் சேர்ந்து ஒட்டு மொத்தமாக ஒரு பெரிய ஒலிகுழம்பாக பேரொளிக் கோட்டமாக இருந்தது எனவும், அது வெடித்துச் சிதறியதால் ஏற்பட்ட சிறு சிறு துகள்களும் துண்டுகளும் பல்வேறு திசையில் பரவிச் சென்று, அவை நாட்களாக நாட்களாக மேலும் எட்ட விலகிச் சென்று பல்வேறு  நட்சதிரன்களாக உள்ளன என்பதாகும். 

பத்மநாபா கோயில் பொக்கிஷத்தை பாதுகாப்பது எப்படி?

பத்மநாபா கோயில் பொக்கிஷத்தை பாதுகாப்பது எப்படி?

இந்து மதம் உலகின் தலைசிறந்த அமைதியான மதங்களில் ஒன்றாகும்.  இந்து மதம் இனிமையும் அன்பும் பரப்பும் மதமாகும்.  இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் அமைதி வழியில் ஆக்கப் பணியில் ஈடுபடும் தன்மையுடைவர்கள்.   இது போல் ஆக்கப் பணியில் ஈட்டும் செல்வதை இந்துக்கள் அவர்களது கோயில்களுக்கு அன்பளிப்பாக காணிக்கையாக செலுத்துவது வழக்கம்.  இவ்வாறு சேர்ந்த பொற்காசுகளையும் நகைகளையும் கோயில் செலவிற்கு தேவைப்பட்டால் உபயோகித்துக் கொள்ள மன்னர்களாலும் மக்களாலும் கொடுக்கபடுவது வழக்கம்.  இவ்வாறு சேர்ந்த சில இந்துக்கோயில்களின் கோடிக்கணக்கான பெறுமானமுள்ள தங்க நகைகளும், காசுகளும் சில மன்னர்களால் முகலாய காலத்தில் கொள்ளை அடிக்கப்பட்டன.  அவ்வாறு சில கொடுங்கோலர்களால் கொள்ளை அடிக்கபட்டதிலிருந்து தப்பித்த சில கோயில்களில் ஒன்றுதான் திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபா சுவாமி கோவில்.  சமிபத்தில் (ஜூலை 2011 ) அங்கு பெரும் பொக்கிஷம் அந்தக் கோவிலின் நிலவறையில்  கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.  இதன் மதிப்பு சுமார் ரூபாய் ஒரு லக்ஷம் கோடி இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.  இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டவுடன் மிகப் பெரிய கோடிஸ்வரராக மாறிவிட்ட பத்மநாப சுவாமியின் பொக்கிஷத்தையும் பத்மநாப சுவாமிகளையும் காப்பாற்ற வேண்டியது அனைத்து இந்துக்களின் கடமையாகும்.  

பத்மநாபா சுவாமி கோயிலுக்கு வரக்கூடிய ஆபத்துகள் என்ன?

  1. தற்போது இந்தியாவில் பலரிடமும் உழைக்காமல் பணம் சம்பாதிக்க விரும்பும் சோம்பேறித்தனம் வளர்ந்து விட்டது.
  2. தற்போது உலகில் பணப்பேராசை பிடித்து அலைபவர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது.
  3. மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை - இது மூன்றுமே பல மதவாதிகளின், சில மதங்களின் நோக்கமாக மாறிவிட்டது.
  4. இதைத்தவிர திருடர்கள், கொள்ளையர்கள், புராதனப் பொருள்  கடத்துபவர்கள், சில தீய நோக்கமுள்ள அரசியல்வாதிகள்,சில கொடூர நோக்கமுள்ள மதத் தீவிரவாதிகள்,  சுயநலம், சோம்பேறித்தனம், லஞ்சம் போன்றவற்றில் ஊறிய சில அரசு ஊழியர்கள், அதிகாரிகள் போன்றவர்களும், பணம், பதவி, போக வாழ்க்கை போன்றவற்றையே நோக்கமாகக் கொண்டு வாழ்ந்து வருகிறார்கள்.
  5. இவர்கள் அனைவரது தீய கண்களும் மகா மகா பத்மநாபா கோயில் பொக்கிஷத்தை நோக்கி உள்ளது.
  6. இது தவிர சில சோம்பேறி மனிதர்களும், சமத்துவம், வறுமை ஒழிப்பு என்ற பேரில் பத்மநாபா கோயில் பொக்கிஷத்தை கபளீகரம் செய்யும் நோக்கத்தில் பேசி வருகிறார்கள்.
  7. இது போன்ற தீய நோக்கமுள்ள பலரிடமிருந்து பத்மநாப சுவாமியையும் அவரது செல்வத்தையும் பாதுகாத்து இந்து மதம் தழைத்தோங்க நாம் அனைவரும் ஒன்றுபட்டு பாடுபட வேண்டும். 


இந்து மதம் செழிக்கவும் பத்மநாபா சுவாமி செல்வம் பாதுகாக்கவும் என்ன செய்ய வேண்டும்?

பத்மநாபா சுவாமி கோவிலின் ஒட்டுமொத்த ஒரு லக்ஷம் கோடி நகைகளும் ஒரே இடத்தில இருக்கும் வரை நாம் மேல சொன்ன பல்வேறு தீய சக்திகளின் தீய மனிதர்களின் ஆபத்து உள்ளது.

ஆகவே அந்த தெய்வீக சொத்தை கீழ் காணும் முறையில் பிரித்து பாதுக்காக வேண்டும்.
  1. ஒரு லக்ஷம் கோடி பெறுமானமுள்ள  நகைகளை ஒரு லக்ஷம் பகுதிகளாக -ஒவ்வொன்றும் ஒரு கோடி மதிப்புள்ள ஒரு லக்ஷம் பொட்டலங்களாக மாற்ற வேண்டும்.  அவற்றிற்கு சரியான எண்கள் கொடுத்து அவற்றை கணக்கிட்டு ஒரு லக்ஷம் பெட்டகங்களாக மாற்றி பல வங்கிகளின் லாக்கர்களில் இந்திய முழுவதும் பிரித்து வைத்துவிட வேண்டும்.  இவ்வாறு செய்வதால் அத்தனை நகைகளையும் யாரும் திருட முடியாது.  பல வங்கிகளில் பிரித்து வைப்பதால் நாம் ஆபத்தை பங்கு போட்டுப பிரித்துக் கொள்கிறோம்.  நகைகளும் போகிஷங்களும் பத்திரமான இடத்திற்கு கொண்டு செல்லப் படுவதால்  பத்மநாபா சுவாமி கோவிலுக்கும் பெரிய ஆபத்து வரது.
  2. இதற்கு அடுத்து இந்த நகைகளிலிருந்து சிறிது பயன் அடைவது எப்படி என்று பார்க்க வேண்டும்.
  3. பத்மநாபா சுவாமி நகைகள் மிகவும் புராதனமாக இருப்பதால் அவற்றிற்கு பழம் பொருள் பொக்கிஷ மதிப்பு இன்னும் பல கோடி பெரும்.  இதனால் உலகம் முழுவதும் உள்ள பல புராதனப் பொருள் சேகரிப்பவர்கள் பல கோடி தர தயராக உள்ளனர்.  இதனால் இவர்கள் மூலமும் பத்மநாபா சுவாமியின் நகைகளுக்கு ஆபத்து வர வாய்ப்புள்ளது.
  4. இந்தப் பிரச்சினையை சரி செய்ய, தினமும் ஒரு தங்கக் காசு பத்மநாபா சுவாமி கோவில் தேவஸ்தானமே -இன்டர்நெட் மூலமாக அகில உலக புராதனப் பொருள் விரும்பிகளும் நமது பக்தக் கோடிகளுக்கும் விற்பனைக்கு அறிவிக்கலாம்.
  5. தினமும் ஒரு சவரன் - 8  கிராம் -தற்போது சுமார் ரூபாய் ௨௦      மதிப்புள்ள தங்கக் காசை ஏலத்தில் விடும்போது - இந்தக் காசுகள் சில லக்ஷம் மதிப்பிற்கு செல்ல உள்ளது. அவ்வாறு ஏலத்தில் வரும் பணத்தை ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூர் வங்கியில் பத்மநாபா சுவாமி பெயரில் ஒரு டிரஸ்ட் ஆரம்பித்து, அதில் டெபாசிட் செய்து, அந்த பிக்செட் டெபாசிட்டில் வரும் வட்டியில் தினமும் பத்மநாபா சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு சுத்தமான நெய்யினால் செய்யப்பட்ட வெண் பொங்கல், சர்க்கரை பொங்கல், நல்ல சாம்பார் சதம், தயிர் சாதம் போன்றவை தயாரித்து, நான்கு வேளையும் சுவாமிக்கு நிவேதனம் செய்து, பக்தர்களுக்கு வழங்குமாறு வேண்டிக் கொள்கிறோம்.
  6. இது போன்று, இனிய விதத்தில் கோவிலுக்கு வரும் பக்தர்களை ஆதரவு செய்வதால் பத்மநாபா சுவாமி கோவிலின் பெயரும் புகழும் மேலும் கோடி கொடியாக வளர்ந்து, ஏழை எளிய இந்துக்களின் ஆதரவைப் பெறும்.
  7. மேலும் இது போன்று வரும் சுவாமியின் வட்டிப்பணத்தில் திருப்பதி தேவஸ்தானம் போல மேலும் பல நல்ல காரியங்கள் செய்ய வேண்டும்.
  8. பத்மநாபா சுவாமி மேல்நிலைப் பள்ளி:
தினமும் ஒரு பொற்காசு விற்று வரும் பணத்தை பல அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் பிக்சட் டெபாசிட் போடும் பணத்தில் பத்மநாபா சுவாமி தேவஸ்தான டிரஸ்ட் இந்தியா முழவதும் நல்ல பள்ளிகள் ஆரம்பிக்க வேண்டும்.  முதலில் கேரளா முழுவதும் நல்ல பள்ளிகள் ஆரம்பித்து, நல்ல கல்வியும், இனிய இந்து மத போதனைகளும் சொல்லித் தரப்படவேண்டும். 

 8 ) பத்மநாபா சுவாமி மேல்நிலைப் பள்ளி:
தினமும் ஒரு பொற்காசு விற்று வரும் பணத்தைப் பல அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளில் பிக்சட் டிபாசிட் போடும் பணத்தில் பத்மநாபா சுவாமி தேவஸ்தான டிரஸ்ட் இந்திய முழுதும் நல்ல பள்ளிகள் ஆரம்பிக்க வேண்டும்.  முதலில் கேரளா முழுவதும் நல்ல பள்ளிகள் ஆரம்பித்து, நல்ல கல்வியும், இனிய இந்து மத போதனைகளும் சொல்லித் தரப்படவேண்டும். 

9 ) பத்மநாபா சுவாமி கலைக் கல்லுரி:
பத்மநாபா சுவாமி தேவஸ்தானத்தின் மூலம் ஒரு கலைக் கல்லுரி ஆரம்பித்து அதில் BA , BSC , Bcom , MA , MSC , Mcom போன்ற வகுப்புகளை நடத்தலாம்.

10 ) பத்மநாபா சுவாமி அறிவியல் தொழில்நுட்பக் கல்லுரி:
பத்மநாபா சுவாமியின் பேரில் ஒரு அறிவியல் தொழில்நுட்பக் கல்லுரி ஆரம்பித்து அதில் அனைவரும் சிறப்பாக அறிவியல் தொழில்நுட்பக் கல்வியை கற்க ஏற்பாடு செய்யலாம்.

11) பத்மநாபா சுவாமி பலகலைக்கழகம் 
பத்மநாபா சுவாமி தேவஸ்தான டிரஸ்ட் பத்மநாபா சுவாமி பெயரில் ஒரு பல்கலைக்கழகம் ஆரம்பித்து மேற்ச்சொன்ன அனைத்து கல்வி நிறுவனங்களையும் அந்த பல்கலைக்கழகக் கட்டுபாட்டில் ஆரம்பிக்கலாம்.

12 ) பத்மநாபா சுவாமி இசை நடனக் கல்லுரி:
 பத்மநாபா சுவாமி பெயரில் ஒரு இசை நடனக் கல்லுரி ஆரம்பித்து நமது இந்தியாவின் அனைத்து பாரம்பரிய இசைகளான கர்நாடக சங்கீதம் , இந்துஸ்தானி இந்துஸ்தானி சங்கீதம், நாட்டுபுறப் பாடல்கள் போன்றவற்றைப் போற்றிப் பாதுகாக்க ஏற்பாடு செய்யலாம்.  அதே போல் இந்திய நடனங்களான பாரத நாட்டியம்,கதகளி, குச்சிபிடி , ஒடிசி, கிராமிய நடனம் மற்றும் பல இந்திய நடன வகைகளை பாதுகாத்து சொல்லித் தரலாம். 

13 ) பத்மநாபா சுவாமி இந்து மத ஆராய்ச்சி மையம்: 
பத்மநாபா சுவாமி பெயரில் இந்து மத ஆராய்ச்சி மையம் ஒன்று ஆரம்பித்து, அதில் இந்து மதத்தின் அனைத்து சிறந்த சிந்தனைகள், சித்தாந்தங்கள் அனைத்தையும் அதில் சிறந்த கருத்துகளை புத்தகங்களாக வெளியிட்டு இந்து மதத்தை சிறப்பிக்க வேண்டும். 

14 ) பத்மநாபா சுவாமி இந்து ஆலயங்களின் கூட்டமைப்பு:
பத்மநாபா சுவாமி பெயரில் இந்தியாவில் உள்ள அனைத்து இந்து ஆலயங்களின் கூட்டமைப்பு ஒன்று உருவாக்கி அதில் அனைத்து இந்துக்களும் ஒன்றிணைந்து, அனைத்து இந்து ஆலயங்களிலும் அனைத்து பணிகளும் சிறப்பாக நடக்க பாடுபட வேண்டும்.  அனைத்து இந்து ஆலயங்களும் சிறப்பாகத் திகழ பத்மநாபா சுவாமி இந்து அறகட்டளை உதவ வேண்டும்.


http://www.facebook.com/note.php?note_id=148811985194682 

சுயமாக ஆரம்பிக்கக்கூடிய அதிக முதலீடு தேவை இல்லாத சுய தொழில்கள்

  • சுயமாக ஆரம்பிக்கக்கூடிய அதிக முதலீடு தேவை இல்லாத சுய தொழில்கள்

    • டீ கடை வைத்தல்
    • வெற்றிலை, பாக்கு, பெட்டி கடை  வைத்தல்
    • காய்கறி கடை  வைத்தல்
    • மளிகை கடை  வைத்தல்
    • அரிசி கடை  வைத்தல்
    • வீடியோ லைப்ரரி அமைத்தல்
    • கேபிள் டிவி ஆபரேட் செய்தல்
    • நூலகம் அமைத்தல்
    • குழம்பு, ரசம்,கறி, கூட்டு, விற்பனை
    • தள்ளு வண்டியில் இட்லி, தோசை, ஆம்லெட் பலகார கடை  வைத்தல்
    • பொது இடங்களில் பஜ்ஜி, போண்டா, பக்கோடா விற்பனை
    • ட்ராவல் ஏஜென்சி அமைத்தல்
    • ஆட்டோ ஒட்டுதல்
    • டூரிஸ்ட் கார், வேன் ஒட்டுதல்
    • வேலை வாய்ப்பு தகவல் மற்றும் சேவை மையம் அமைத்தல்
    • திருமண தகவல் மையம் அமைத்தல்
    • திருமணம் நடத்தி கொடுத்தல்
      • சமையல், பட்சணம் செய்தல்
      • காய்கறி சப்ளை 
      • பூ சப்ளை 
      • வாழை மரம் சப்ளை 
      • நாதஸ்வரம், ஆர்கெஸ்ட்ரா அமைத்தல்
    • பழ வியாபாரம்
      • கூடைகளில், தள்ளுவண்டியில் விற்பனை
      • கூடையில் வைத்து விற்பனை
      • மாத கணக்கில் வீடுகளுக்கு, அலுவலகங்களுக்கு பழ சப்ளை 
    • எலெக்ட்ரிக் சாமான்கள் கடை வைத்தல்
    • ஹார்ட்வேர்  சாமான்கள் கடை வைத்தல்
    • கட்டிடம் கட்ட காண்டிராக்ட் எடுத்தல்
    • செங்கல், மணல், ஜல்லி வியாபாரம்
    •  சிமென்ட் இரும்பு,கம்பி வியாபாரம்
    • துணிக்கடை வைத்தல்
      • புடவை, வேஷ்டி, சட்டை, பாண்ட் துணிகள் 
      • ரெடிமேட் டிரெஸ் கடை வைத்தல்
      • வீட்டிலேயே வியாபாரம் 
      • உள்ளாடைகள் தயாரித்தல்
    • ஸ்வீட், காரம் கடை வைத்தல்
      • வீட்டிலேயே ஸ்வீட், காரம் தயாரித்து தருதல்
    • பாத்திர கடை வைத்தல்
    • தையல் கடை வைத்தல்
    • வாடகை, சைக்கிள் , சைக்கிள்ரிப்பேர்  கடை வைத்தல்
    • இரண்டு சக்கர வாகனங்கள் ரிப்பேர்  கடை வைத்தல்
    • பிரிண்டிங் பிரெஸ் அமைத்தல்
    • ஸ்க்ரீன் பிரிண்டிங் செய்தல்
    • புத்தகங்கள் வெளியிடுதல்
    • நோட்டு புத்தகங்கள் , எழுது பொருட்கள் , ஸ்டேசனரி பொருட்கள் விற்பனை செய்தல்
    • பாட புத்தகங்கள் , கம்ப்யுட்டர் புத்தகங்கள் விற்பனை செய்தல்
    • பேன்சி பொருட்கள் விற்பனை செய்தல்

    வாழ்க்கை அறிவியல்

    வாழ்க்கை அறிவியல்

    1. அன்றாட வாழ்வில் அறிவின் வழி நடப்போம்.
    2. அறிவின் வழி நடப்பவர்கள் வெற்றி அடைகிறார்கள்.
    3. வெற்றிப் பாதையில் செல்ல சில ரகசியங்கள்
    4. வெற்றி நமதே: நமது குறிக்கோளை எட்டுவோம்.
    5. செயல் வீரர்களாக இருங்கள்; வெற்றி உங்களுக்கே
    6. தரம் என்றும் நிரந்தரம் .  உங்கள் செயல்களில் உயர்ந்த தரமும் சேவையை கொண்டு வாருங்கள்.  நீங்கள் உயர்ந்த வளர்ச்சி அடைவீர்கள். 
    7. அன்றாட வாழ்விற்கு பயன்படும் சின்ன சின்ன விஷயங்கள்

    Tuesday, July 12, 2011

    உயர்ந்த ஞானம் அடைய என்ன வழி?

    உயர்ந்த ஞானம் அடைய என்ன வழி?

    இவ்வுலகில் நடக்கும் எல்லா செயல்களையும் சரியாக புரிந்து கொள்பவனே உயர்ந்த ஞானியாகிறான். எல்லா விஷயங்களையும் அறிந்து கொள்பவன் அறிவாளியாகிறான் . தனது அறிவால் அறிந்த விஷயங்களை அலசி ஆராய்ந்து அதை தனது புத்தியினால் புரிந்து கொள்பவனே உயர்ந்த ஞானத்தை பெறுகிறான். நீங்களும் உயர்ந்த ஞானம் பெற வேண்டுமானால் நமது பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள அனைத்து புத்தகங்களில் உள்ள விஷயங்களை படித்து அறிந்து, அவை அனைத்தையும் புரிந்து கொண்டு விட்டால் நீங்கள் புத்தர், ஏசு, போன்ற மகான்கள் பெற்று இருந்த உயர்ந்த ஞானத்தை போல் பத்து மடங்கு ஞானம் பெற்று விட்டீர்கள் என நம்பலாம். ஆகவே நீங்கள் அறிந்த விஷயங்களை புரிந்து கொண்டால் நீங்கள் புரிந்து கொண்ட அளவிற்கு ஞானத்தைப் பெறுவீர்கள்

    மதத் தலைவர்கள் சொல்லும் உபதேசங்கள்

    மதத் தலைவர்கள் சொல்லும் உபதேசங்கள்

    மதங்கள் உலகில் அமைதியை ஏற்படுத்தவும் மனிதர்களிடையே நட்புணர்வையும் நேசத்தையும் வளர்க்கவும் தோன்றின.  இத்தகைய நல்ல சிந்தனைகளை பரப்பும் மத போதனைகளை ஏற்றுக் கொள்ளலாம்.  புத்தர் , ஏசு, ஆதி சங்கரர், நபிகள் நாயகம் போன்ற மாபெரும் தலைவர்கள் பல இனிய புதிய மத சிந்தனைகளை பரப்பினார்கள்.  இத்தைகைய மகான்களின் அறிவில் தோன்றிய மிகச் சிறந்த சிந்தனைகளை இம்மதங்களின் கொள்கைகளாக உலகம் முழுவதும் பரவின.  இத்தைகைய மாபெரும் சிந்தனைகள் இவ்வுலகில் அணைத்து மக்களுக்கும் பொருந்தக் கூடிய சிந்தனைகளாக வளர்ந்து வந்திருகின்றன.  இன்று உலகில் 750 கோடி மக்களும் நன்றாக வாழ  வேண்டும், ஒருவருக்கொருவர் உதவ வேண்டும் என்பதே இன்றைய மத சிந்தனைகளாகும். 

    Monday, July 11, 2011

    ஜாதி மத பேதங்கள்

    ஜாதி மத பேதங்கள்

    நமது இந்தியாவில் ஜாதி மத பேதங்களை முழுவதும் ஒழிக்க முடியவில்லை என்றாலும் ஜாதி மத பேதங்கள் சிறிது சிறிதாக குறைந்து வருகிறது.  பெரு நகரங்களிலும் நகர்ப் புறங்களிலும் முழுவதும் கட்டுபாட்டிற்குள் இருக்கிறது என கூறலாம்.  பல தமிழ் ஆங்கில நாளிதழ்களிலும் மத இதழ்களிலும் இடம் பெறும் திருமண மணமகள், மணமகன் தேவை விளம்பரங்களில் பலவற்றில் "ஜாதி தடைகள் இல்லை"  என்ற வார்த்தைகள் இடம் பெற்றுள்ளதை நாம் கண் கூடாக காணலாம்.  மற்றும் திருமண பதிவு அலுவலகங்களில் தினமும் பல கலப்புத் திருமணங்கள் செய்யப்படுவதையும் நாம் அறியலாம்.  இத்தகைய புதிய மாற்றங்கள் மிக மெதுவாகத்தான் நடைபெறும்.  ஆனால் ஜாதி மத பேதங்கள் குறைந்து வந்தாலும் மனிதர்கள் அந்தஸ்து, படிப்பு, வருமானம் ஆகியவற்றை தற்போது கவனித்து அதற்குத் தகுந்தாற்போலவே தங்கள் திருமணங்களையும்  மற்ற புதிய தொடர்புகளையும் ஏற்படுத்திக் கொள்கிறார்கள். 

    சந்தோஷம்

    சந்தோஷம்

    நாம் அனைவரும் எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும்.  சந்தோஷமாக இருப்பவரின் உடலும் புத்துணர்வுடன் காணப்படுகிறது.  சந்தோஷமாக இருப்பவர் தனது வேலைகளையும் மன உளைச்சலில்லாமல் செய்ய முடிகிறது.  சந்தோஷம் என்பது நமது மனதில் தான் இருக்கிறது.  பழைய சாதத்தை சாப்பிட்டுவிட்டு சந்தோஷமாக இருப்பவர்களும்  இருக்கிறார்கள்.  பால்கோவாவை சாப்பிட்டுவிட்டு வருத்தமாக   இருப்பவர்களும் இருக்கிறார்கள். திருப்தியுள்ள மனமுடையவர்கள் எப்போதும்  சந்தோஷமாக இருக்கிறார்கள்.  திருப்தியுள்ள மனதையும் போதுமென்ற மனதையும் உடையவர்கள் மிக உயர்ந்த நிலையில் இருப்பவர்கள்.   இருப்பதைக் கொண்டு திருப்தியடைய வேண்டும். ஆனால் அதே சமயம் புதிய சாதனைகளை புரிய செண்டும் என்ற எண்ணமும் இருக்க வேண்டும்.  இனிய சொற்களை உபயோகிப்பால்  நாமும் சந்தோஷமாக இருந்து மற்றவர்களையும் சந்தோஷப்படுத்த இயலும். 

    மின் விசிறி

    மின் விசிறி

    1. காற்றில்லாமல் எந்த உயிரினமும் உயிர் வழ முடியாது.  காற்றோட்டம் இருந்து கொண்டே இருந்தால்தான் நம் புதிய காற்றினை தொடர்ந்து சுவாசிக்க முடியும்.
    2. மின்விசிறி நமது வீடுகளிலும் அலுவலகங்களிலும் சிறந்த  காற்றோட்டத்தை செயற்கையாக உருவாக்கித் தருகிறது. 
    3. இயற்கைக் காற்று கூட சில சமயம் விட்டு விட்டு அடிக்கிறது.  ஆனால் மின்விசிறி அளிக்கும் செயற்கை காற்றோ சீராக, நிதானமாக நமக்கு வேண்டிய வேகத்தில் வைத்துக் கொள்ள முடிகிறது.  
    4. இன்று உலகம் முழுவதும் கோடானு கோடி மின்விசிறிகள் உபயோகத்தில் உள்ளன.  சாதாரண மற்றும் நடுத்தர வர்க்க குடும்பங்களில் கூட சர்வ சாதாரணமாக மின்விசிறியை காணலாம். 
    5. கிராமப்புரங்களில் கூட பல வீடுகளில் தற்போது  வந்துவிட்டன. 
    6. மின்விசிறி உற்பத்தி மற்றும் விற்பனையில் கோடிக்கணக்கானவர்கள் வேலை வைப்புப் பெற்றுள்ளனர்.

    சொட்டு நீர் பாசனத்தால் விவசாயத்தில் ஏற்படும் நன்மைகள்

    சொட்டு நீர் பாசனத்தால் விவசாயத்தில் ஏற்படும் நன்மைகள்:

    1. மிகக் குறைந்த நீரின் உதவியால் பெரிய தோப்புகளை அமைக்க முடிகிறது.  பல வறட்சியான நிலங்களிலும் விவசாயம் செய்ய முடிகிறது.  
    2. மிகக் குறைந்த நீரே உபயோகிக்கபடுவதால் நீர் இறைக்க தேவைப்படும் மின்சக்தியின் அளவு குறைகிறது. 
    3. குறைந்த குதிரைத்திறன் கொண்ட மின்சார மோட்டார்களே பெரிய நிலங்களை விவசாயம் செய்ய போதுமானது.
    4. சொட்டு நீர் பாசன முறை புகுத்தப்பட்டதால் மிகவும் வறட்சியான பகுதிகளிலும் விவசாயம் செய்ய முடிவதால் விவசாய உற்பத்தி மேலும் பெருக வாய்ப்புள்ளது. 
    5. விவசாய உற்பத்தி பெருகுவதால் விலைகள் குறைந்து பொருளாதாரம் செழிப்புடன் விளங்க  வாய்ப்புள்ளது. 
    6. இவை கிராமப்புற விவசாயிகள் உபயோகப்படுத்துவதால் அக்கிராமங்கள் சிறப்பாக முன்னேற  வாய்ப்புள்ளது. 
    7. சொட்டு நீர் பாசனத்தால் நமது நாடு முழுவதும் உயர்ந்த நிலையடைய வாய்ப்புள்ளது. 

    சொட்டு நீர் பாசனம்

    சொட்டு நீர் பாசனம் :

    சிறந்த நீர் பாசன வசதிகள் விவசாய விளைச்சலை சிறப்பாக அதிகரிக்கும்.  தற்போது பிரபலமாகியுள்ள "சொட்டு நீர் பாசன முறை" மனித அறிவின் மற்றுமொரு கண்டுபுடிப்பாகும்.  நீண்ட பிளாஸ்டிக் குழாய்கள் மூலமாக நீரைச் செலுத்தி மரங்கள் உள்ள இடங்களில் மட்டும் அதன் வேர்களில் சொட்டுச் சொட்டாக நீர் விடச் செய்வது  சொட்டு நீர் பாசன முறையாகும்.  இம்முறையால் வறட்சியான பகுதிகளில் கூட மா, பலா, தென்னை, மரத் தோப்புகளை அமைக்க முடிகிறது.  இதனால் விவசாய உற்பத்தி பல மடங்கு அதிகரிக்கிறது.  விவசாய உற்பத்தி அதிகமாவதால் குறைந்த விலையில் நல்ல உணவு தயாரித்து உன்ன முடிகிறது.  இதனால் ஏழைகளின் பசிக் கொடுமை குறைய வாய்ப்புள்ளது.  இந்த சொட்டு நீர் பாசன முறையை தற்போது பல விவசாயிகள் பயன்படுத்தி நல்ல பலனும் லாபமும் பெற்று வருகிறார்கள்.   நன்மை செய்யும் புதிய முறைகளை ஏற்றுக் கொள்வது நல்லது. 

    Sunday, July 10, 2011

    வளரும் தொழில்கள்

    வளரும் தொழில்கள்

    இன்று உலகில் கோடிக்கணக்கான தொழில்கள் பெருகி வளர்ந்துள்ளன. இத்தைகைய தொழில்கள் மூலம்   கோடிக்கணக்கான  தொழிலாளர்கள் வேலை வாய்ப்பைப் பெற்று சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள்.  ஆனால் இன்றும் புதிய புதிய  தொழில்கள் பிறந்து கொண்டே இருக்கின்றன.  வளர்ந்து கொண்டே இருக்கின்றன.  மனித அறிவு வளர்ச்சியினால் பல நன்மைகள் இவ்வுலகிற்கு தொடர்ந்து கிடைத்து வருகின்றன.  மனித அறிவினால் ஒவ்வொரு தொழிலிலும் மேலும் புதிய தொழில் நுட்பங்கள் கண்டு பிடிக்கபடுகின்றன.  இத்தகைய  புதிய தொழில் நுட்பங்களை  செயல்படுத்துவதால் லாபம் அதிகரிக்கிறது.  பல எளிமையான வழிகள் புகுத்தப்படுவதால் தொழிலாளர்கள் தங்கள் பணியை எளிமையாகச் செய்ய முடிகிறது.  மேலும் பல புதிய தொழில் நுட்பங்களால்  குறைந்த நேரத்தில் அதிக எண்ணிக்கையில் பொருள்கள் உற்பத்தி செய்யப் படுகிறது.  புதிய தொழில்நுட்பங்களினால் பொருட்களின் தரமும் உயர்கிறது. 

    பெற்றோர்களே நடத்த வேண்டிய கலப்பு திருமணங்கள்

    பெற்றோர்களே நடத்த வேண்டிய  கலப்பு திருமணங்கள்

    தற்போது கலப்புத் திருமணம்" என்றாலே அது காதல் மணமாக மட்டுமே உள்ளது.  ஆனால் இன்று எல்லா ஜாதி மதங்களை சேர்ந்தவர்களிலும் நன்கு படித்த பண்புள்ள, நல்ல வேலையுள்ள ஆண்களும், பெண்களும் இருக்கிறார்கள்.   ஆதலால் பெற்றோர்களே தனது மகனுக்கோ மகளுக்கோ திருமணத்திற்கு வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் போது ஜாதி மத பேதங்களை பாராமல் நன்கு படித்த பண்புள்ள நல்ல வேலையுள்ள ஒரு பெண்ணையோ பையனையோ தனது குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைக்க முன் வந்தால் நமது நாட்டில் ஜாதி மத பேதங்கள் குறைய வாய்ப்பு உள்ளது.  அது போல அவர்கள் மகனோ மகளோ அவர்கள் விரும்புபவர்கள் உண்மையிலேயே நல்லவர்களாகவும் பண்புள்ளவர்களாகவும் இருந்தால் தடை சொல்லாமல் கலப்பு திருமணங்களை நடத்தி வைக்கலாம். 

    அன்பின் அலைகள் 4 : நான்

    அன்பின் அலைகள் 4 : நான்
     
    நான் அன்பிற்கும் அஹிம்சைக்கும் கட்டுப்பட்டவன்.இனிமைக்கும் நன்மைக்கும் கட்டுப்பட்டவன்.   நல்லவர்களின் சிந்தனைக்கும் சொல்லுக்கும் கட்டுப்பட்டவன்.அறிவிற் சிறந்தவர்களும் உயர்ந்தவர்களும் என்னிடமுள்ள குறைகளை சுட்டிகாட்டி அவற்றை தீர்க்கும் ஆலோசைனைகளும் கூறினால் அதை நான் பணிவுடனும் தாழமையுடனும் ஏற்றுக்கொள்ளுகிறேன்.  ஆனால் சிலர் அதிகாரத்தாலும் ஆணவத்தாலும் அறியாமையாலும் ஏளனத்தாலும் என்னை அடக்க முற்பட்டால் அவர்கள் மாபெரும் தோல்வியையே அடைகிறார்கள்.  நான் புதிய சிந்தனைகளையும் நல்ல சிந்தனைகளையும் படைக்கிறேன்.  அதை நல்லவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள்.  தீயவர்கள் என்  சிந்தனைகளையும் என்னையும் அழிக்க முற்பட்டால் அவர்கள் மாபெரும் அழிவை அடைகிறார்கள்.  நான் இவ்வுலகத்திலுள்ள அனைத்தையும் இவ்வுலகிற்கு அப்பாற்பட்ட அண்ட சராசரங்களையும் நேசிக்கிறேன்.  நான் செலுத்தும் அன்பும் நேசமுமே என்னை பாதுகாக்கிறது . 

    அன்பின் அலைகள் 3 :மழலை அன்பு

    அன்பின் அலைகள் 3 :மழலை அன்பு

    இவ்வுலகில் குழந்தைகள் மேல் அன்பு செலுத்தாத மனிதர்களே இல்லை. ஒரு குழந்தையின் இனிய சிரித்த முகத்தை பார்க்கும்போது கல் நெஞ்சுள்ளவர்களின் மனம் இளகிவிடும்.  ஒரு குழந்தையின் சிரிப்பையும் மழலை மொழியையும் கேட்கும்போது கிடைக்கும் இனிமைக்கு நிகர் வேறில்லை.அதே போல் ஒரு குழந்தை பசியால் அழுவதை யாராலும் தாங்க முடியாது. குழந்தையின் பசியை தீர்க்கவே அனைவரும் முயற்சி செய்வார்கள்.  குழந்தையின் சந்தோஷமும் குதூகலமும் இவ்வுலகையே ஆட்சி புரிகிறது.  ஆனால் உலகையே மயக்கும் ஒரு சிறுகுழந்தைக்கு தனது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் சக்தி கிடையாது.ஆகவே குழந்தை மேல் அன்பு செலுத்தும் தாயும் தந்தையும் உற்றார் உறவினர்களும்  அக்குழந்தைக்கு பசி தெரியாமல் வளர்க்கிறார்கள். அக்குழந்தையை நோய் எதுவும் தாக்காமல் பாதுகாக்கிறார்கள். அப்படியே குழந்தையை ஏதாவது நோய் தாக்கினாலும் உடனடியாக டாக்டர் மூலமாக சிகிச்சை அளிக்கிறார்கள்.   தாயும் தந்தையும் சகோதர சகோதரிகளும் தங்கள் வீட்டு குழந்தையை ஒரு ஆபத்திலிருந்து காப்பாற்ற தங்கள் உயிரையும் தர தயாராக இருக்கிறார்கள்.  இதுவே ஒரு மழலை மேல் செலுத்தும் அன்பிற்கு அடித்தளமாகும்

    Saturday, July 9, 2011

    அன்பின் அலைகள் - 2 - தந்தையின் அன்பு

    அன்பின் அலைகள் -  2 - தந்தையின் அன்பு

    ஒரு தந்தை தன் குழந்தைகள் மீது செலுத்தும் அன்பு சாம்பல் பூத்த தணல் போன்றது   வெளியில் ஒரு தந்தை கண்டிப்பாக நடந்து கொண்டாலும் அடி மனதில் தந்தை தனது குழந்தைகளின் மேல் அளவிட முடியாத அன்பை செலுத்தி வருகிறார்.  அவருடைய எண்ணமெல்லாம் தனது மனைவிக்கும் குழந்தைகளுக்கும் எந்தவித கஷ்டமும் வரக்கூடாது என்பதிலேயே இருக்கும்.  இந்த இனிய சிந்தனையை உடைய தந்தை இவ்வுலகிலிருந்து தனது குடும்பத்தை நோக்கி வரும் பிரச்சினைகளையும் கஷ்டங்களையும் தனது தோளில் தாங்கி தனது குடும்பத்தை பாதுகாக்கிறார்.  அவருடைய கவலையெல்லாம் தனது குழந்தைகளுக்கு என்றும் பசி தெரியகூடாது , எந்த நோயும் தாக்கக் கூடாது, உண்ண உணவும்,இருக்க இடமின்றி கஷ்டப்படக்கூடாது என்பதிலேயே இருக்கும். தனது குழந்தைகள் சிறந்த ஞானம் பெறவும், உயர்ந்த கல்வி பெறவும், பெற்ற கல்வியை தக்க முறையில் உபயோகித்து உலக முன்னேற்றத்திற்கு உதவவும் போதிக்கும் தந்தைக்கும் எந்த விதத்தில் அவரது குழந்தைகள் கைமர்று செய்ய முடியும்? தந்தை போதிக்கும் வழியில் பயணம் செய்து, தந்தைக்கு ஒரு ஆபத்தோ ஒரு பிரச்சினையோ வரும் நேரத்தில் வளந்த பிள்ளைகள் அவற்றை தனது மார்பில் தாங்கி தந்தையை காப்பதே பிள்ளைகள் செய்யக்கூடிய கடமையாகும். 

    அன்பின் அலைகள் - தாயன்பு

    அன்பின் அலைகள் - தாயன்பு 

    உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்த அன்பு , ஒரு தாய் தனது குழந்தையின் மேல் செலுத்தும் அன்பே ஆகும்.   தாயின் அன்பிற்கு ஈடு இணை இவ்வுலகில் எதுவும் இல்லை. தாய் தனது குழந்தைக்கு பாலூட்டி சீராட்டி வளர்க்கிறாள்.  தனது குழந்தை பேசும் மழலை மொழியில் ஒரு தாய்  இவ்வுலகத்தையே காண்கிறாள். தனது குழந்தையின் வளர்ச்சியையும் அழகையும் பார்த்து அன்னை பூரித்துப் போகிறாள். பிறகு குழந்தை வளர்ந்து,  தவழ்ந்து, நடந்து, பள்ளி சென்று பயின்று, ஒரு மாபெரும் மனிதனாக வளர்ந்து,  இவ்வுலகத்தையே வெற்றி கொண்டாலும் அத்தாய் தன மகனை குழந்தையாகவே கருதி அன்பு செலுத்துகிறாள் .  ஒரு தாயிடம் பெறும் அன்பிற்கு இணையான அன்பை  ஒரு மனிதன் வேறெங்கும் பெற முடியாது.   இதை உணர்ந்த அனைத்து நல்ல உள்ளம் படைத்தவர்களும் எப்படி தாய் அன்பிற்கு நன்றி செலுத்துவது? அந்தத் தாய் வயதான காலத்தில் சிறிதும் உடல் முடியாமல் தள்ளாத நிலையில் இருக்கும் போது தனது தாயின் மனம் கோணாமல் வயதான தாயை போற்றிப் பாதுகாப்பதே ஒருவன் தனது தாய்க்கு செலுத்தும் நன்றிக் கடனாகும். 

    இவ்வுலகம் அன்பினாலேயே ஆளப்படுகிறது

    இயற்கையில் தோன்றிய ஒவ்வொரு பொருளும் இனிமையானதே.  உயிருள்ள அனைத்தும் இயற்கைதன்மையுடன் செயல்படும்போது தானும் சந்தோஷமாக வாழ்ந்து மற்றவர்குளுக்கும் சந்தோஷத்தை அளிக்கிறது .

    இவ்வுலகம் அன்பினாலேயே ஆளப்படுகிறது     

    Tuesday, June 14, 2011

    ஏழை பெண்கள் படிப்பிற்கு உதவி

    ஏழை பெண்கள் படிப்பிற்கு உதவி.

    நல்ல உள்ளம் படைத்த, சென்னையில் வாழும் சில குடும்பங்கள், மேற்படிப்பு படிக்க வசதியில்லாத ஏழை பெண்கள் /அநாதை பெண்கள் +2 விற்கு மேல் படிக்க விரும்பினால் அவர்களுக்கு தங்க இடம், சாப்பாடு, படிப்பு செலவு கொடுத்து நல்ல வேலை வரும்வரை ஆதரவு கொடுக்கிறார்கள்.  உங்களுக்கு தெரிந்த ஏழை / அநாதை பெண்கள் இருந்தால் கீழ்க்கண்ட தொலைபேசி / ஈமெயில் மூலம் தொடர்பு கொள்ளவும். Sugavanam Natarajan, Mobile: 9940058497, Email: nsugavanam@gmail.com 

    ஆற்றில் அடித்துச் செல்லப்படுபவள் அழகில்லாதவளாக இருந்தாலும் அவளை காபற்றுபவனே மனிதன்.

    ஆற்றில் அடித்துச் செல்லப்படுபவள் அழகில்லாதவளாக இருந்தாலும் அவளை காபற்றுபவனே மனிதன். 

    Tuesday, April 26, 2011

    மனித நம்பிக்கைகள்

    மனித நம்பிக்கைகள் 
    நல்ல நம்பிக்கை வளர்ச்சியை தருகிறது.
    மூட நம்பிக்கை அழிவைத் தருகிறது.

    பகுத்தறிவின் உயர்ந்த நிலை

    பகுத்தறிவின் உயர்ந்த நிலை
    - உண்மை. உழைப்பு. உயர்வு. 
    - அனைவரிடமும் அன்பு செலுத்துதல்
    - அனைவரிடமும் அன்பாக பேசுதல்
    - நல்லதே நினைத்தல், நல்லதே பேசுதல், நல்லதே செய்தல்
    - மற்றவர்களை குற்றம் கூறாமல் இருத்தல் 
    - மரங்கள் நட்டு வளர்த்தல்
    - மரங்களுக்கு நீர் ஊற்றுதல் 
    - மற்றவர்களுக்கு உதவி செய்தல் 
    - ரத்த தானம் செய்தல். மற்றவர்களும் ரத்த தானம் செய்ய வேண்டுதல்
    - கண் தானம் செய்தல்.  மற்றவர்களும் கண் தானம் செய்ய வேண்டுதல்
    - உடல் தானம் செய்தல்.  மற்றவர்களும் உடல் தானம் செய்ய வேண்டுதல்
    - இயற்கை விவசாய வளர்ச்சிக்கு பாடுபடுதல்
    - உள்ளதை உள்ளபடி உரைத்தல்
    - மரண பயம் தவிர்த்து நல்லது செய்தல் 

    Thursday, April 14, 2011

    அன்பே இவ்வுலகை ஆட்சி புரிகிறது



    அன்பே இவ்வுலகை ஆட்சி புரிகிறது.   முதலில் உங்களிடமே நீங்கள் அன்பு செலுத்துங்கள்.  பிறகு உங்கள் வீட்டில் உள்ளவர்கள் மேல் அன்பு செலுத்துங்கள்.   உங்கள் உற்றார் உறவினர் மேல் அன்பு செலுத்துங்கள்.  உங்களது எதிரிகள், பகைவர்கள், விரோதிகள் மீதும் அன்பு செலுத்துங்கள்.  உங்கள் தெருவில் உள்ளவர்கள் மீது அன்பு செலுத்துங்கள்.  உங்கள் ஊரில் உள்ளவர்கள் மேல் அன்பு செலுத்துங்கள்.  உங்கள் நாட்டில் உள்ளவர்கள் மேல் அன்பு செலுத்துங்கள்.  இவ்வுலகில் உள்ள அனைவர் மேலும் அன்பு செலுத்துங்கள்.  இவ்வுலகில் உள்ள அனைத்து உயிரினங்கள் மேலும் அன்பு செலுத்துங்கள்.  அன்பே அருமருந்து. அன்பின் வழி நடப்போம். அன்பே இவ்வுலகை ஆட்சி புரிகிறது.

    ஒரு அரசியல்வாதியின் மாலையில் இருக்கும் ஓர் அழகிய மலரின் அசரீரி

    ஒரு அரசியல்வாதியின் மாலையில் இருக்கும் ஓர் அழகிய மலரின் அசரீரி: 
    கொடூர அரசியல்வாதிக்காக அழகிய மலர்களை கொல்லாதீர்கள்...

    Wednesday, April 13, 2011

    தேர்தல் வாக்களிப்பு

    தேர்தல் வாக்களிப்பு 
    --------
    கறை படாத கைகளை தேர்ந்தெடுக்க சென்றேன். 
    என் கைகளையும் கறை படுத்தி விட்டார்களே 

    Sunday, April 10, 2011

    பெண்ணென்னும் பேரழகு



    பெண்ணென்னும் பேரழகு 
    ----------
    சலசலக்கும் சிற்றோடை.  
    அது உனது சிரிப்பை சொல்கிறது.
    அடர்ந்த மரங்கள். 
    அதன் குளுமையான நிழல். 
    அது உன் இனிமைக்கு ஈடாகாது.
    தென்றல் காற்றில் சலசலக்கும் மர இலைகள் சத்தம்.  
    அது உன் பேச்சுக்கு ஈடாகாது.
    வானத்தில் அலை அலையாய் கரு மேகங்கள்.
    அவை காற்றிலாடும் உன் கூந்தலுக்கு ஈடாகாது 
    தூரத்தே தெரியும் மலை முகடுகள்.
    பரந்து விரிந்த புல்வெளிகள்.
    அவை உன் அழகிற்கு ஈடாகாது 

    மாட்டு வண்டி மனிதர்கள்

    மாட்டு வண்டி மனிதர்கள் 
    -- நீங்கள் வேகமாக ஒரு பைக்கில் சென்று கொண்டு இருக்கிறீர்கள்.  திடீரென்று ரோட்டில் டிராபிக் ஜாம்.  பார்த்தால் ஒரு மாட்டு வண்டி நிதானமாக சென்று கொண்டு இருக்கிறது.  அதன் பின்னால் ஆட்டோ, கார், பஸ், லாரி மற்ற இரண்டு சக்கர வாகனங்கள் அனைத்தும் முன்னேறி செல்ல முடியாமல் தடுமாறிக்கொண்டு இருக்கின்றன.

    மாட்டு வண்டி தானும் நிதானமாக செல்லுகிறது.  மற்ற வண்டிகள் வேகமாக செல்வதையும் தடை செய்கிறது. இதே போல்தான் மனித வாழ்க்கையும் உள்ளது. ஆட்டோ, கார், பஸ், லாரி மற்ற இரண்டு சக்கர வாகனங்கள் எப்படி வெவ்வேறு விதமான வேகங்களை கொண்டுள்ளதோ அதே போல் மனிதர்களில் முன்னேற துடிப்பவர்களும் பல்வேறு வேகத்தை கொண்டுள்ளார்கள். மக்கள் வளர்ச்சிக்கும் தனது சொந்த வளர்ச்சிக்கும் பாடுபட வேண்டும் என்ற  உயர்ந்த சிந்தனை உள்ளவர்கள் வேகமாக பயணம் செய்கிறார்கள்.  மற்றவர்களும் வேகமாக பயணம் செய்ய அனுமதிக்கிறார்கள். 
      

    Saturday, April 9, 2011

    அன்புமணி ராமதாஸ் தேர்தல் பிரசாரம் செல்லும் இடமெல்லாம் குறைந்த பட்சம் ஒரு மரத்திற்கு ஒரு குடம் தண்ணீர் ஊற்றவும்


    அன்புமணி ராமதாஸ் தேர்தல் பிரசாரம் செல்லும் இடமெல்லாம் குறைந்த பட்சம் ஒரு மரத்திற்கு ஒரு குடம் தண்ணீர் ஊற்றவும்

    Friday, April 8, 2011

    அண்ணா ஹசாரே உண்ணா விரதப் போராட்டம் வெற்றி பெற வேண்டி நாம் அனைவரும் ஒரு மரத்திற்கு ஒரு சொம்பு தண்ணீர் ஊற்றுவோம்


    அண்ணா ஹசாரே உண்ணா விரதப் போராட்டம் வெற்றி பெற வேண்டி நாம் அனைவரும் ஒரு மரத்திற்கு ஒரு சொம்பு தண்ணீர் ஊற்றுவோம்

    குஷ்பூ தேர்தல் பிரசாரம் செல்லும் இடமெல்லாம் குறைந்த பட்சம் ஒரு மரத்திற்கு ஒரு குடம் தண்ணீர் ஊற்றவும்


    குஷ்பூ தேர்தல் பிரசாரம் செல்லும் இடமெல்லாம் குறைந்த பட்சம் ஒரு மரத்திற்கு ஒரு குடம் தண்ணீர் ஊற்றவும்

    எல் கே அத்வானி தேர்தல் பிரசாரம் செல்லும் இடமெல்லாம் குறைந்த பட்சம் ஒரு மரத்திற்கு ஒரு குடம் தண்ணீர் ஊற்றவும்

    எல் கே அத்வானி தேர்தல் பிரசாரம் செல்லும் இடமெல்லாம் குறைந்த பட்சம் ஒரு மரத்திற்கு ஒரு குடம் தண்ணீர் ஊற்றவும்

    சோனியா காந்தி தேர்தல் பிரசாரம் செல்லும் இடமெல்லாம் குறைந்த பட்சம் ஒரு மரத்திற்கு ஒரு குடம் தண்ணீர் ஊற்றவும்


    சோனியா காந்தி தேர்தல் பிரசாரம் செல்லும் இடமெல்லாம் குறைந்த பட்சம் ஒரு மரத்திற்கு ஒரு குடம் தண்ணீர் ஊற்றவும்

    ராகுல் காந்தி தேர்தல் பிரசாரம் செல்லும் இடமெல்லாம் குறைந்த பட்சம் ஒரு மரத்திற்கு ஒரு குடம் தண்ணீர் ஊற்றவும்

    ராகுல் காந்தி தேர்தல் பிரசாரம் செல்லும் இடமெல்லாம் குறைந்த பட்சம் ஒரு மரத்திற்கு ஒரு குடம் தண்ணீர் ஊற்றவும்

    கலைஞர் கருணாநிதி தேர்தல் பிரசாரம் செல்லும் இடமெல்லாம் குறைந்த பட்சம் ஒரு மரத்திற்கு ஒரு குடம் தண்ணீர் ஊற்றவும்


    கலைஞர் கருணாநிதி தேர்தல் பிரசாரம் செல்லும் இடமெல்லாம் குறைந்த பட்சம் ஒரு மரத்திற்கு ஒரு குடம் தண்ணீர் ஊற்றவும்

    திண்டுக்கல் லியோனி தேர்தல் பிரசாரம் செல்லும் இடமெல்லாம் குறைந்த பட்சம் ஒரு மரத்திற்கு ஒரு குடம் தண்ணீர் ஊற்றவும்


    திண்டுக்கல் லியோனி தேர்தல் பிரசாரம் செல்லும் இடமெல்லாம் குறைந்த பட்சம் ஒரு மரத்திற்கு ஒரு குடம் தண்ணீர் ஊற்றவும்

    வடிவேலு தேர்தல் பிரசாரம் செல்லும் இடமெல்லாம் குறைந்த பட்சம் ஒரு மரத்திற்கு ஒரு குடம் தண்ணீர் ஊற்றவும்

    வடிவேலு தேர்தல் பிரசாரம் செல்லும் இடமெல்லாம் குறைந்த பட்சம் ஒரு மரத்திற்கு ஒரு குடம் தண்ணீர் ஊற்றவும்

    விஜயகாந்த் தேர்தல் பிரசாரம் செல்லும் இடமெல்லாம் குறைந்த பட்சம் ஒரு மரத்திற்கு ஒரு குடம் தண்ணீர் ஊற்றவும்


    விஜயகாந்த்  தேர்தல் பிரசாரம் செல்லும் இடமெல்லாம் குறைந்த பட்சம் ஒரு மரத்திற்கு ஒரு குடம் தண்ணீர் ஊற்றவும்