மாட்டு வண்டி மனிதர்கள்
-- நீங்கள் வேகமாக ஒரு பைக்கில் சென்று கொண்டு இருக்கிறீர்கள். திடீரென்று ரோட்டில் டிராபிக் ஜாம். பார்த்தால் ஒரு மாட்டு வண்டி நிதானமாக சென்று கொண்டு இருக்கிறது. அதன் பின்னால் ஆட்டோ, கார், பஸ், லாரி மற்ற இரண்டு சக்கர வாகனங்கள் அனைத்தும் முன்னேறி செல்ல முடியாமல் தடுமாறிக்கொண்டு இருக்கின்றன.
மாட்டு வண்டி தானும் நிதானமாக செல்லுகிறது. மற்ற வண்டிகள் வேகமாக செல்வதையும் தடை செய்கிறது. இதே போல்தான் மனித வாழ்க்கையும் உள்ளது. ஆட்டோ, கார், பஸ், லாரி மற்ற இரண்டு சக்கர வாகனங்கள் எப்படி வெவ்வேறு விதமான வேகங்களை கொண்டுள்ளதோ அதே போல் மனிதர்களில் முன்னேற துடிப்பவர்களும் பல்வேறு வேகத்தை கொண்டுள்ளார்கள். மக்கள் வளர்ச்சிக்கும் தனது சொந்த வளர்ச்சிக்கும் பாடுபட வேண்டும் என்ற உயர்ந்த சிந்தனை உள்ளவர்கள் வேகமாக பயணம் செய்கிறார்கள். மற்றவர்களும் வேகமாக பயணம் செய்ய அனுமதிக்கிறார்கள்.
No comments:
Post a Comment