சிறந்த நீர் பாசன வசதிகள் விவசாய விளைச்சலை சிறப்பாக அதிகரிக்கும். தற்போது பிரபலமாகியுள்ள "சொட்டு நீர் பாசன முறை" மனித அறிவின் மற்றுமொரு கண்டுபுடிப்பாகும். நீண்ட பிளாஸ்டிக் குழாய்கள் மூலமாக நீரைச் செலுத்தி மரங்கள் உள்ள இடங்களில் மட்டும் அதன் வேர்களில் சொட்டுச் சொட்டாக நீர் விடச் செய்வது சொட்டு நீர் பாசன முறையாகும். இம்முறையால் வறட்சியான பகுதிகளில் கூட மா, பலா, தென்னை, மரத் தோப்புகளை அமைக்க முடிகிறது. இதனால் விவசாய உற்பத்தி பல மடங்கு அதிகரிக்கிறது. விவசாய உற்பத்தி அதிகமாவதால் குறைந்த விலையில் நல்ல உணவு தயாரித்து உன்ன முடிகிறது. இதனால் ஏழைகளின் பசிக் கொடுமை குறைய வாய்ப்புள்ளது. இந்த சொட்டு நீர் பாசன முறையை தற்போது பல விவசாயிகள் பயன்படுத்தி நல்ல பலனும் லாபமும் பெற்று வருகிறார்கள். நன்மை செய்யும் புதிய முறைகளை ஏற்றுக் கொள்வது நல்லது.
No comments:
Post a Comment