Total Pageviews

Friday, November 12, 2010

புதிய சினிமா தலைப்புகள் !!

புதிய சினிமா தலைப்புகள் !!

எல்லாம் என் செயல்
நானே அவள்
நானே அவன்

மரத் தமிழன் !! - கதை

மரத் தமிழன் !! - கதை

இந்தக் கதை ஒரு மரக் காதலனின் மரம் நடும் செயல்களை பற்றியது. இதில் இயற்கை உண்டு.  இதில் அழகு உண்டு.  இதில் காதல் உண்டு.

கபிலன் அழகிய காட்டின் வழியே நடந்து சென்று கொண்டு இருந்தான்.  அவனுடன் அவனது காதலி கயல்விழி சென்று கொண்டு இருந்தாள். 
"கயல், இந்த காடுகளை பார்த்தாயா? எவ்வளவு அழகாக உள்ளது? எப்படித்தான் இந்த மனிதர்களுக்கு இந்த மரங்களை வெட்ட மனம் வருகிறதோ? " என்றான்.

"ஆம் கபி.  நமக்கு இவற்றை பாரத்தால் மிகவும் பிடிக்கிறது.  அதனால்தான் இந்த இருபத்தி ஓராம் நூற்றாண்டிலும் நாம் இருவரும் மரம் நட காட்டுக்குள் சுற்றிக் கொண்டு இருக்கிறோம்."
"ஏன் மரம் நட நிறைய பேர் வர மறுக்கிறார்கள்?"
"கயல், மரம் நடும் பணியை அனைவரும் மிகவும் கஷ்டமான காரியமாக நினைக்கிறார்கள். 

Friday, October 29, 2010

இடுக்கண் வருங்கால் நகுக - இன்னொரு அர்த்தம் !!

இடுக்கண் வருங்கால் நகுக - இன்னொரு அர்த்தம் !!

இடுக்கண் வருங்கால் நகுக - என்றார் வள்ளுவர். கஷ்டம் வரும்போது சிரிக்க வேண்டும். இது நேரடியான அர்த்தம். இதற்கு இன்னொரு அர்த்தமும் உண்டு.   இடுக்கண் வருங்கால் நகுக - என்றால் துன்பம் வரும் போது துன்பத்தை விட்டு நகர்ந்து சென்று விட வேண்டும் !!

வார இறுதி - கல்யாண விருந்து !!

வார இறுதி - கல்யாண விருந்து !! - சிறு கதை

சுந்தர், நித்யா இருவரும் காதலர்கள். அவர்களே நமது கதையின் நாயகர்கள். அவர்களை சுற்றியே நமது கதை செல்லப் போகிறது. சுந்தரும் நித்யாவும் பேசிக்கொள்ளும் காதல் வசனங்களுடன் நமது கதை ஆரம்பமாகிறது.

"நித்யா, நான் உன்னை மிகவும் காதலிக்கிறேன்."
"சுந்தர், நானும் உங்களை உயிருக்குயிராக காதலிக்கிறேன்."
"நித்யா, நாம் இருவரும் எப்போது திருமணம் செய்து கொள்வது?
"அதற்கு தக்க நேரம் வர வேண்டும் சுந்தர்"
"நித்யா,  நீ உன் அப்பா அம்மாவிடம் நம் காதலை சொல்ல போகிறாயா?"
"பின்னே, சொல்ல வேண்டாமா சுந்தர். என் தம்பி வேறு காலேஜில் படித்து வருகிறான்."
"உன் தம்பி காலேஜில் படிப்பதற்கும் நம் காதலுக்கும் என்ன சம்பந்தம் ?"
"என் அப்பா ரிடையர் ஆகி விட்டார்.  சுந்தர், என் தம்பி படிப்பு முடித்து வேலைக்கு வந்தால்தான் நாம் கல்யாணம் செய்து கொள்ள முடியும்."
"நித்யா, உன் தம்பி என்ன படிக்கிறான்?"
"பி. இ.  கம்ப்யூட்டர் சயன்ஸ் மூன்றாம் வருடம், இன்னும் வேலைக்கு வர இரண்டு வருடம் ஆகும்"
"அய்யயோ, அது வரை நாம் காதலித்து கொண்டுதான் இருக்க வேண்டுமா?"
"ஆமாம் சுந்தர். அதுவரை நாம் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும்."
"இதற்கு வேறு வழியே இல்லையா?"
"இல்லை"
"நித்யா, உன் கல்யாணத்திற்கு பிறகும் உன் அப்பா, அம்மாவிற்கு குடும்ப செலவிற்கு வேண்டிய பணம் கொடுத்து விடு.  நீயும் நானும்தான் சாப்ட்வேர் கம்பெனியில் நல்ல வேலையில் இருக்கிறோமே?
"இதற்கு என் அப்பா சம்மதிக்க மாட்டார் சுந்தர்"
"ஏன்?"
"அவர் தன்மானம் இடம் கொடுக்காது"
"சரி, நம் கல்யாணத்தை எப்படி செய்ய போகிறோம்?"
"வழக்கம் போல், முகூர்த்த நாள் குறித்து, மண்டபம் பார்த்து.... அப்படித்தானே ?"
"நித்யா, நம் கல்யாணத்திற்கு எவ்வளவு செலவாகும்?"
"நாம் இப்போது 2010 இல் இருக்கிறோம். குறைந்தபட்சம் ஐந்தாறு லட்சம் செலவாகும்.  இன்னும் இரண்டு வருடம் கழித்து கல்யாணம் என்றால் வருடத்திற்கு 10 சதவிகிதம் செலவு கூட்டிக் கொள்ள வேண்டும்"
"நித்யா நாம் ரிஜிஸ்டர் மேரேஜ் செய்து கொண்டால் இந்த செலவெல்லாம் மிச்சம்தானே?"
"ஆம் சுந்தர். மிச்சம்தான்"
"அப்போ ஒண்ணு செய்யலாம்.  நாம ரெண்டு பேரும்  உடனே ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்  கொள்ளலாம்.  மிச்சமாகும் ஆறு லட்சம் கல்யாண செலவு பணத்தை செலவு செஞ்சதா நினைசுகிட்டு, மாசம் நம்ம அப்பா அம்மாக்களுக்கு எவ்வளவு பணம் வேணுமோ அதை கொடுத்திடலாம்."
"சுந்தர், நாம வழக்கமா நம்ம நண்பர்கள் எல்லோரையும் கூப்பிட்டு கல்யான சாப்பாடு போடுவோம்.  ஆனா ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணினால் யாரையும் கல்யாணத்திற்கு கூப்பிட முடியாது.  அவங்களுக்கு எல்லாம் வருத்தமாயிடுமே."
"கவலைபடாதே நித்யா.  அதுக்கும் நான் ஒரு ஐடியா வெச்சிருக்கேன்."
"என்ன ஐடியா?"
"நித்யா, நாம் நம்ம நண்பர்கள் எல்லோருக்கும் நமது ரிஜிஸ்டர் மேரேஜ் பற்றி ஈமெயில் கொடுத்திடலாம்.  கல்யாணம் முடிந்த பிறகு ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் ஒரு சில நண்பர்களை கூப்பிட்டு மேரேஜ் பார்ட்டியாக நம் வீட்டிலேயே சமைத்து சாப்பாடு போடலாம்.  வாராவாரம் நம் வீட்டிற்கும் விருந்தினர்கள் வந்த மாதிரி இருக்கும்.  நமக்கும் சந்தோஷமாக பொழுது போகும்."
"இது நல்ல ஐடியாதான்.  ஆனால் நாம் யாரையாவது நண்பர்களை கூப்பிட்டு அவர்களில் யாராவது வர முடியாமல் போனால் என்ன செய்வது?"
"நித்யா, நாம் வாரம் நாலு நண்பர்களை கூப்பிடலாம்.  யாராவது ஒரு குடும்பம் வர முடியாவிட்டால் கூட மற்ற குடும்பங்கள் வருமில்லையா? அதே போல் நாமும் சில வாரம் சில நண்பர்கள் வீட்டிற்கு சாப்பிட செல்லலாம்.  இது அவர்களுக்கும் சந்தோஷம் கொடுக்கும்"
"ஆஹா, பிரமாதம் சுந்தர். உன் ஐடியா எல்லாம் ரொம்ப நல்லாருக்கே"
"இது மட்டுமில்லை நித்யா. நாம் கல்யாணங்களில் ஆயிரம் அல்லது இரண்டாயிரம் பேர்களை கூப்பிட்டு விடுகிறோம்.  யாரும் யாரையும் கவனிக்க முடிவதில்லை.  யாரும் யாருடனும் பேச முடிவதில்லை.  ஒரே மியூசிக் கச்சேரி சத்தம்.  ஆனால் நான் சொல்வது போல் வாரம் வீட்டிற்கு நாலு குடும்பங்களை கூப்பிட்டு கல்யாண விருந்து வைக்கும் போது நாம் அவர்களோடு ஆற அமர பேச முடியும். நல்ல வீட்டு சாப்பாடு சமைத்து போட இயலும். "
"அது மட்டுமில்லை சுந்தர். நாம் விருந்திற்கு கூப்பிடும் குடும்பங்களை சீக்கிரமே வந்து, நமது சமையல் மற்றும் விருந்து ஏற்பாடுகளில் அவர்களையும் உதவ சொல்லலாம் இல்லையா?
"ஆனால் இதில் எத்தனை பேர் அடுத்தவர் வீட்டிற்கு வந்து சமைக்க உதவுவார்கள் என தெரியவில்லை நித்யா.  இருந்தாலும் கேட்டு பார்க்கலாம்.  அப்படி இல்லாவிட்டால் அவர்களையே எதையாவது சமைத்து கொண்டு வர சொல்லலாம்."
"சுந்தர் அதுவும் நல்ல ஐடியாதான். நமது கல்யாண பிளான் சூப்பர்.  மண்டப செலவு கிடையாது.  நாதஸ்வர செலவு கிடையாது.  பத்திரிக்கை செலவு கிடையாது.  வீடு வீடாக கூப்பிட அலைய வேண்டாம்.  நல்ல எளிமையான ஐடியா.  எல்லாரும் இந்த மாதிரி கல்யாணம் செய்துகிட்டா எவ்வளவு நல்லா இருக்கும்?  கல்யாண செலவு இல்லாம அப்பா அம்மாவுக்கு உதவலாம்.  வாராவாரம் கல்யாண விருந்து என்று சொல்லி, ஒரு நாலஞ்சு வருசத்துக்கு நம்ம நண்பர்களை வீட்டுக்கு கூப்பிடலாம்.  எல்லாமே ரொம்ப நல்லாருக்கு"
இவ்வாறு பேசிக்கொண்ட நமது கதையின் நாயகர்களாகிய நித்யாவும் சுந்தரும் பேசியபடி அடுத்த வாரம்  ரிஜிஸ்டர் மேரேஜ்  செய்து கொண்டார்கள்.
இரண்டு அப்பா அம்மா கால்களிலும் மாலையும் கழுத்துமாக விழுந்து, நமஸ்கரித்து, திட்டும் ஆசிர்வாதமும் வாங்கிக் கொண்டார்கள்.  வாராவாரம் நாலு நண்பர்களுக்கு கல்யாண சாப்பாடு போடுவதில் ஒரே கூத்துதான்.  இப்போது அவர்களுக்கு கல்யாணமாகி ஐந்து வருடம் ஆகி விட்டது.  இரண்டு குழந்தைகள் வந்தாகி விட்டது.  பெரியவன் ஒன்றாம் கிளாஸ் படிக்கிறான்.  சின்னவள் ஒன்றரை வயது ஆகிறது.  ஆனால் இன்னமும் அவர்களது வார இறுதி கல்யாண விருந்து முடிந்த பாடில்லை.   அவர்களது வார இறுதி கல்யாண விருந்து சாப்பிடுவதற்கு புதுப்புது நண்பர்கள் கிடைக்கிறார்கள்.   நீங்களும் அவர்களது நண்பர்களாக மாறி,  அவர்களது "வார இறுதி கல்யாண விருந்து" சாப்பிட விரும்பினால் தொடர்பு கொள்ள வேண்டிய நபர்: திரு. சுகவனம் நடராஜன்.  Email:  nsugavanam@gmail.com phone: AirTel: 99400-58497  BSNL: 94454-37117
இந்த கதையின் முடிவு பொன்மொழி:
இந்தக் கதை அறிவுரை சொல்லும் ரேடியோ நாடகம் போல் இருக்கும்.  பிடிக்காவிட்டால் அடுத்த கதைக்கு சென்று தப்பித்துக் கொள்ளவும்.  இந்தப் பொன்மொழியை நான் ஏன் கதை ஆரம்பித்திலேயே சொல்லவில்லை என்றால் - எனது அருமை கதைகளை படிக்க, உங்களை விட்டால் எனக்கு வேறு யார் கிடைப்பார்கள்?

https://www.youtube.com/watch?v=6Cjnhxz8oHU

http://sugavanam-tamil-stories-jokes.blogspot.com/

Thursday, October 28, 2010

முள்ளம்பன்றி குட்டி கதை

முள்ளம்பன்றி குட்டி கதை - சிறுவர் கதை

ஒரு  காட்டில் ஒரு தாய் முள்ளம்பன்றியும் அதன் குட்டியும் வசித்து வந்தன.  குட்டி முள்ளம்பன்றி மிகவும் துருதுருவென இருக்கும்.  அங்கும் இங்கும் ஓடிக்கொண்டு இருக்கும்.  ஒரு நாள் அது காட்டில் உள்ள மற்ற விலங்கு குட்டிகளுடன் விளையாட சென்றது.  மற்ற விலங்கு குட்டிகள் ஓடி பிடித்து விளையாடிக்கொண்டு இருந்தன.  முள்ளம்பன்றி குட்டி அங்கே சென்று "என்னையும் விளையாட சேர்த்துக் கொள்ளுங்கள்" என்று வேண்டியது. மற்ற குட்டிகளும் அதை விளையாட சேர்த்துக் கொண்டன.   எல்லா விலங்கு குட்டிகளும் ஓடி பிடித்து விளையாடிக்  கொண்டு இருந்தன.    முள்ளம் பன்றி குட்டி ஓடி பிடித்து விளையாடும் போது அதன் முட்கள் மற்ற குட்டிகள் மீது குத்தியது.  இதனால் மற்ற குட்டிகள் முள்ளம் பன்றி குட்டியிடம் "உன்னுடைய முட்கள் எங்கள் மேல் குத்துகிறது.  அதனால் எங்களுடன் விளையாட வேண்டாம்." என்று கூறின.  அதற்கு முள்ளம் பன்றி குட்டி "நான் உங்கள் மேல் குத்தாமல் விளையாடுகிறேன்.  என்னை விளையாட்டிலிருந்து நீக்க வேண்டாம்"  என்று கேட்டது.  ஆனாலும் மற்ற குட்டிகள் அதற்கு சம்மதிக்கவில்லை.  இதனால் மிகவும் மன வருத்தம் அடைந்த முள்ளம் பன்றி குட்டி சோகமாக வீடு திரும்பியது. அம்மாவிடம் வந்து அழுதது.  அது தன் அம்மாவிடம் "அம்மா எனக்கு இந்த முட்கள் வேண்டாம்.  எல்லாவற்றையும் வெட்டி விடு" என்று கூறியது.  அதற்கு அதன் அம்மா "நீ அப்படி சொல்ல கூடாது.  இயற்கையில் கிடைத்துள்ள அந்த முட்கள்தான் நமக்கு அழகு.  நம்மை எதிரிகள் யாராவது தாக்க  வந்தால் நாம் அந்த முட்களால் அவர்களை குத்தி தப்பித்து கொள்ளலாம்" என்றது. 
ஆனால் குட்டி அதை காது கொடுத்து கேட்கவில்லை.  "அதெல்லாம் கிடையாது. எனக்கு இப்போதே எனது முட்களை வெட்டி விடு" என்று அடம் பிடித்தது. 
அதற்கு அதன் அம்மா "நான் அந்த முட்களை வெட்டி விட்டு விடுவேன்.  ஆனால் திரும்பி வேண்டுமென்றால் பிறகு உடனடியாக கிடைக்காது" என்றது.
"அதனால் பரவாயில்லை" என்றது குட்டி.
தாயும் தன் குட்டியின் ஆசை படியே அதன் முட்களை வெட்டி விட்டது.
முட்களை கத்தியால் சரித்து விட்ட பின் முள்ளம் பன்றி குட்டி மொழு மொழுவென இருந்தது.  உடனே முள்ளம் பன்றி குட்டி மீண்டும் தனது நண்பர்களுடன் விளையாட சென்றது.   மொழு மொழுவென இருந்த முள்ளம் பன்றி குட்டியை பார்த்தவுடன் எல்லா குட்டிகளும் கொல்லென சிரித்து விட்டன.  உடனே கோபம் கொண்ட முள்ளம் பன்றி குட்டி "நீங்கள் எல்லாரும் குத்துகிறது என்று சொன்னதால்தான் நான் என் அம்மாவிடம் சொல்லி முட்களை வெட்டி கொண்டு வந்திருக்கிறேன்.  நீங்கள் அனைவரும் இப்படி சிரித்தால் எனக்கு கோபம் வரும்" என்று கூறியது. 
உடனே மற்ற குட்டிகள் "சேச்சே, அப்படியெல்லாம் இல்லை.  இப்போது நீ மிகவும் அழகாக இருக்கிறாய்" என்று கூறி சிரித்துக் கொண்டன. "உன்னை நாங்கள் மறுபடியம் விளையாட்டில் சேர்த்துக் கொள்கிறோம்." என்று கூறின.
முள்ளம் பன்றி குட்டி மொழு மொழுவென இருந்ததால் எல்லா குட்டிகளும் அதை தொட்டு தொட்டு பார்த்தன. பிறகு ஒரு குரங்கு குட்டி அதை கிள்ளி, கிண்டல் செய்தது.  மீண்டும் கோபம் கொண்ட முள்ளம் பன்றி குட்டி, குரங்கு குட்டியுடன் சண்டைக்கு சென்றது. இப்படியாக சண்டை அதிகரித்தது. 
இதனால் மிகவும் மன வருத்தம் அடைந்த முள்ளம் பன்றி குட்டி, மீண்டும்  சோகமாக  வீடு  திரும்பியது.
அதைப் பார்த்த தாய் முள்ளம் பன்றி, குட்டியை பார்த்து "ஏன் மிகவும் சோகமாக வீடு திரும்பி விட்டாய்?" என்று கேட்டது.
முள்ளம் பன்றி குட்டி, நடந்ததை கூறியது. உடனே அதன் அம்மா "இதற்குத்தான் நான் முள்ளை எல்லாம் வெட்ட வேண்டாம் என்று கூறினேன்" என்றது.
அப்போது முள்ளம் பன்றி குட்டி, "எனக்கு மறுபடியும் எனது முட்கள் வேண்டும். எப்போது அவை வளரும்?" என்று கேட்டது.
அதன் அம்மா " அவை வளர ஒரு மாதம் ஆகும்"  என்றது.
அதற்கு குட்டி "ஐயோ, அது வரை நான் என்ன செய்வது?" என்று வருத்தப் பட்டது.
அதன் அம்மா "அது வரை விளையாட எங்கும் போக வேண்டாம்.  வீட்டில் பாடம் படித்துக் கொண்டு சும்மா இரு" என்றது.
இப்படியாக ஒரு மாதம் ஓடியது.  அதற்குள் குட்டிக்கு முட்கள் மீண்டும் வளர்ந்து விட்டன.  மறுபடியும் முள்ளம் பன்றி குட்டி  தனது நண்பர்களுடன் விளையாட சென்றது.  இப்போது மற்ற குட்டிகள் அதைப் பார்த்து "மீண்டும் நீ முட்களுடன் வந்து விட்டாயா? நீ எங்களுடன் விளையாடினால் உன் முட்கள் எங்கள் மேல் குத்தும்" என்றன.
மீண்டும் கோபம் கொண்ட முள்ளம் பன்றி குட்டி, "என்ன நீங்கள் எல்லாம் விளையாடுகிறீர்களா? முள் இல்லாமல் வந்தால் கிண்டல் செய்து என்னை கிள்ளுகிறீர்கள்.  முட்களுடன் வந்தால் குத்தும் என்கிறீர்கள். இப்போது என்னை விளையாட்டில் சேர்த்துக் கொள்கிறீர்களா?  அல்லது எல்லாரையும் எனது முள்ளால் நன்றாக குத்தி விடட்டுமா? " என்று அதட்டியது.
இதைப் பார்த்து பயந்த மற்ற குட்டிகள் அதை விளையாட்டுக்கு சேர்த்துக் கொண்டன.  இப்போது முள்ளம் பன்றி குட்டி  தனது நண்பர்களுடன் விளையாடி சந்தோசமாக நாட்களை கழித்தது.  --  முற்றும் --

https://www.youtube.com/watch?v=cStw_X0cb4A&t=33s 

Tuesday, October 26, 2010

சிறுத்தை குட்டி கதை

சிறுத்தை குட்டி கதை - சிறுவர் கதை !!

ஒரு அழகான அடர்ந்த காடு.  அதில் ஒரு பெண் சிறுத்தை புலி வாழ்ந்து வந்தது.   அதற்கு மூன்று குட்டிகள் இருந்தன.  அவற்றை சிறுத்தை புலி பாலூட்டி சீராட்டி வளர்த்து வந்தது.  சிறுத்தை குட்டிகள் சிறிது சிறிதாக வளர்ந்து வந்தன.  அப்போது அந்த சிறுத்தை குட்டிகளுக்கு தாய் சிறுத்தை வேட்டையாட கற்று கொடுத்தது.  அதில் முதல் இரண்டு குட்டிகள் சமர்த்தாக தாய் சிறுத்தையுடன் சேர்ந்து கொண்டு நன்கு வேட்டையாடின.  ஆனால் மூன்றாவது குட்டி வேட்டையாடுவதில் அதிக ஆர்வம் காட்டவில்லை.  மூன்றாவது குட்டிக்கு வேட்டையில் இறந்து போகும் மான்களை பார்த்தால் பாவமாக இருந்தது.   

அது தன்  தாய் சிறுத்தையிடம் "அம்மா, எனக்கு நாம் வேட்டையாடும்போது இறக்கும் மிருகங்களை பார்த்தால் எனக்கு பாவமாக இருக்கிறது' என்றது.  

அதற்கு தாய் சிறுத்தை 'நாம் அப்படி பாவப்பட்டு கொண்டு இருந்தால் எதையுமே சாப்பிட இயலாது' என்றது. 

குட்டி சிறுத்தை 'நம்மை யார் இப்படி மாமிசம் சாப்பிடும் படி செய்தது?' என்று கேட்டது. 
தாய் சிறுத்தை 'நம்மை கடவுள் மாமிசம் சாப்பிடும்படி படைத்து உள்ளார்' என்றது. 
குட்டி சிறுத்தை 'நாம் ஏன் செடி கொடிகளை சாப்பிட கூடாது?' என்றது.
தாய் சிறுத்தை 'அதை நீ கடவுளிடம்தான் கேட்க வேண்டும்' என்றது.
'நான் கடவுளை எங்கே காண முடியும்?' என்று கேட்டது. 
'நீ கடவுளை காண தவம் இருந்தால் காண இயலும்' என்றது தாய் சிறுத்தை.
உடனே குட்டி சிறுத்தை கடவுளை காண தவம் செய்தது.

Sunday, October 24, 2010

வீட்டை சுற்றி மரம் வளர்த்து கோடீஸ்வரன் ஆகலாம் !!

வீட்டை சுற்றி மரம் வளர்த்து கோடீஸ்வரன் ஆகலாம் !!

உங்கள் வீட்டை சுற்றி மரங்கள் நட இடம் இருந்தால் உங்கள் வீட்டை சுற்றி தேக்கு மரம் நூறு மரங்கள் நட்டு கோடீஸ்வரர் ஆகுங்கள்.  தற்போது ஒரு மரம் விலை ரூபாய் 25,000/- முதல் ரூபாய் 30,000/- வரை விற்கிறது.  இன்னும் இருபது வருடத்தில் ஒரு மரம் ஒரு லட்ச ரூபாய் வரை விலை போகும். ஆகவே உங்கள் வீட்டை சுற்றி ஒரு நூறு மரங்கள் நட்டு விட்டால் இருபது வருடம் கழித்து நீங்கள் கோடீஸ்வரர் ஆகி விடுவீர்கள்.  தேக்கு மரங்களை ஆடு,  மாடு போன்றவை மேய்வதில்லை. இதனால் அவை நன்கு வளர்ந்து உங்களுக்கு பலன் அளிக்கும்.

Friday, October 22, 2010

மரம் வளர்க்கும் முதியோர் இல்லம்

மரம் வளர்க்கும் முதியோர் இல்லம் !! 
மரம் வளர்த்தல் மக்களுக்கும் நல்லது. சுற்று சூழலுக்கும்  நல்லது.  சில முதியோர்கள் கணவன் அல்லது மனைவி இறந்த பிறகு தனிமையில் துணை இல்லாமல் மன வருத்ததோடு வாழ்ந்து வருகிறார்கள்.  அத்தகைய முதியோர்களுக்கு உதவும் வகையில் ஒரு முதியோர் இல்லம் அமைத்து அதை சுற்றி உள்ள இடங்களில் மரம் வளர்க்க திட்டம் இட்டுள்ளோம்.  ஆகவே உங்களுக்கு தெரிந்த முதியோர்கள் தனிமையில் வாடினால் எங்களுக்கு தகவல் தெரிவிக்கவும்.  அல்லது அவர்களையே எங்களை தொடர்பு கொள்ள சொல்லவும்.  அவர்களுக்கு தக்க புகலிடம் அளித்து மரம் வளர்க்க உதவுகிறோம். தொடர்பு கொள்ள தொலைபேசி எண்:  99400 58497 சென்னை  94454 37117.  இன்னும் சில முதியோர்கள் அவர்களது குழந்தைகள் வெளி நாடுகளில் வசிப்பதால் ஆதரவு இல்லாமல் கஷ்டபடுகிறார்கள்.  அவர்களும் சந்தோசமாக மரம் வளர்க்க உதவுகிறோம். 

Wednesday, October 6, 2010

ஆயுத பூஜைக்கு பூசணிக்காய் உடைத்தல்


ஆயுத பூஜைக்கு பூசணிக்காய் உடைத்தல்

ஆயுத பூஜை செய்பவர்கள் பல பேர் பூசணிக்காய் சுவாமிக்கு படைத்து விட்டு பிறகு வாசலில் போட்டு உடைத்து விடுகிறார்கள்.  இதனால் திருஷ்டி கழியும் என நம்புகிறார்கள்.  ஆனால் இது போன்று வாசலில் உடைக்கப்படும் பூசணி காய்களில் சிலர் இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது வழுக்கி விழுந்து விடுகிறார்கள்.  இதனால் பூசணிக்காய் சுவாமிக்கு படைத்த பிறகு வாசலில் உடைக்காமல் ஏழைகளுக்கு தானமாக கொடுக்கலாம்.  அல்லது  அவரவர்கள் வீட்டிலேயே கூட்டு, கறி, பொரியல் போன்றவை பூசணிக்காயில் செய்து சாப்பிடலாம்.  இது அவர்கள் உடலுக்கும் நல்லது. சுற்று சூழலுக்கும் நல்லது.  ஒரு பூசணி கொடி, ஒரு காயை உருவாக்க மிகவும் கஷ்டபடுகிறது.  இதனால் அதை சமைத்து சாப்பிடுவது மிக சிறந்ததாகும்.  அதை வீணடித்து தெருவில் உடைப்பது யாருக்கும் நன்மை பயக்காது.  இதனால் நாம் பூசணி கொடிக்கும் கெடுதல் செய்கிறோம்.  சுற்று சூழலுக்கும் கெடுதல் செய்கிறோம்.  ஆகவே பூசணிக்காய் சுவாமிக்கு படைத்து விட்டு பிறகு வாசலில் போட்டு உடைக்காமல் சமைத்து சாப்பிடுவது நல்லது.  நல்லதே நினைப்போம்.  நல்லதே நடக்கும்.   இதே போன்று அம்மாவாசை போன்ற நாட்களிலும் பூசணிக்காய் வாசலில் போட்டு உடைக்காமல் சமைத்து சாப்பிடுவது நல்லது.  அல்லது ஏழைகளுக்கு தானமாக கொடுக்கலாம்.

கடல் நீரை விற்பனை செய்வோம்

கடல் நீரை விற்பனை செய்வோம். 

இது மிக சிறந்த தொழில் வாய்ப்பு. 

கடல் நீரிலிருந்து உப்பு தயாரித்து விற்பதற்கு பதில் கடல் நீரையே பாக்கெட் செய்து விற்பது மிகவும் சுலபம். மற்றும் அதிக லாபமும் தரும் தொழிலாகும். 
இதை குடிசை தொழிலாகவும் செய்யலாம்.  அல்லது பெரிய தொழிலாகவும் செய்யலாம்.  கடலோர மீனவர்கள் காலி மினரல் வாட்டர் பாட்டில்களில் கடல் நீரை பிடித்து விற்கலாம்.  இது மீனவர்களுக்கு மாற்று வருவாய் திட்டமாக செயல்படும்.  பெரும்பாலான நேரங்களில் நாம் உப்பை நீரில் கரைத்து உபயோக படுத்துகிறோம்.  இது போன்ற சமயங்களில் கடல் நீரையே பயன் படுத்தலாம்.  பால் பாக்கெட் போல 250 மிலி, 500 மிலி    பாக்கெட்டுகளில் அடைத்து விற்கலாம்

Friday, October 1, 2010

சின்ன சின்ன சினிமா தலைப்புகள்

சின்ன சின்ன சினிமா தலைப்புகள்

உடனே கொன்று விடு.
கொல்லாமல் கொல்.
நீயா நானா?
இது சினிமாதானா?
நடப்பது நிஜம்.
அமைதிக்கொலை.
அணுவுக்குள் கடல்.

கல். கொல். செல்.

இல் வாழ்க்கைக்கு ஒரு இனிய போதனை

இல் வாழ்க்கைக்கு ஒரு இனிய போதனை
"கடமையை செய்யுங்கள்.  பலன் எதிர்பார்க்காதீர்கள் "

நான் ஞானியாகிவிட்டேன்.

நான் ஞானியாகிவிட்டேன்.

சாக்ரடிஸ் பொன்மொழி : கல்யாணம் செய்து கொள்ளுங்கள்.  மனைவி நல்லவளாக இருந்தால் வாழ்க்கை சந்தோசமாக அமையும்.  இல்லாவிட்டால், நீங்கள் ஞானியாகி விடுவீர்கள்.  ஆகவே, நான் ஞானியாகிவிட்டேன்.

ஒரு வேண்டுகோள் : நான் ஞானியானதை என் மனைவியிடம் சொல்ல வேண்டாம்.

என் ஞான போதனை: நீங்கள் ஞானியானால் உங்கள் மனைவியிடம் சொல்ல வேண்டாம்.  அப்போதுதான் நீங்கள் எப்போதும் சந்தோசமாக இருக்க முடியும்.

Thursday, September 23, 2010

மாம்பழ குரங்கு - குழந்தைகள் கதை

ஒரு ஊரில் ஒரு அழகான மலை
மலை மேல் ஒரு முருகன் கோயில்கோவிலுக்கு செல்லும் வழி எல்லாம் நிறைய கடைகள் இருந்தனஅங்கே ஒரு வியாபாரி மாம்பழங்களை கொட்டி கடை வைத்திருந்தான்பக்கத்தில் ஒரு மரத்தில் ஒரு குரங்கு அதை பார்த்ததுஅந்த குரங்கு இது வரை மாம்பழம் பார்த்ததே இல்லை.
முதல் முறை மாம்பழத்தை பார்த்ததும் அதற்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது.  குரங்கு கடைக்காரனை பார்த்து "இது என்ன பழம்?" என்று கேட்டது.  "இது பெயர் மாம்பழம்" என்றான் கடைக்காரன்.
"எனக்கு ஒரு மாம்பழம் சாப்பிட கொடு" என்று கேட்டது குரங்கு. 
"சும்மா எல்லாம் கொடுக்க முடியாது.  ஒரு பழம் பத்து ரூபாய்.  காசு கொடுத்தால்தான் பழம் கொடுப்பேன்"  என்றான் கடைக்காரன். 
குரங்குக்கு மாம்பழம் சாப்பிட வேண்டும் என்ற ஆர்வம் கூடிகொண்டே போனது.  "என்னிடம் காசு கிடையாது" " நான் கட்டில் வாழும் குரங்கு.  எனக்கு ஒரு பழம் இலவசமாக கொடுக்க கூடாதா? " என்று குரங்கு கேட்டது.
"அதெல்லாம் முடியாது. காசில்லாவிட்டால் ஒரு பழம் கூட கிடையாது" என்றான் கடைக்காரன்.
குரங்குக்கு மிகவும் சோகமாக போய் விட்டது. குரங்குக்கு ஒரே அழுகையாக வந்தது. அது ஒரு மரத்தடியில் உட்கார்ந்து அழ ஆரம்பித்தது. 
குரங்கின் அழு குரல் கேட்டு அங்கே தியானத்தில்  ஆழ்ந்திருந்த  ஒரு சித்தர் கண் விழித்தார். 
அவர் அந்த குரங்கிடம் "ஏன் அழுகிறாய்?" என்று கேட்டார்.
குரங்கு நடந்ததை கூறியது.
உடனே அந்த சித்தர் தனது பணப் பையில் தேடி ஒரு பத்து ரூபாயை எடுத்து அந்த கடைக்காரனிடம் கொடுத்து ஒரு நல்ல மாம்பழம் வாங்கினர்.
அதை குரங்கிடம் கொடுத்து சாப்பிட சொன்னார்.
குரங்கிற்கு ஒரே மகிழ்ச்சி.  அது அந்த மாம்பழத்தை சாப்பிட ஆரம்பித்தது.
மாம்பழ சுவையில் குரங்கு மயங்கி போயிற்று. 
"ஆஹா, இது போன்ற சுவையான பழத்தை இது வரை சாப்பிட்டதே இல்லை." என்றது
அப்போது சித்தர் "இது போன்ற மாம்பழம் உனக்கு தொடர்ந்து கிடைக்க நான் வழி சொல்லட்டுமா?" என்று கேட்டார்.
அதை கேட்ட குரங்கு மிகவும் மகிழ்ச்சி அடைந்து "ஐயா, சொல்லுங்கள்" என்று கேட்டது.
"இங்கு மாம்பழம் வாங்கும் எல்லோரும் மாம்பழம் சாப்பிட்டு விட்டு கொட்டையை இங்கேயே போட்டு விட்டு சென்று விடுவார்கள்.  நீ அதை எல்லாம் கொண்டு போய் மலை மேல் நட்டு தண்ணீர் ஊற்றி வந்தால் அதில் மாஞ்செடி முளைக்கும்.  மாஞ்செடி பிறகு வளர்ந்து மாமரமாக மாறும்.  பிறகு அதில் நிறைய மாம்பழம் பழுக்கும்.  அவற்றை நீங்கள் அனைவரும் பறித்து சாப்பிடலாம்"  என்றார் சித்தர்.
இதை கேட்ட குரங்கு, அனைவரும் சாப்பிட்டு போட்ட கொட்டைகளை பொறுக்க ஆரம்பித்தது.  இதை பார்த்த மற்ற குரங்குகள் " நீ என்ன செய்கிறாய்?" என்று கேட்டன.
" நான் இந்த கொட்டைகளை நமது மலை மேல் கொண்டு சென்று நட போகிறேன்" என்றது.
"எல்லோரும் சாப்பிட்டு எச்சை செய்து போட்ட கொட்டைகளை ஏன் பொறுக்குகிறாய்?" என்று மற்ற குரங்குகள் கேட்டன.
 "அதனால் பரவாயில்லை.  நமக்கு பிற்காலத்தில் நல்ல மாமரம் வளர்ந்து நல்ல மாம்பழங்கள் கிடைக்கும்". என்றது குரங்கு.
இதை கேட்ட மற்ற குரங்குகளும் கீழே கிடந்த எல்லா மாம்பழ கொட்டைகளையும் பொறுக்கி மேலே கொண்டு சென்று போய் நட்டன.
சில வருடங்களில் அந்த மலை உச்சி பெரிய மாந்தோப்பாக மாறியது. அங்கே நிறைய மாம்பழங்கள், மாங்காய்கள் குரங்குகளுக்கு கிடைத்தது.  குரங்குக்கு மாம்பழம் வாங்கி கொடுத்த சித்தர் சிறிது காலம் பல ஊர்களுக்கு சென்று திரும்பி வந்தார்.  அவர் அந்த மாந்தோப்பை பார்த்து ஆச்சர்யபட்டு அந்த தோப்பிற்குள் சென்றார்.  அப்போது அந்த தோப்பிற்கு காவல் காத்து கொண்டிருந்த காவல் குரங்குகள் அவரை அடையாளம் கண்டு கொண்டு வணங்கின.  அவரை தலைவர் குரங்கிடம் அழைத்து சென்றன.
அவரை பார்த்து தலைவர் குரங்கு, "அய்யா,  நீங்கள் கொடுத்த ஆலோசனையினால் நாங்கள் இவ்வளவு பெரிய தோப்பை உருவாக்க முடிந்தது" என்றது.  "என்னதான் நான் அறிவுரை கூறினாலும் நீங்கள் அதை கேட்டு செயல் பட்டது மிகவும் சந்தோசம்" என்றார் சித்தர்.
அவர் அந்த தலைவர் குரங்கை பார்த்து "நீ உன் கூட்டத்துடன் இணைந்து இவ்வளவு பெரிய மாந்தோப்பை உருவாக்கியதால் நீ இன்றிலிறிந்து "மாம்பழ குரங்கு" என்று அழைக்க படுவாய்"  என்று ஆசிர்வதித்தார். 
அவர் ஆசியை பெற்று,  மாம்பழ குரங்கும் அதன் கூட்டமும் மிகவும் சந்தோஷமாக அந்த மாந்தோப்பில் வாழ்ந்து வந்தன.
மாம்பழ குரங்கு கதை - பாகம் ஒன்று - முற்றும்.

மரணமில்லாத ஒன்றே ஒன்று - மரணம் மட்டுமே... மரணம் - மனிதனால் தவிர்க்க முடியாத ஒன்று


மரணமில்லாத ஒன்றே ஒன்று - மரணம் மட்டுமே... மரணம் - மனிதனால் தவிர்க்க முடியாத ஒன்று...

மரணம் - இயற்கை மனிதனுக்கு கொடுக்கும் கடைசி பரிசு.
மரணம் -  மனிதனின் மீளா உறக்கம்.
மரணம் - மனிதனால் தவிர்க்க முடியாத ஒன்று
மரணம் மூன்று வழிகளில் வருகிறது.
ஒன்று - மூப்பு - வயதாகி இறப்பது
இரண்டு - விபத்தில் இறப்பது
மூன்று - வியாதிகளால் இறப்பது.

இது தவிர கொலை,தற்கொலை போன்றவற்றாலும் மனிதர்கள் இறக்கிறக்கிறார்கள்...

https://sugavanam-tamil-stories-jokes.blogspot.com/2010/09/blog-post_2647.html

N.Sugavanam M.A., F.I.I.I., MBA - Ph: 9176244989

Eamil:  ceo@sugaconsulting.in    WhatsApp: 8825518608

பூமியே நமது தாய். சூரியனே நமது தந்தை.


பூமியே நமது தாய்

சூரியனே நமது தந்தை.

நாம் அனைவரும் சகோதர சகோதரிகளே

நல்ல சிந்தனைகள் எல்லா பக்கத்திலிருந்தும் நம்மை வந்து அடையட்டும் - ரிக் வேதம்

மேலே கொடுக்கப்பட்டுள்ள அழகிய கருத்துகளை ஒரு ஹைக்கூ கவிதையாக மாற்ற முடியும்.

ஒரு காதலன் தனது காதலியை பார்த்து சொல்கிறான்.

"பூமியே நமது தாய்

சூரியனே நமது தந்தை.

எனக்கு அனைவரும் சகோதர சகோதரிகளே. உன்னை தவிர..."

மரத்தை வளர்ப்பவன் சொர்க்கம் செல்வான்

மரங்கள் தெய்வீகமானவைஅவற்றை போற்றி பாதுகாப்பது நமது கடமை

மரத்தை ரசிப்பவன் மனிதன். மரத்தை வளர்ப்பவன் புனிதன் 

மரத்தை வளர்ப்பவன் சொர்க்கம் செல்வான் 

மரத்திற்கு நீர் ஊற்றுபவனுக்கு செல்வம் செழிக்கும் 

தென்னை மரம்

தென்னை மரம் - மிகவும் பயனுள்ள மரம்.
தென்னை மரத்தின் ஒவ்வொரு பகுதியும் மனிதனுக்கு பயன்படுகிறது
நாம் தேங்காயை சமையலுக்கு பயன்படுத்துகிறோம்
தேங்காய் பர்பி, பாயசம், தேங்காய் பால் போன்ற இனிப்பு பலகாரங்கள் செய்யவும், கூட்டு, பொரியல், போன்றவற்றில் சுவை சேர்க்கவும் தேங்காய் பயன்படுகிறது
இளநீர் உடலுக்கு மிகவும் நல்லது.
தேங்காய் மட்டை பலவித பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது
தென்னங்கீற்றுகள் கூரை செய்ய பயன்படுகிறது
தென்னைகூரை போடப்பட்ட வீடு மிகவும் குளுமையாக இருக்கும்.
தேங்காய் மட்டைகளை மொட்டை மாடியில் போட்டு விட்டால் வீட்டிற்குள் வெயில் தெரியாது.
தென்னை மரம் கடலில் பயணம் செய்ய கட்டு மரம் செய்ய பயன்படுகிறது
இது போல் பல நூறு பயன் உள்ள தென்னை மரம் தெய்வத்தின் அவதாரம்.
ஆகவே தென்னை மரத்திற்கு நீர் ஊற்றுவது மிகவும் புண்ணியம் தரும் காரியம் ஆகும்.
தென்னை மரத்திற்கு நீர் ஊற்றுபவனுக்கு மிக்க செல்வம் கிடைக்கும்.
ஆகவே உங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள தென்னை மரத்திற்கு தினமும் ஒரு சொம்பு தண்ணீர் ஊற்றவும்
தென்னை மரம் வளர்ப்பவன் சொர்க்கம் செல்வான்.  
எழுதியவர் - சுகவனம் நடராஜன்