அகில உலக வியாபாரங்கள்
இன்று உலகின் ஒரு பகுதியில் உற்பத்தியாகும் பொருட்களை உலகம் முழுவதும் உபயோகிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. ஜப்பானில் உற்பத்தியாகும் டேப் ரிகார்டர்கள், டீ.வீக்கள், ரேடியோக்கள் உலகம் முழுவதும் படு அமோகமாக விற்பனையாகின்றன. இதே போல் ஒவ்வொரு நாட்டிலும் உற்பத்தியாகும் பல பொருட்கள் ஏற்றுமதி செய்யபடுகின்றன. அதே போல் ஒவ்வொரு நாடும் பல பொருட்களை வேற்று நாடுகளிலிருந்து இறக்குமதி செய்கின்றன. ஆகவே உலகம் முழுவதும் ஒரு மாபெரும் குடும்பமாக வாழ்ந்து வருகிறோம். இப்படி இருக்கும்போது நாம் மற்ற நாடுகளோடு சண்டை போடுவதோ பகையை வளர்த்துக் கொள்வதோ அர்த்தமற்றதாகும். அதே போல் மற்ற நாடுகளோடும் நம்மோடு ஒற்றுமையாக வாழ்வதே உலகிற்கு நல்லதாகும். இதை உணர்ந்ததாலேயே தற்போது பெரிய வல்லரசு நாடுகளெல்லாம் இணைந்து, பகையை மறந்து, நட்பை வளர்த்து வருகின்றன. உலகில் நாளுக்கு நாள் அமைதியும் ஒற்றுமையும் ஓங்கி வருகிறது.
No comments:
Post a Comment