மழை பெய்வதால் எல்லாவற்றிலும் நீர் ததும்புகிறது. செடி கொடிகள் வளர்கின்றன. காய்கனிகள் காய்கிறது. நெல் விளைகிறது. தானியங்கள் விளைகிறது. சகல ஜீவராசிகளும் தாவரங்களை உண்டு வாழ்கின்றன. மனிதன் காய்கறிகளை உண்கிறான். சில பிராணிகளையும் சாப்பிடுகிறான். ஆடு, மாடு போன்றவை செடிகொடிகளை சாப்பிடுகின்றன. புலி, சிங்கம் போன்றவை ஆடு, மாடு, மான்களை சாப்பிடுகிறது. தாவரங்களை உண்ணும் பிராணிகள், தாவரங்களை உண்டு வாழ்கின்றன. விலங்குகளை உண்ணும் "மாமிசபட்சிணிகள்", தாவரங்களை உண்ணும் விலங்குகளை பிடித்து சாப்பிடுகின்றன. இது இயற்கையின் சமநிலை. இது இயற்கையின் சுழற்சி. யாராலும் தடுத்து நிறுத்த இயலாது. காலத்தின் தேவைக்கு ஏற்ப இயற்கை புதிய வடிவங்களை எடுத்துக் கொள்கிறது. பரிணாம வளர்ச்சி நடைபெறுகிறது. புதிய விலங்குகள் தோன்றுகிறது. புதிய உருவங்கள் தோன்றுகிறது. ஆனால் அடிப்படை தத்துவம் ஒன்றே.
சூரியன் ஒரு மகா சக்தி. சூரியனே இவ்வுலகை வாழ வைக்கிறது. சூரியனும் ஒரு கடவுளே. பூமிக்கு நன்மை செய்யும் அனைவரும் கடவுளின் அவதாரங்களே. சூரியன் கடல் நீரை ஆவியாக்குகிறது. மேகமாக்குகிறது மழை பாரபட்சமில்லாமல் பூமியின் எல்லா இடங்களிலும் பொழிகிறது.மழை பெய்வதால் ஆறுகள் குளங்கள் ஏரிகள் தோன்றுகின்றன.
எனது முயற்சிகள் தொடர்கின்றன. சில சமயம் வெற்றியும் கிடைக்கிறது. சில சமயம் தோல்வியும் கிடைக்கிறது. வெற்றி, தோல்வி, இரண்டுமே வாழ்க்கையின் பாடங்களாகும். வெற்றியானது நாம் வாழ்க்கையில் எதைச் செய்ய வேண்டும் என எடுத்துரைக்கிறது. தோல்வியானது நாம் வாழ்க்கையில் எதைச் செய்யக்கூடாது என்பதை எடுத்துரைக்கிறது. வெற்றியோ, தோல்வியோ எனது செயல்பாடுகளே எனது வாழ்க்கையை நடத்திச் செல்கிறது. எனது செயல்பாடுகள் எனக்கு உயிரோட்டத்தை கொடுக்கின்றன. ஆகவே எனது முயற்சிகள் தொடர்கின்றன.
-- ஒரு இருட்டான அறைக்குள் ஒரு எரியும் மெழுகுவத்தியை
கொண்டு சென்றால் அந்த இருட்டு, மெழுகு வெளிச்சத்தால் அகன்று விடுகிறது. அது போல் நல்ல சிந்தனையும் நல்ல செயலும் உள்ளவர் ஒருவரே ஆனாலும் அவரது மகா சக்தியால் உலகிலுள்ள கோடானுகோடி மக்களுக்கு நன்மை வழங்கும் நல்ல சக்தியை வழங்க முடியும். அத்தகைய மாமனிதர் 'மகான்' எனவும் 'அவதார புருஷர்' எனவும் போற்றப் படுகிறார். மகாத்மா காந்தி ஒரு மகான் - அவதார புருஷர்
-- ஆற்றலின் மறுபெயர் 'சக்தி' என்பதாகும். 'ஆற்றல் மாற கோட்பாடு' அறிவியலில் படித்து இருக்கிறோம். 'ஆற்றலை ஆக்கவும் முடியாது. அழிக்கவும் முடியாது. ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு மாற்ற முடியும்' - இதுதான் ஆற்றல் மாறா கோட்பாடாகும். இந்த 'ஆற்றல்' எனும் 'சக்தி'யை கடவுளாக கொள்ளலாம். சக்தியை ஆக்கவும் முடியாது. அழிக்கவும் முடியாது. எதை ஆக்கவும் அழிக்கவும் முடியாதோ அதுவே கடவுள். ஆகவே சக்தியே கடவுள்.
உலகில் உயர்ந்த மனிதர்கள் பலர் தோன்றிக் கொண்டே இருகிறார்கள். இவ்வுலகின் உயர்ந்த சிந்தனைகளும் உயர்ந்த செயல்களும் இவ்வுலகை மேன்மையடையச் செய்து உள்ளன. ராமர், கிருஷ்ணர், புத்தர், ஏசு, சாக்ரடிஸ், மாபெரும் விஞ்ஞானிகள் ஆகியோர் உலகிற்கு நன்மை செய்யும் விஷயங்களை தங்கள் சொல்லிலும் செயலிலும் வெளிபடுத்தி உள்ளார்கள்.
நாம் ஒவ்வொருவரும் செய்யும் நல்ல காரியங்கள் நமது பூமியை மேலும் நல்லதாக மாற்றுகிறது. நாம் நிறைய நல்ல மரங்களை நட்டு வளர்த்தால் பூமி குளிர்ச்சியடைகிறது. சுற்றுப்புற சூழல் தூய்மையடைகிறது. ஏசு மக்களுக்கு நல்ல சிந்தனைகளை எடுத்துரைத்தார். மக்கள் மனதில் அழியாத தெய்வமாக உயர்வு பெற்று விளங்குகிறார்.
மதம் மனிதனுக்கு சட்டை போன்றது. ஒருவன் இன்று இந்து மதத்தை சேர்ந்தவனாக இருக்கலாம். அடுத்த வருடம் வேறு மதத்தை சேரலாம். அதற்கு அடுத்த வருடம் வேறு ஒரு மதத்தை சேரலாம். இப்படியே வருடத்திற்கு ஒரு மதம் என்று மாறி கொண்டே இருக்கலாம். ஆனால் அவன் உடலும் உயிரும் இந்த ஜென்மத்தில் மாறுவதில்லை. மதம் மனிதனுக்கு சட்டை போன்றது. மதம் என்கிற சட்டைக்காக பொன்னான உயிரை இழக்க வேண்டாம். மனிதனுக்காகத்தான் மதமே தவிர, மதத்திற்காக மனிதன் இல்லை.