- இறைவன் எங்கும் நிறைந்திருப்பவன்.
- இறைவன் சர்வ வல்லமை படைத்தவன்.
- எத்தைகைய மனிதனாயினும் எல்லோருக்கும் ஒரே மாதிரி அருள் புரிபவன்.
- இறைவன் இல்லாமல் இவ்வுலகம் இல்லை.
- இவ்வுலகின் இயக்கமே இறைவன்தான்.
நம் உடலில் இருக்கும் ஒவ்வொரு அணுவிற்கும் நாம்தான் இறைவன்
இப்பூமியிலுள்ள அனைத்துப் பொருள்களுக்கும் உயிரினங்களுக்கும் பூமிதான் இறைவன்
இந்த பூமிக்கு சூரியன் இறைவன்
சூரியனுக்கும் மற்ற நட்சத்திரங்களுக்கும் ஆதி மூலமான, ஒளிமயமான, ஒளிப்பிழம்புதான் இறைவன் .
இவ்வாறு மேற்கூறிய வரையறுக்கப்பட்ட விதிகளையும் மற்றும் சூரியன், பூமி, மற்ற ஜீவராசிகள் மனிதன் முதலியன தோன்றிய விதங்களைப் பார்க்கும்போது நாம் கடவுள் என்றும் இறைவன் என்றும் குறிப்பிடுவது நமக்கும் மேற்பட்ட ஒரு சக்தியைத்தான் என்பது தெரிய வருகிறது. மனிதர்களில் பலர் இயற்கைதான் தெய்வம் என்று ஒப்புக் கொள்கிறார்கள். ஏனென்றால் மனிதன் எவ்வளவுதான் அறிவு வளர்ச்சியும் விஞ்ஞானம் முன்னேற்றமும் பெற்றாலும் இயற்கையை வெல்ல முடிவதில்லை. ஆதலால் இயற்கை மனிதனை விட அதிக சக்தி வாய்ந்ததாக உள்ளது.
நாம் இயற்கை என்று எதை குறிப்பிடுகிறது? நாம் வாழும் இந்த பூமி, அதனை சுற்றியுள்ள வாயு மண்டலம், நம் கண்ணுக்கு புலப்படும் நட்சத்திரங்கள், வெண்ணிலா, மற்றும் பூமியில் வாழும் உயிரினங்கள் ஆகியவை. இப்படி பார்க்கும்போது மனிதனும் இயற்கையின் ஒரு அங்கமே. ஆகையால் இயற்கையின் அங்கமாகிய மனிதன் எப்படி இயற்கையை வெல்ல முடியும்?
மற்றும் இந்த நட்சத்திரங்கள், கோள்கள் முதலியவை தோன்றிய விடத்தைப் பற்றி பலவிதமான கருத்துக்கள் நிலவினாலும் எல்லோராலும் பெரும்பாலும் ஒப்புக் கொள்ளப்பட்ட விஞ்ஞானக் கொள்கை பிக்-பாங் (பிக்-பாங்) கோட்பாடு என்பதாகும்.
இந்த கோட்பாட்டின்படி நட்சத்திரங்கள், சூரியன், பூமி முதலியவை எல்லாம் தோன்றுவதற்கு முன்னால் எல்லாம் சேர்ந்து ஒட்டு மொத்தமாக ஒரு பெரிய ஒலிகுழம்பாக பேரொளிக் கோட்டமாக இருந்தது எனவும், அது வெடித்துச் சிதறியதால் ஏற்பட்ட சிறு சிறு துகள்களும் துண்டுகளும் பல்வேறு திசையில் பரவிச் சென்று, அவை நாட்களாக நாட்களாக மேலும் எட்ட விலகிச் சென்று பல்வேறு நட்சதிரன்களாக உள்ளன என்பதாகும்.
No comments:
Post a Comment