பல்லிகள், ஓணான்கள்
உங்கள் வீட்டு சுவர்களில் மின்விளக்குகளின் அருகே, மற்றும் பல இடங்களில் பல்லிகள் இருப்பதைக் காணலாம். இப்பல்லிகளை கொல்லக்கூடாது. ஏனென்றால் அவை வீடுகளில் உள்ள ஈ, கொசு, கரப்பான்பூச்சி, தேள்குட்டி, சிறிய வண்டுகள் இது போன்று பல தொல்லை தரும் பூச்சிகளை அழித்து நமக்கு நன்மைகளைச் செய்து வருகிறது. நம்மை இது போன்று பலவித பூச்சிகளிடமிருந்து காப்பாற்றுவதால் பல்லி நமது நண்பனாகும். இதே போல் உங்கள் வீட்டுக் கொல்லையிலும் தோட்டங்களிலும் ஓணான்கள் இருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இந்த ஓணான்களைக் கொல்லக் கூடாது. ஏனென்றால் அவை நமது தோட்டங்களில் உள்ள சிறு பூச்சிகள் எறும்புகள், வண்டுகள், கொசுக்கள் போன்ற பல தொல்லை தரும் பூச்சிகளை அழித்து நமக்கு உதவுவதால் நாம் ஓணான்களைக் கொல்லக் கூடாது. நம்மால் முடிந்தவரை மற்ற பிராணிகளையும், பறவைகளையும், பூச்சிகளையும் கொல்லாமல் தவிர்ப்பது நல்லது.
No comments:
Post a Comment