சிறுத்தை குட்டி கதை - சிறுவர் கதை !!
ஒரு அழகான அடர்ந்த காடு. அதில் ஒரு பெண் சிறுத்தை புலி வாழ்ந்து வந்தது. அதற்கு மூன்று குட்டிகள் இருந்தன. அவற்றை சிறுத்தை புலி பாலூட்டி சீராட்டி வளர்த்து வந்தது. சிறுத்தை குட்டிகள் சிறிது சிறிதாக வளர்ந்து வந்தன. அப்போது அந்த சிறுத்தை குட்டிகளுக்கு தாய் சிறுத்தை வேட்டையாட கற்று கொடுத்தது. அதில் முதல் இரண்டு குட்டிகள் சமர்த்தாக தாய் சிறுத்தையுடன் சேர்ந்து கொண்டு நன்கு வேட்டையாடின. ஆனால் மூன்றாவது குட்டி வேட்டையாடுவதில் அதிக ஆர்வம் காட்டவில்லை. மூன்றாவது குட்டிக்கு வேட்டையில் இறந்து போகும் மான்களை பார்த்தால் பாவமாக இருந்தது.
அது தன் தாய் சிறுத்தையிடம் "அம்மா, எனக்கு நாம் வேட்டையாடும்போது இறக்கும் மிருகங்களை பார்த்தால் எனக்கு பாவமாக இருக்கிறது' என்றது.
அதற்கு தாய் சிறுத்தை 'நாம் அப்படி பாவப்பட்டு கொண்டு இருந்தால் எதையுமே சாப்பிட இயலாது' என்றது.
குட்டி சிறுத்தை 'நம்மை யார் இப்படி மாமிசம் சாப்பிடும் படி செய்தது?' என்று கேட்டது.
தாய் சிறுத்தை 'நம்மை கடவுள் மாமிசம் சாப்பிடும்படி படைத்து உள்ளார்' என்றது.
குட்டி சிறுத்தை 'நாம் ஏன் செடி கொடிகளை சாப்பிட கூடாது?' என்றது.
தாய் சிறுத்தை 'அதை நீ கடவுளிடம்தான் கேட்க வேண்டும்' என்றது.
'நான் கடவுளை எங்கே காண முடியும்?' என்று கேட்டது.
'நீ கடவுளை காண தவம் இருந்தால் காண இயலும்' என்றது தாய் சிறுத்தை.
உடனே குட்டி சிறுத்தை கடவுளை காண தவம் செய்தது.
No comments:
Post a Comment