என் இனிய கிரமத்து மக்களுக்கு: 4
உங்கள்கிராமங்களில்நடைபெறும்பட்டுவளர்ப்புத்தொழிலால்தான்இங்கேபட்டணத்தில்பல பணக்காரப்பெண்கள்பகட்டாக பட்டுப் புடவைகளை பட்டணத்தில்அணிந்து வீதிகளிலே நகர்வலம் வர முடிகிறது. நீங்கள் அங்கே பாடுபட்டு பட்டுப்புழுக்களை வளர்த்து, அந்தப்புழுக்களின் மேலுள்ள இரக்கத்தால் மல்பெரிச்செடிகளை வளர்த்து, அதன் இலைகளை நறுக்கி, பட்டுப்புழுக்களுக்கு உணவாக அளித்து, பட்டுப்புழுக்களை வளரச் செய்து,அவைபட்டு கூடுகள் கட்டியபிறகு, பட்டுநூலை பிரித்தெடுத்து, ஆடைபல வழிகளில் பதம் செய்து, பட்டுநூலாக்கி. அவற்றை சாயத்தில் தோய்த்து, பல வண்ணங்களில் தறியிலிட்டு, பல டிசைன்களில் பட்டுப்புடவைகளாக மாற்றி, அவற்றை பத்திரமாக பட்டணங்களுக்கு அனுப்பி வைக்கிறீர்கள். பட்டுப் புடவைகளை உற்பத்திச் செய்து பட்டுப் போன உங்கள் கைகளுக்கு கோடானு கோடி நன்றி! நீங்களும் பட்டுப் புடவை அணிந்து மகிழும் பசுமையான நாள் என்று வரும்?
No comments:
Post a Comment