- இறைவன் எங்கும் நிறைந்திருப்பவன்.
- இறைவன் சர்வ வல்லமை படைத்தவன்.
- எத்தைகைய மனிதனாயினும் எல்லோருக்கும் ஒரே மாதிரி அருள் புரிபவன்.
- இறைவன் இல்லாமல் இவ்வுலகம் இல்லை.
- இவ்வுலகின் இயக்கமே இறைவன்தான்.
நம் உடலில் இருக்கும் ஒவ்வொரு அணுவிற்கும் நாம்தான் இறைவன்
இப்பூமியிலுள்ள அனைத்துப் பொருள்களுக்கும் உயிரினங்களுக்கும் பூமிதான் இறைவன்
இந்த பூமிக்கு சூரியன் இறைவன்
சூரியனுக்கும் மற்ற நட்சத்திரங்களுக்கும் ஆதி மூலமான, ஒளிமயமான, ஒளிப்பிழம்புதான் இறைவன் .
இவ்வாறு மேற்கூறிய வரையறுக்கப்பட்ட விதிகளையும் மற்றும் சூரியன், பூமி, மற்ற ஜீவராசிகள் மனிதன் முதலியன தோன்றிய விதங்களைப் பார்க்கும்போது நாம் கடவுள் என்றும் இறைவன் என்றும் குறிப்பிடுவது நமக்கும் மேற்பட்ட ஒரு சக்தியைத்தான் என்பது தெரிய வருகிறது. மனிதர்களில் பலர் இயற்கைதான் தெய்வம் என்று ஒப்புக் கொள்கிறார்கள். ஏனென்றால் மனிதன் எவ்வளவுதான் அறிவு வளர்ச்சியும் விஞ்ஞானம் முன்னேற்றமும் பெற்றாலும் இயற்கையை வெல்ல முடிவதில்லை. ஆதலால் இயற்கை மனிதனை விட அதிக சக்தி வாய்ந்ததாக உள்ளது.
நாம் இயற்கை என்று எதை குறிப்பிடுகிறது? நாம் வாழும் இந்த பூமி, அதனை சுற்றியுள்ள வாயு மண்டலம், நம் கண்ணுக்கு புலப்படும் நட்சத்திரங்கள், வெண்ணிலா, மற்றும் பூமியில் வாழும் உயிரினங்கள் ஆகியவை. இப்படி பார்க்கும்போது மனிதனும் இயற்கையின் ஒரு அங்கமே. ஆகையால் இயற்கையின் அங்கமாகிய மனிதன் எப்படி இயற்கையை வெல்ல முடியும்?
மற்றும் இந்த நட்சத்திரங்கள், கோள்கள் முதலியவை தோன்றிய விடத்தைப் பற்றி பலவிதமான கருத்துக்கள் நிலவினாலும் எல்லோராலும் பெரும்பாலும் ஒப்புக் கொள்ளப்பட்ட விஞ்ஞானக் கொள்கை பிக்-பாங் (Big-Bang) கோட்பாடு என்பதாகும்.
இந்த கோட்பாட்டின்படி நட்சத்திரங்கள், சூரியன், பூமி முதலியவை எல்லாம் தோன்றுவதற்கு முன்னால் எல்லாம் சேர்ந்து ஒட்டு மொத்தமாக ஒரு பெரிய ஒலிகுழம்பாக பேரொளிக் கோட்டமாக இருந்தது எனவும், அது வெடித்துச் சிதறியதால் ஏற்பட்ட சிறு சிறு துகள்களும் துண்டுகளும் பல்வேறு திசையில் பரவிச் சென்று, அவை நாட்களாக நாட்களாக மேலும் எட்ட விலகிச் சென்று பல்வேறு நட்சதிரன்களாக உள்ளன என்பதாகும்.
மனிதர்களை எடுத்துக் கொண்டால் நல்ல ஆரோக்ய உடம்பையும், வலிமையான உடம்பையும் உள்ளவர்கள் அதிக நாட்கள் வாழ்கிறார்கள். அதே போல்தான் மற்ற பொருட்களுக்கும். உதாரணத்திற்கு சூரியன் பூமியை விட அதிக வலிமை வாய்ந்தது. ஆகையால் சூரியன் பூமியை விட அதிக நாட்கள் வாழும். முதலில் அழியப் போவது பூமிதான். பிறகுதான் சூரியன் இறக்கும் . அதாவது அழியும். இவ்வாறு இறப்பும், பிறப்பும், மாற்றமும் மனிதனுக்கு மட்டுமல்ல! இந்த சுழற்சி இந்த பிரபஞ்சத்தில் அனைத்துப் பொருட்களுக்கும் உண்டு. இந்த சுழற்சியை மாற்றத்தை யாராலும் நிறுத்த முடியாது.
இப்படி உலகில் உள்ள அனைத்துப் பொருளின் தோற்றத்திற்கும் ஆதாரமான ஒலிகற்றையாகிய ஜோதியாகிய மாபெரும் சக்திதான் பரஞ்ஜோதியவார். அந்த பரஞ்சோதியே நமது இறைவன். அந்த பரஞ்சோதியான இறைவனிடமிருந்து அனைத்தும் தோன்றின.
அந்தப் பரஞ்ஜோதியிலிருந்து தோன்றியதுதான் விண்வெளி, நட்சத்திரங்கள், சூரியன், பூமி, சந்திரன் மற்றும் அனைத்து கிரகங்களும் ஆகும். இந்து மதத்தில் நம்பப்படும் மேலுலகம், பாதாள உலகம் உண்மையில் இருக்குமானால் அவையனைத்தும் இம்மாபெரும் ஒளிப் பிழம்பிலிருந்து தோன்றியதுதான். அந்தப் பரஞ்சோதியான ஒளிப் பிழம்பிற்கு ஆதியும் இல்லை. அந்தமும் இல்லை. ஆரம்பமும் இல்லை. முடிவும் இல்லை. அவற்றில் ஏற்படும் இம்மாற்றமெல்லாம் நம் மாயக் கண்களுக்குத் தோன்றும் மாற்றம்தான். இவ்வுலகில் வாழும் மனிதன் அறிவுக்கு எட்டியதெல்லாம் இவ்வளவுதான். இந்தப் பரஞ்சோதியைப் பற்றி உலகில் பல்வேறு பகுதி மக்கள் பல்வேறாக உணர்ந்தனர். அவற்றின் அடிப்படையில் பல்வேறு மதங்கள் தோன்றின. இந்த ஒளிப் பிழம்பான இறைவனின் தூதர்களாக கருதப்படுபவர்கள்தான் நாம் இன்றைய உலகில் நாம் காணும் மதத் தலைவர்கள் ஆவர். இவ்வுலகில் வாழ்ந்த ஏசு, ஆதி சங்கரர், புத்தர், மகாவீரர் போன்ற மாபெரும் மகான்கள் இந்த ஒளிக் கடவுளைத்தான் மக்களுக்குப் பல்வேறு விதத்தில் வெளிப்படுத்தி உள்ளனர். இப்படி உலக மகப் பெரியோர்கள் அனைவருமே இவ்விறைவனைப் பற்றி அவர்களுடைய விசாலமான அறிவுத் திறனாலும், ஞானத்தாலும் உணர்ந்துள்ளார்கள். இவ்வாறு உணரும் உணர்வுதான் முக்தி நிலையை அடைவதாகும். ஆனாலும் ஆதியில் ஒன்றான ஒரே கடவுளை, ஒரே இறைவனை, மாபெரும் ஜோதியை உலக மக்கள் தங்களது அறியாமையால் அறிந்து கொள்ளாமல் வீண் சடங்குகளிலும், சம்பிரதாயங்களிலும் மூழ்கி ஒருவொருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்கின்றனர். இவ்வாறு உலகிலுள்ள அனைத்து மதப் பெரியோர்களுமே மூடப் பழக்கங்களையும், வீண் சடங்குகளையும், தேவையற்ற சடங்குகளையும் எதிர்த்துள்ளனர். இவ்வுண்மை ஏசு, நபிகள் நாயகம், ஆதி சங்கரர், புத்தர், மகாவீர், ராமகிருஷ்ணர், விவேகனந்தர் ஆகிய யாருடைய வாழ்க்கை வரலாற்றையும், அவர்களின் அறிவுரைகளையும், இறைவைனைப் பற்றி அவர்கள் சொன்னவற்றைப் படித்தால் விளங்கும். ஆகையால் மக்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவராயினும் அந்தந்த மத வழக்கப்படி இறைவனை வழிபட்டு, வீண் சடங்குகளையும், மூடப் பழக்கங்களையும், தவிர்த்து எல்லையில்லாத ஒளிக்கடலான இறைவனை யாரும் அடைய முடியும். அறிய முடியும்.