சொட்டு நீர் பாசனத்தால் விவசாயத்தில் ஏற்படும் நன்மைகள்:
- மிகக் குறைந்த நீரின் உதவியால் பெரிய தோப்புகளை அமைக்க முடிகிறது. பல வறட்சியான நிலங்களிலும் விவசாயம் செய்ய முடிகிறது.
- மிகக் குறைந்த நீரே உபயோகிக்கபடுவதால் நீர் இறைக்க தேவைப்படும் மின்சக்தியின் அளவு குறைகிறது.
- குறைந்த குதிரைத்திறன் கொண்ட மின்சார மோட்டார்களே பெரிய நிலங்களை விவசாயம் செய்ய போதுமானது.
- சொட்டு நீர் பாசன முறை புகுத்தப்பட்டதால் மிகவும் வறட்சியான பகுதிகளிலும் விவசாயம் செய்ய முடிவதால் விவசாய உற்பத்தி மேலும் பெருக வாய்ப்புள்ளது.
- விவசாய உற்பத்தி பெருகுவதால் விலைகள் குறைந்து பொருளாதாரம் செழிப்புடன் விளங்க வாய்ப்புள்ளது.
- இவை கிராமப்புற விவசாயிகள் உபயோகப்படுத்துவதால் அக்கிராமங்கள் சிறப்பாக முன்னேற வாய்ப்புள்ளது.
- சொட்டு நீர் பாசனத்தால் நமது நாடு முழுவதும் உயர்ந்த நிலையடைய வாய்ப்புள்ளது.
No comments:
Post a Comment