அன்பின் அலைகள் - தாயன்பு
உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்த அன்பு , ஒரு தாய் தனது குழந்தையின் மேல் செலுத்தும் அன்பே ஆகும். தாயின் அன்பிற்கு ஈடு இணை இவ்வுலகில் எதுவும் இல்லை. தாய் தனது குழந்தைக்கு பாலூட்டி சீராட்டி வளர்க்கிறாள். தனது குழந்தை பேசும் மழலை மொழியில் ஒரு தாய் இவ்வுலகத்தையே காண்கிறாள். தனது குழந்தையின் வளர்ச்சியையும் அழகையும் பார்த்து அன்னை பூரித்துப் போகிறாள். பிறகு குழந்தை வளர்ந்து, தவழ்ந்து, நடந்து, பள்ளி சென்று பயின்று, ஒரு மாபெரும் மனிதனாக வளர்ந்து, இவ்வுலகத்தையே வெற்றி கொண்டாலும் அத்தாய் தன மகனை குழந்தையாகவே கருதி அன்பு செலுத்துகிறாள் . ஒரு தாயிடம் பெறும் அன்பிற்கு இணையான அன்பை ஒரு மனிதன் வேறெங்கும் பெற முடியாது. இதை உணர்ந்த அனைத்து நல்ல உள்ளம் படைத்தவர்களும் எப்படி தாய் அன்பிற்கு நன்றி செலுத்துவது? அந்தத் தாய் வயதான காலத்தில் சிறிதும் உடல் முடியாமல் தள்ளாத நிலையில் இருக்கும் போது தனது தாயின் மனம் கோணாமல் வயதான தாயை போற்றிப் பாதுகாப்பதே ஒருவன் தனது தாய்க்கு செலுத்தும் நன்றிக் கடனாகும்.
No comments:
Post a Comment