ஜாதி மத பேதங்கள்
நமது இந்தியாவில் ஜாதி மத பேதங்களை முழுவதும் ஒழிக்க முடியவில்லை என்றாலும் ஜாதி மத பேதங்கள் சிறிது சிறிதாக குறைந்து வருகிறது. பெரு நகரங்களிலும் நகர்ப் புறங்களிலும் முழுவதும் கட்டுபாட்டிற்குள் இருக்கிறது என கூறலாம். பல தமிழ் ஆங்கில நாளிதழ்களிலும் மத இதழ்களிலும் இடம் பெறும் திருமண மணமகள், மணமகன் தேவை விளம்பரங்களில் பலவற்றில் "ஜாதி தடைகள் இல்லை" என்ற வார்த்தைகள் இடம் பெற்றுள்ளதை நாம் கண் கூடாக காணலாம். மற்றும் திருமண பதிவு அலுவலகங்களில் தினமும் பல கலப்புத் திருமணங்கள் செய்யப்படுவதையும் நாம் அறியலாம். இத்தகைய புதிய மாற்றங்கள் மிக மெதுவாகத்தான் நடைபெறும். ஆனால் ஜாதி மத பேதங்கள் குறைந்து வந்தாலும் மனிதர்கள் அந்தஸ்து, படிப்பு, வருமானம் ஆகியவற்றை தற்போது கவனித்து அதற்குத் தகுந்தாற்போலவே தங்கள் திருமணங்களையும் மற்ற புதிய தொடர்புகளையும் ஏற்படுத்திக் கொள்கிறார்கள்.
No comments:
Post a Comment