இன்று உலகில் கோடிக்கணக்கான தொழில்கள் பெருகி வளர்ந்துள்ளன. இத்தைகைய தொழில்கள் மூலம் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பைப் பெற்று சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் இன்றும் புதிய புதிய தொழில்கள் பிறந்து கொண்டே இருக்கின்றன. வளர்ந்து கொண்டே இருக்கின்றன. மனித அறிவு வளர்ச்சியினால் பல நன்மைகள் இவ்வுலகிற்கு தொடர்ந்து கிடைத்து வருகின்றன. மனித அறிவினால் ஒவ்வொரு தொழிலிலும் மேலும் புதிய தொழில் நுட்பங்கள் கண்டு பிடிக்கபடுகின்றன. இத்தகைய புதிய தொழில் நுட்பங்களை செயல்படுத்துவதால் லாபம் அதிகரிக்கிறது. பல எளிமையான வழிகள் புகுத்தப்படுவதால் தொழிலாளர்கள் தங்கள் பணியை எளிமையாகச் செய்ய முடிகிறது. மேலும் பல புதிய தொழில் நுட்பங்களால் குறைந்த நேரத்தில் அதிக எண்ணிக்கையில் பொருள்கள் உற்பத்தி செய்யப் படுகிறது. புதிய தொழில்நுட்பங்களினால் பொருட்களின் தரமும் உயர்கிறது.
No comments:
Post a Comment