என் இனிய கிராமத்து நண்பர்களுக்கு- 2
உங்கள் கிராமங்களில் உற்பத்தியாகும் கரும்பினால்தான் இங்கே நகரத்தில் இனிமையான காலை காப்பி குடிக்க முடிகிறது. நீங்கள் அங்கே பாடுபட்டு, கரும்பு பயிர் செய்து, நல்ல உரமிட்டு, பூச்சிகள் தாக்காமல் கரும்பைக் காப்பாற்றி, அறுவடை செய்து, திருட்டு போகாமல் பத்திரமாய் பாதுகாத்து, கரும்பாலைகளுக்கு அனுப்பி, அங்கே அவை சர்க்கரையாக உருப்பெற்று, இங்கே பல கடைகளில் இனிப்பு வகைகளாய் அழகாய் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. பாடுபட்டு, கரும்பு பயிர் செய்து, எங்களுக்கு இனிமையை வழங்கும் உங்களுக்கு எனது ன் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நண்பர்களே! இங்கே நகரத்தில் சிறிது சிறிதாக பல தொழில்கள் உருவாகி வருகின்றன. ஆனாலும் கிராம மக்களாகிய உங்களது அன்பும், பாசமும் உழைப்பும் எங்களை சந்தோஷபடுத்துகின்றன. அதிக ஆடம்பரமில்லாத கிராம வாழ்க்கை எங்களுக்கு மனதுக்கு அமைதியைக் கொடுக்கிறது. எங்கள் நகரத்து மக்களின் அன்பு என்றைக்கும் உங்களுக்கும் உண்டு.
No comments:
Post a Comment