சந்தோஷம்
நாம் அனைவரும் எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும். சந்தோஷமாக இருப்பவரின் உடலும் புத்துணர்வுடன் காணப்படுகிறது. சந்தோஷமாக இருப்பவர் தனது வேலைகளையும் மன உளைச்சலில்லாமல் செய்ய முடிகிறது. சந்தோஷம் என்பது நமது மனதில் தான் இருக்கிறது. பழைய சாதத்தை சாப்பிட்டுவிட்டு சந்தோஷமாக இருப்பவர்களும் இருக்கிறார்கள். பால்கோவாவை சாப்பிட்டுவிட்டு வருத்தமாக இருப்பவர்களும் இருக்கிறார்கள். திருப்தியுள்ள மனமுடையவர்கள் எப்போதும் சந்தோஷமாக இருக்கிறார்கள். திருப்தியுள்ள மனதையும் போதுமென்ற மனதையும் உடையவர்கள் மிக உயர்ந்த நிலையில் இருப்பவர்கள். இருப்பதைக் கொண்டு திருப்தியடைய வேண்டும். ஆனால் அதே சமயம் புதிய சாதனைகளை புரிய செண்டும் என்ற எண்ணமும் இருக்க வேண்டும். இனிய சொற்களை உபயோகிப்பால் நாமும் சந்தோஷமாக இருந்து மற்றவர்களையும் சந்தோஷப்படுத்த இயலும்.
No comments:
Post a Comment