எலிகளும் அணில்களும்
எலிகள் நமது வயல்களில் விளையும் தானியங்களைத் தின்று விடுகிறது. வீடுகளில் உள்ள அரிசி, காய்கறிகள் மற்றும் பல உண்ணும் பொருட்களைத் தின்று விடுகிறது. வீட்டில் உள்ள பிளாஸ்டிக் கூடைகள், எலெக்ட்ரிக் ஒயர்கள் போன்ற பல பொருட்களைக் கடித்து நாசம் பண்ணி விடுகின்றன. ஆகவே பல நேரங்களில் நமது இத்தகைய நஷ்டங்களில் இருந்து தப்பிக்க எலிகளைக் கொல்ல வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. எலிகள் பல அசுத்தமான இடங்களிலும், சாக்கடைகளிலும் சென்று விட்டு அப்படியே வீடுகளிலும் திரிவதால் இவற்றின் மூலம் பலவித நோய் கிருமிகள் பரவ வாய்ப்புள்ளது. ஆகவே நமது நன்மைக்காக பலர் எலிகளை எலிப் பொறி வைத்துப் பிடித்துக் கொன்று விடுகிறார்கள். அதே போல் அணில்களும் தோட்டங்களில் உள்ள தென்னை மரம், முருங்கை மரம், மாமரம் போன்றவற்றில் பூக்களையும், தென்னங் குருத்துக்களையும் கடித்துத் தின்று விடுவதால் விளைச்சல் குறைவதால் விவசாயிகள் பலர் அணில்களைக் கொன்று அவர்கள் தோட்டங்களைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.
No comments:
Post a Comment