ஆயுத பூஜைக்கு பூசணிக்காய் உடைத்தல்
ஆயுத பூஜை செய்பவர்கள் பல பேர் பூசணிக்காய் சுவாமிக்கு படைத்து விட்டு பிறகு வாசலில் போட்டு உடைத்து விடுகிறார்கள். இதனால் திருஷ்டி கழியும் என நம்புகிறார்கள். ஆனால் இது போன்று வாசலில் உடைக்கப்படும் பூசணி காய்களில் சிலர் இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது வழுக்கி விழுந்து விடுகிறார்கள். இதனால் பூசணிக்காய் சுவாமிக்கு படைத்த பிறகு வாசலில் உடைக்காமல் ஏழைகளுக்கு தானமாக கொடுக்கலாம். அல்லது அவரவர்கள் வீட்டிலேயே கூட்டு, கறி, பொரியல் போன்றவை பூசணிக்காயில் செய்து சாப்பிடலாம். இது அவர்கள் உடலுக்கும் நல்லது. சுற்று சூழலுக்கும் நல்லது. ஒரு பூசணி கொடி, ஒரு காயை உருவாக்க மிகவும் கஷ்டபடுகிறது. இதனால் அதை சமைத்து சாப்பிடுவது மிக சிறந்ததாகும். அதை வீணடித்து தெருவில் உடைப்பது யாருக்கும் நன்மை பயக்காது. இதனால் நாம் பூசணி கொடிக்கும் கெடுதல் செய்கிறோம். சுற்று சூழலுக்கும் கெடுதல் செய்கிறோம். ஆகவே பூசணிக்காய் சுவாமிக்கு படைத்து விட்டு பிறகு வாசலில் போட்டு உடைக்காமல் சமைத்து சாப்பிடுவது நல்லது. நல்லதே நினைப்போம். நல்லதே நடக்கும். இதே போன்று அம்மாவாசை போன்ற நாட்களிலும் பூசணிக்காய் வாசலில் போட்டு உடைக்காமல் சமைத்து சாப்பிடுவது நல்லது. அல்லது ஏழைகளுக்கு தானமாக கொடுக்கலாம்.
samaithu sappitaal eppadi thirushthi kazhiyum ?? :)))
ReplyDelete