போலி சாமியார்கள்
இந்து மதத்தில் அதன் உயர்ந்த கொள்கைகளை பரப்புவதற்காக அந்தக் காலத்தில் பல துறவிகள் தோன்றினர். இத்தைகைய துறவிகள் தங்கள் வாழ்வில் அனைத்தையும் துறந்து, கவி உடை உடுத்து பல நல்ல சிந்தனைகளையும், உயர்ந்த சிந்தனைகளையும் பரப்பி வந்தனர். இத்தைகைய துறவிகள் உலகில் நடக்கும் பல விஷயங்களை அறிவு பூர்வமாக ஆராய்ந்து, பல உண்மைகளை கண்டுபிடித்து அவற்றை மக்களுக்கு எடுத்து உணர்த்தினார்கள். இத்தைகைய துறவிகள் மக்களின் சிந்தனைகளைத தூண்டி மனித சிந்தனைகளை நல்வழியில் செலுத்தும் வழிமுறைகளைக் கண்டுபிடித்தார்கள். இவர்கள் மக்களை சிந்தித்து செயல்படவும் மற்றவர்கள் கூறும் கருத்துக்களில் உண்மையான தத்துவங்களை கண்டுபிடித்து ஏற்றுக்கொள்ளவும் வழிமுறைகளைக் கற்றுக் கொடுத்தார்கள். பிறகு இவர்களைப் போலவே உடை உடுத்துக்கொண்டு உண்மையான ஞானம் இல்லாமல் பல போலித் துறவிகள் தோன்றி உலவி வருகிறார்கள். நமது அறிவுத் திறனால் இத்தைகைய போலித் துறவிகளைக் கண்டு பிடித்து, அறிய வேண்டும்.
No comments:
Post a Comment