Total Pageviews

Saturday, July 9, 2011

அன்பின் அலைகள் - 2 - தந்தையின் அன்பு

அன்பின் அலைகள் -  2 - தந்தையின் அன்பு

ஒரு தந்தை தன் குழந்தைகள் மீது செலுத்தும் அன்பு சாம்பல் பூத்த தணல் போன்றது   வெளியில் ஒரு தந்தை கண்டிப்பாக நடந்து கொண்டாலும் அடி மனதில் தந்தை தனது குழந்தைகளின் மேல் அளவிட முடியாத அன்பை செலுத்தி வருகிறார்.  அவருடைய எண்ணமெல்லாம் தனது மனைவிக்கும் குழந்தைகளுக்கும் எந்தவித கஷ்டமும் வரக்கூடாது என்பதிலேயே இருக்கும்.  இந்த இனிய சிந்தனையை உடைய தந்தை இவ்வுலகிலிருந்து தனது குடும்பத்தை நோக்கி வரும் பிரச்சினைகளையும் கஷ்டங்களையும் தனது தோளில் தாங்கி தனது குடும்பத்தை பாதுகாக்கிறார்.  அவருடைய கவலையெல்லாம் தனது குழந்தைகளுக்கு என்றும் பசி தெரியகூடாது , எந்த நோயும் தாக்கக் கூடாது, உண்ண உணவும்,இருக்க இடமின்றி கஷ்டப்படக்கூடாது என்பதிலேயே இருக்கும். தனது குழந்தைகள் சிறந்த ஞானம் பெறவும், உயர்ந்த கல்வி பெறவும், பெற்ற கல்வியை தக்க முறையில் உபயோகித்து உலக முன்னேற்றத்திற்கு உதவவும் போதிக்கும் தந்தைக்கும் எந்த விதத்தில் அவரது குழந்தைகள் கைமர்று செய்ய முடியும்? தந்தை போதிக்கும் வழியில் பயணம் செய்து, தந்தைக்கு ஒரு ஆபத்தோ ஒரு பிரச்சினையோ வரும் நேரத்தில் வளந்த பிள்ளைகள் அவற்றை தனது மார்பில் தாங்கி தந்தையை காப்பதே பிள்ளைகள் செய்யக்கூடிய கடமையாகும். 

No comments:

Post a Comment