மதங்கள் உலகில் அமைதியை ஏற்படுத்தவும் மனிதர்களிடையே நட்புணர்வையும் நேசத்தையும் வளர்க்கவும் தோன்றின. இத்தகைய நல்ல சிந்தனைகளை பரப்பும் மத போதனைகளை ஏற்றுக் கொள்ளலாம். புத்தர் , ஏசு, ஆதி சங்கரர், நபிகள் நாயகம் போன்ற மாபெரும் தலைவர்கள் பல இனிய புதிய மத சிந்தனைகளை பரப்பினார்கள். இத்தைகைய மகான்களின் அறிவில் தோன்றிய மிகச் சிறந்த சிந்தனைகளை இம்மதங்களின் கொள்கைகளாக உலகம் முழுவதும் பரவின. இத்தைகைய மாபெரும் சிந்தனைகள் இவ்வுலகில் அணைத்து மக்களுக்கும் பொருந்தக் கூடிய சிந்தனைகளாக வளர்ந்து வந்திருகின்றன. இன்று உலகில் 750 கோடி மக்களும் நன்றாக வாழ வேண்டும், ஒருவருக்கொருவர் உதவ வேண்டும் என்பதே இன்றைய மத சிந்தனைகளாகும்.
No comments:
Post a Comment