Total Pageviews

Tuesday, July 12, 2011

உயர்ந்த ஞானம் அடைய என்ன வழி?

உயர்ந்த ஞானம் அடைய என்ன வழி?

இவ்வுலகில் நடக்கும் எல்லா செயல்களையும் சரியாக புரிந்து கொள்பவனே உயர்ந்த ஞானியாகிறான். எல்லா விஷயங்களையும் அறிந்து கொள்பவன் அறிவாளியாகிறான் . தனது அறிவால் அறிந்த விஷயங்களை அலசி ஆராய்ந்து அதை தனது புத்தியினால் புரிந்து கொள்பவனே உயர்ந்த ஞானத்தை பெறுகிறான். நீங்களும் உயர்ந்த ஞானம் பெற வேண்டுமானால் நமது பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள அனைத்து புத்தகங்களில் உள்ள விஷயங்களை படித்து அறிந்து, அவை அனைத்தையும் புரிந்து கொண்டு விட்டால் நீங்கள் புத்தர், ஏசு, போன்ற மகான்கள் பெற்று இருந்த உயர்ந்த ஞானத்தை போல் பத்து மடங்கு ஞானம் பெற்று விட்டீர்கள் என நம்பலாம். ஆகவே நீங்கள் அறிந்த விஷயங்களை புரிந்து கொண்டால் நீங்கள் புரிந்து கொண்ட அளவிற்கு ஞானத்தைப் பெறுவீர்கள்

No comments:

Post a Comment