Total Pageviews

Saturday, July 16, 2011

பத்மநாபா கோயில் பொக்கிஷத்தை பாதுகாப்பது எப்படி?

பத்மநாபா கோயில் பொக்கிஷத்தை பாதுகாப்பது எப்படி?

இந்து மதம் உலகின் தலைசிறந்த அமைதியான மதங்களில் ஒன்றாகும்.  இந்து மதம் இனிமையும் அன்பும் பரப்பும் மதமாகும்.  இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் அமைதி வழியில் ஆக்கப் பணியில் ஈடுபடும் தன்மையுடைவர்கள்.   இது போல் ஆக்கப் பணியில் ஈட்டும் செல்வதை இந்துக்கள் அவர்களது கோயில்களுக்கு அன்பளிப்பாக காணிக்கையாக செலுத்துவது வழக்கம்.  இவ்வாறு சேர்ந்த பொற்காசுகளையும் நகைகளையும் கோயில் செலவிற்கு தேவைப்பட்டால் உபயோகித்துக் கொள்ள மன்னர்களாலும் மக்களாலும் கொடுக்கபடுவது வழக்கம்.  இவ்வாறு சேர்ந்த சில இந்துக்கோயில்களின் கோடிக்கணக்கான பெறுமானமுள்ள தங்க நகைகளும், காசுகளும் சில மன்னர்களால் முகலாய காலத்தில் கொள்ளை அடிக்கப்பட்டன.  அவ்வாறு சில கொடுங்கோலர்களால் கொள்ளை அடிக்கபட்டதிலிருந்து தப்பித்த சில கோயில்களில் ஒன்றுதான் திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபா சுவாமி கோவில்.  சமிபத்தில் (ஜூலை 2011 ) அங்கு பெரும் பொக்கிஷம் அந்தக் கோவிலின் நிலவறையில்  கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.  இதன் மதிப்பு சுமார் ரூபாய் ஒரு லக்ஷம் கோடி இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.  இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டவுடன் மிகப் பெரிய கோடிஸ்வரராக மாறிவிட்ட பத்மநாப சுவாமியின் பொக்கிஷத்தையும் பத்மநாப சுவாமிகளையும் காப்பாற்ற வேண்டியது அனைத்து இந்துக்களின் கடமையாகும்.  

பத்மநாபா சுவாமி கோயிலுக்கு வரக்கூடிய ஆபத்துகள் என்ன?

  1. தற்போது இந்தியாவில் பலரிடமும் உழைக்காமல் பணம் சம்பாதிக்க விரும்பும் சோம்பேறித்தனம் வளர்ந்து விட்டது.
  2. தற்போது உலகில் பணப்பேராசை பிடித்து அலைபவர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது.
  3. மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை - இது மூன்றுமே பல மதவாதிகளின், சில மதங்களின் நோக்கமாக மாறிவிட்டது.
  4. இதைத்தவிர திருடர்கள், கொள்ளையர்கள், புராதனப் பொருள்  கடத்துபவர்கள், சில தீய நோக்கமுள்ள அரசியல்வாதிகள்,சில கொடூர நோக்கமுள்ள மதத் தீவிரவாதிகள்,  சுயநலம், சோம்பேறித்தனம், லஞ்சம் போன்றவற்றில் ஊறிய சில அரசு ஊழியர்கள், அதிகாரிகள் போன்றவர்களும், பணம், பதவி, போக வாழ்க்கை போன்றவற்றையே நோக்கமாகக் கொண்டு வாழ்ந்து வருகிறார்கள்.
  5. இவர்கள் அனைவரது தீய கண்களும் மகா மகா பத்மநாபா கோயில் பொக்கிஷத்தை நோக்கி உள்ளது.
  6. இது தவிர சில சோம்பேறி மனிதர்களும், சமத்துவம், வறுமை ஒழிப்பு என்ற பேரில் பத்மநாபா கோயில் பொக்கிஷத்தை கபளீகரம் செய்யும் நோக்கத்தில் பேசி வருகிறார்கள்.
  7. இது போன்ற தீய நோக்கமுள்ள பலரிடமிருந்து பத்மநாப சுவாமியையும் அவரது செல்வத்தையும் பாதுகாத்து இந்து மதம் தழைத்தோங்க நாம் அனைவரும் ஒன்றுபட்டு பாடுபட வேண்டும். 


இந்து மதம் செழிக்கவும் பத்மநாபா சுவாமி செல்வம் பாதுகாக்கவும் என்ன செய்ய வேண்டும்?

பத்மநாபா சுவாமி கோவிலின் ஒட்டுமொத்த ஒரு லக்ஷம் கோடி நகைகளும் ஒரே இடத்தில இருக்கும் வரை நாம் மேல சொன்ன பல்வேறு தீய சக்திகளின் தீய மனிதர்களின் ஆபத்து உள்ளது.

ஆகவே அந்த தெய்வீக சொத்தை கீழ் காணும் முறையில் பிரித்து பாதுக்காக வேண்டும்.
  1. ஒரு லக்ஷம் கோடி பெறுமானமுள்ள  நகைகளை ஒரு லக்ஷம் பகுதிகளாக -ஒவ்வொன்றும் ஒரு கோடி மதிப்புள்ள ஒரு லக்ஷம் பொட்டலங்களாக மாற்ற வேண்டும்.  அவற்றிற்கு சரியான எண்கள் கொடுத்து அவற்றை கணக்கிட்டு ஒரு லக்ஷம் பெட்டகங்களாக மாற்றி பல வங்கிகளின் லாக்கர்களில் இந்திய முழுவதும் பிரித்து வைத்துவிட வேண்டும்.  இவ்வாறு செய்வதால் அத்தனை நகைகளையும் யாரும் திருட முடியாது.  பல வங்கிகளில் பிரித்து வைப்பதால் நாம் ஆபத்தை பங்கு போட்டுப பிரித்துக் கொள்கிறோம்.  நகைகளும் போகிஷங்களும் பத்திரமான இடத்திற்கு கொண்டு செல்லப் படுவதால்  பத்மநாபா சுவாமி கோவிலுக்கும் பெரிய ஆபத்து வரது.
  2. இதற்கு அடுத்து இந்த நகைகளிலிருந்து சிறிது பயன் அடைவது எப்படி என்று பார்க்க வேண்டும்.
  3. பத்மநாபா சுவாமி நகைகள் மிகவும் புராதனமாக இருப்பதால் அவற்றிற்கு பழம் பொருள் பொக்கிஷ மதிப்பு இன்னும் பல கோடி பெரும்.  இதனால் உலகம் முழுவதும் உள்ள பல புராதனப் பொருள் சேகரிப்பவர்கள் பல கோடி தர தயராக உள்ளனர்.  இதனால் இவர்கள் மூலமும் பத்மநாபா சுவாமியின் நகைகளுக்கு ஆபத்து வர வாய்ப்புள்ளது.
  4. இந்தப் பிரச்சினையை சரி செய்ய, தினமும் ஒரு தங்கக் காசு பத்மநாபா சுவாமி கோவில் தேவஸ்தானமே -இன்டர்நெட் மூலமாக அகில உலக புராதனப் பொருள் விரும்பிகளும் நமது பக்தக் கோடிகளுக்கும் விற்பனைக்கு அறிவிக்கலாம்.
  5. தினமும் ஒரு சவரன் - 8  கிராம் -தற்போது சுமார் ரூபாய் ௨௦      மதிப்புள்ள தங்கக் காசை ஏலத்தில் விடும்போது - இந்தக் காசுகள் சில லக்ஷம் மதிப்பிற்கு செல்ல உள்ளது. அவ்வாறு ஏலத்தில் வரும் பணத்தை ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூர் வங்கியில் பத்மநாபா சுவாமி பெயரில் ஒரு டிரஸ்ட் ஆரம்பித்து, அதில் டெபாசிட் செய்து, அந்த பிக்செட் டெபாசிட்டில் வரும் வட்டியில் தினமும் பத்மநாபா சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு சுத்தமான நெய்யினால் செய்யப்பட்ட வெண் பொங்கல், சர்க்கரை பொங்கல், நல்ல சாம்பார் சதம், தயிர் சாதம் போன்றவை தயாரித்து, நான்கு வேளையும் சுவாமிக்கு நிவேதனம் செய்து, பக்தர்களுக்கு வழங்குமாறு வேண்டிக் கொள்கிறோம்.
  6. இது போன்று, இனிய விதத்தில் கோவிலுக்கு வரும் பக்தர்களை ஆதரவு செய்வதால் பத்மநாபா சுவாமி கோவிலின் பெயரும் புகழும் மேலும் கோடி கொடியாக வளர்ந்து, ஏழை எளிய இந்துக்களின் ஆதரவைப் பெறும்.
  7. மேலும் இது போன்று வரும் சுவாமியின் வட்டிப்பணத்தில் திருப்பதி தேவஸ்தானம் போல மேலும் பல நல்ல காரியங்கள் செய்ய வேண்டும்.
  8. பத்மநாபா சுவாமி மேல்நிலைப் பள்ளி:
தினமும் ஒரு பொற்காசு விற்று வரும் பணத்தை பல அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் பிக்சட் டெபாசிட் போடும் பணத்தில் பத்மநாபா சுவாமி தேவஸ்தான டிரஸ்ட் இந்தியா முழவதும் நல்ல பள்ளிகள் ஆரம்பிக்க வேண்டும்.  முதலில் கேரளா முழுவதும் நல்ல பள்ளிகள் ஆரம்பித்து, நல்ல கல்வியும், இனிய இந்து மத போதனைகளும் சொல்லித் தரப்படவேண்டும். 

 8 ) பத்மநாபா சுவாமி மேல்நிலைப் பள்ளி:
தினமும் ஒரு பொற்காசு விற்று வரும் பணத்தைப் பல அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளில் பிக்சட் டிபாசிட் போடும் பணத்தில் பத்மநாபா சுவாமி தேவஸ்தான டிரஸ்ட் இந்திய முழுதும் நல்ல பள்ளிகள் ஆரம்பிக்க வேண்டும்.  முதலில் கேரளா முழுவதும் நல்ல பள்ளிகள் ஆரம்பித்து, நல்ல கல்வியும், இனிய இந்து மத போதனைகளும் சொல்லித் தரப்படவேண்டும். 

9 ) பத்மநாபா சுவாமி கலைக் கல்லுரி:
பத்மநாபா சுவாமி தேவஸ்தானத்தின் மூலம் ஒரு கலைக் கல்லுரி ஆரம்பித்து அதில் BA , BSC , Bcom , MA , MSC , Mcom போன்ற வகுப்புகளை நடத்தலாம்.

10 ) பத்மநாபா சுவாமி அறிவியல் தொழில்நுட்பக் கல்லுரி:
பத்மநாபா சுவாமியின் பேரில் ஒரு அறிவியல் தொழில்நுட்பக் கல்லுரி ஆரம்பித்து அதில் அனைவரும் சிறப்பாக அறிவியல் தொழில்நுட்பக் கல்வியை கற்க ஏற்பாடு செய்யலாம்.

11) பத்மநாபா சுவாமி பலகலைக்கழகம் 
பத்மநாபா சுவாமி தேவஸ்தான டிரஸ்ட் பத்மநாபா சுவாமி பெயரில் ஒரு பல்கலைக்கழகம் ஆரம்பித்து மேற்ச்சொன்ன அனைத்து கல்வி நிறுவனங்களையும் அந்த பல்கலைக்கழகக் கட்டுபாட்டில் ஆரம்பிக்கலாம்.

12 ) பத்மநாபா சுவாமி இசை நடனக் கல்லுரி:
 பத்மநாபா சுவாமி பெயரில் ஒரு இசை நடனக் கல்லுரி ஆரம்பித்து நமது இந்தியாவின் அனைத்து பாரம்பரிய இசைகளான கர்நாடக சங்கீதம் , இந்துஸ்தானி இந்துஸ்தானி சங்கீதம், நாட்டுபுறப் பாடல்கள் போன்றவற்றைப் போற்றிப் பாதுகாக்க ஏற்பாடு செய்யலாம்.  அதே போல் இந்திய நடனங்களான பாரத நாட்டியம்,கதகளி, குச்சிபிடி , ஒடிசி, கிராமிய நடனம் மற்றும் பல இந்திய நடன வகைகளை பாதுகாத்து சொல்லித் தரலாம். 

13 ) பத்மநாபா சுவாமி இந்து மத ஆராய்ச்சி மையம்: 
பத்மநாபா சுவாமி பெயரில் இந்து மத ஆராய்ச்சி மையம் ஒன்று ஆரம்பித்து, அதில் இந்து மதத்தின் அனைத்து சிறந்த சிந்தனைகள், சித்தாந்தங்கள் அனைத்தையும் அதில் சிறந்த கருத்துகளை புத்தகங்களாக வெளியிட்டு இந்து மதத்தை சிறப்பிக்க வேண்டும். 

14 ) பத்மநாபா சுவாமி இந்து ஆலயங்களின் கூட்டமைப்பு:
பத்மநாபா சுவாமி பெயரில் இந்தியாவில் உள்ள அனைத்து இந்து ஆலயங்களின் கூட்டமைப்பு ஒன்று உருவாக்கி அதில் அனைத்து இந்துக்களும் ஒன்றிணைந்து, அனைத்து இந்து ஆலயங்களிலும் அனைத்து பணிகளும் சிறப்பாக நடக்க பாடுபட வேண்டும்.  அனைத்து இந்து ஆலயங்களும் சிறப்பாகத் திகழ பத்மநாபா சுவாமி இந்து அறகட்டளை உதவ வேண்டும்.


http://www.facebook.com/note.php?note_id=148811985194682 

No comments:

Post a Comment