Total Pageviews

Monday, January 31, 2011

உழைப்பே உயர்வு தரும்.

உழைப்பே உயர்வு தரும். 
உழைப்பின்  ஊதியத்தில் மது அருந்த வேண்டாம். புகை பிடிக்க வேண்டாம். குடும்ப செலவுகளை சிக்கனமாக செய்யவும்.
மீதி பணத்தை அரசு வங்கிகளில் வருங்காலத்திற்கு சேமித்து வைக்கவும்.  போஸ்ட் ஆபீசில் 'பொது வருங்கால வைப்பு நிதி' யில் சேமிக்கவும். உங்கள் சேமிப்பு நாட்டிற்கும் நல்லது.  வீட்டிற்கும் நல்லது.
உங்கள் வயதான காலத்திற்கும் நல்லது.

குழந்தைப்பேறு ஒரு பெண்ணிற்கு தாய்மை என்ற பெருமையை கொடுக்கிறது.

குழந்தைப்பேறு ஒரு பெண்ணிற்கு தாய்மை என்ற பெருமையை கொடுக்கிறது.  தாயன்பிற்கு ஈடு இணை இவ்வுலகில் ஏதும் இல்லை. தாய்மை ஒரு பெண்ணிற்கு தெய்வீகத் தன்மையை கொடுக்கிறது.  குழந்தையின் சிரிப்பில் ஓர் தாய் இறைவனை காண்கிறாள்.  தாய்மை இனிமை கொடுக்கிறது.

நல்லதே நினைப்போம். நல்லதே நடக்கும்.

நல்லதே நினைப்போம்.  நல்லதே நடக்கும். 

அன்பே அரு மருந்து. அன்பின் வழி நடப்போம்.

அன்பே அரு மருந்து.  அன்பின் வழி நடப்போம். 

Wednesday, January 26, 2011

பூமி தாயின் மேல் அன்பு செலுத்துங்கள்

பூமி தாயின் மேல் அன்பு செலுத்துங்கள் - 3 - May - 1990
பூமியின் மேல்தான் நாம் வாழ்ந்து வருகிறோம்.  பூமித்தாயை பசுமை போர்வையால் போற்றுவோம்.  பூமித்தாயை பசுமை புடவை உடுத்தி வழி படுவோம். அனைவரும் மரம் செடி கொடிகளை பேணி காத்து வளருங்கள்.  ஏனென்றால் பூமித்தாய் சூரியனிடமிருந்து சேமித்த சக்தியை மரம் செடி கொடிகளின் மூலமாக காயாகவும் கனியாகவும் நமக்கு அளிக்கிறாள். 

அழகான இந்து மதம்

அழகான இந்து மதம் 
அனுப்பிய பத்திரிகை : ஆனந்த விகடன் - 22 - Apr - 1990
-- நமது நாட்டில் பல மதங்கள் மனிதர்களால் பின் பற்றப் பட்டு வருகின்றன. இவற்றில் இந்து மதம் பலரால் பின் பற்றப் பட்டு வருகிறது.  இந்து மதம் மிக அழகான மதம். மதம் என்பது மனிதனுக்கு சட்டை போன்றது. துணி உடுத்துவது மனிதனுக்கு அழகை சேர்க்கிறது. நல்ல மதமும் அழகான சட்டை போன்றது. இந்து மதத்தில் சிவன், விஷ்ணு, பிரம்மா,  பிள்ளையார், முருகன், சரஸ்வதி, லக்ஷ்மி, பார்வதி போன்று பல வித கடவுள்களை வழி படும் வழக்கம் உள்ளது.

வளமான சிந்தனைகள் - நல்லவர்கள்

வளமான சிந்தனைகள்  - நல்லவர்கள்
அனுப்பிய பத்திரிக்கை - ஆனந்த விகடன் - 22 - Apr - 1990

இவ்வுலகம் நல்லவர்களாலேயே வாழ்ந்து கொண்டு இருக்கிறது.  நல்லவர்கள் மரக் கன்றுகளை நடுகிறார்கள்.  நல்ல விதைகளை விதைக்கிறார்கள். நல்ல சிந்தனைகளை பரப்புகிறார்கள்.  நன்மைகள் விளைகிறது.   இவ்வுலகில் நல்லவர்களின் எண்ணிக்கையே  அதிகமாக இருக்கிறது.  இவ்வுலகில் நாளுக்கு நாள் நல்லவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே இருக்கிறது.  பெரும்பாலான மனிதர்கள் பெரும்பாலான நேரங்களில் நல்லவர்களாகவே இருக்கிறார்கள்.  நல்ல சிந்தனைகள் எல்லா பக்கங்களில் இருந்தும் நம்மை வந்து அடையட்டும்.  நல்ல சிந்தனைகள் நல்ல செயல்களுக்கு தூண்டுகோலாக அமைகின்றன.  நல்ல செயல்களை செய்பவர்கள் 'நல்லவர்கள்' என பெயர் பெறுகிறார்கள்.  நல்லவர்களின் பெயர்கள் இவ்வுலகம் உள்ள வரை நிலைத்து நிற்கும்  

முயல் வளர்ப்பு

முயல் வளர்ப்பு
அனுப்பிய பத்திரிக்கை - ஆனந்த விகடன் - 21 - Apr - 1990

-- முயல் வளர்ப்பை பிரபலபடுத்துவதில் தற்போது அரசு முனைந்துள்ளது.  முயல் பண்ணை வைக்க முன் வருபவர்களுக்கு பல வித சலுகைகளையும் கடன்களையும் அளித்து ஊக்கப் படுத்தி வருகிறது.  முயல் பண்ணைகள் வைப்பதில் மிகச் சிறந்த லாபம் இருப்பதாகவும் அரசு கூறி வருகிறது. தொலைகாட்சி, வானொலி இவற்றில் முயல் வளர்ப்பு பற்றி பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது.  இன்னும் சிறிது காலத்தில் அசைவ பிரியர்களுக்கு முயல் கறியும் எளிதில் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.  ஆகவே இந்த முயல் வளர்ப்பு பற்றி நமது பத்திரிக்கையிலும் ஒரு கட்டுரை வெளியிடுமாறு வேண்டிகொள்கிறேன்

அறிவியல் சிந்தனைகள் - 1 - ஆனந்த விகடன் - 19 - Apr - 1990

அறிவியல் சிந்தனைகள் - 1
அனுப்பிய பத்திரிக்கை:  ஆனந்த விகடன் - 19 - Apr - 1990

-- இன்று பத்திரிக்கைகள், அதுவும் வாரப் பத்திரிக்கைகள் வெறும் கேளிக்கை மற்றும் மன மகிழ்ச்சிக்கு உண்டான விஷயத்தை மட்டும் எழுதி வருகின்றன. வளர்ச்சிப்பணி, ஆக்கப்பணிகளை எடுத்துரைத்து எழுத வேண்டுகிறேன். நமது மக்களுக்கு அவர்கள் சம்பாதிக்கும்  பணத்தை எப்படி சேமிப்பது என்பதை விளக்கி ஒரு கட்டுரை எழுதுமாறு  வேண்டிக்கொள்கிறேன்.  ஷேர் மார்க்கெட் -பங்கு மார்க்கெட் பற்றி பல மக்களுக்கு தெரிவதில்லை.  ஆகவே இது போன்று பல முதலீட்டு திட்டங்களை பற்றி பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் ஒரு கட்டுரையை  எழுதுமாறு   வேண்டுகிறேன். பத்திரிக்கைகளை நாட்டு  வளர்ச்சிக்கு உதவ வேண்டுகிறேன்.

வாழ்க்கைக்கு உதவும் வளமான சிந்தனைகள்

வாழ்க்கைக்கு உதவும் வளமான சிந்தனைகள் - சுகவனம்

நான் 1990 ஆம் ஆண்டு பல வளமான சிந்தனைகளை பல பத்திரிக்கைகளுக்கு எழுதி அனுப்பினேன். ஆனால் அவற்றில் பல பத்திரிக்கைகளில் வெளியாகவில்லை. நான் அவற்றை எந்த பத்திரிக்கைகளுக்கு எழுதி அனுப்பினேன் என்ற விவரத்தோடு இங்கு வெளியிடுகிறேன்.  இவற்றில் எதாவது சில கருத்துக்கள் வாசகர்களுக்கு பயனளித்தால் நான் அதில் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.    

Friday, January 21, 2011

பெண் குழந்தை கொலை தடுப்போம் !!


பெண் குழந்தை கொலை தடுப்போம் !!
அனாதை பெண்கள் ஆதரவுக்கு தொடர்பு கொள்க
காந்திய வழி நடப்போம் !!

Wednesday, January 12, 2011

பொங்கல் தினத்தன்று உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு மரத்திற்கு ஒரு சொம்பு தண்ணீர் ஊற்றவும்

பொங்கல் தினத்தன்று உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு மரத்திற்கு ஒரு சொம்பு தண்ணீர் ஊற்றவும்

இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் !!

Happy New Year 2011
இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் !!
இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் !!