அன்பின் அலைகள் 4 : நான்
நான் அன்பிற்கும் அஹிம்சைக்கும் கட்டுப்பட்டவன்.இனிமைக்கும் நன்மைக்கும் கட்டுப்பட்டவன். நல்லவர்களின் சிந்தனைக்கும் சொல்லுக்கும் கட்டுப்பட்டவன்.அறிவிற் சிறந்தவர்களும் உயர்ந்தவர்களும் என்னிடமுள்ள குறைகளை சுட்டிகாட்டி அவற்றை தீர்க்கும் ஆலோசைனைகளும் கூறினால் அதை நான் பணிவுடனும் தாழமையுடனும் ஏற்றுக்கொள்ளுகிறேன். ஆனால் சிலர் அதிகாரத்தாலும் ஆணவத்தாலும் அறியாமையாலும் ஏளனத்தாலும் என்னை அடக்க முற்பட்டால் அவர்கள் மாபெரும் தோல்வியையே அடைகிறார்கள். நான் புதிய சிந்தனைகளையும் நல்ல சிந்தனைகளையும் படைக்கிறேன். அதை நல்லவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். தீயவர்கள் என் சிந்தனைகளையும் என்னையும் அழிக்க முற்பட்டால் அவர்கள் மாபெரும் அழிவை அடைகிறார்கள். நான் இவ்வுலகத்திலுள்ள அனைத்தையும் இவ்வுலகிற்கு அப்பாற்பட்ட அண்ட சராசரங்களையும் நேசிக்கிறேன். நான் செலுத்தும் அன்பும் நேசமுமே என்னை பாதுகாக்கிறது .
No comments:
Post a Comment