பெற்றோர்களே நடத்த வேண்டிய கலப்பு திருமணங்கள்
தற்போது கலப்புத் திருமணம்" என்றாலே அது காதல் மணமாக மட்டுமே உள்ளது. ஆனால் இன்று எல்லா ஜாதி மதங்களை சேர்ந்தவர்களிலும் நன்கு படித்த பண்புள்ள, நல்ல வேலையுள்ள ஆண்களும், பெண்களும் இருக்கிறார்கள். ஆதலால் பெற்றோர்களே தனது மகனுக்கோ மகளுக்கோ திருமணத்திற்கு வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் போது ஜாதி மத பேதங்களை பாராமல் நன்கு படித்த பண்புள்ள நல்ல வேலையுள்ள ஒரு பெண்ணையோ பையனையோ தனது குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைக்க முன் வந்தால் நமது நாட்டில் ஜாதி மத பேதங்கள் குறைய வாய்ப்பு உள்ளது. அது போல அவர்கள் மகனோ மகளோ அவர்கள் விரும்புபவர்கள் உண்மையிலேயே நல்லவர்களாகவும் பண்புள்ளவர்களாகவும் இருந்தால் தடை சொல்லாமல் கலப்பு திருமணங்களை நடத்தி வைக்கலாம்.
No comments:
Post a Comment