மருது பாண்டி மூச்சிரைக்க ஓடி வந்தான்.
"அண்ணே, மெட்ராசுக்கு பஸ் போகுது. சும்மா ஏத்திகிட்டு போறாங்க. நாமளும் போகலாமா?"
"என்னடா விஷயம்?" என்றான் சுந்தர மூர்த்தி
"ஏதோ கட்சி கூட்டமாம். போன தடவை போனோமே. அதே மாதிரிதான். "
"வரும்போதும் கூட்டிகிட்டு வருவாங்க இல்லே. அப்புறம் அம்போன்னு விட்டுட்டு வந்துட போறாங்க."
"ஒரு நாளைக்கு நூறு ரூபா தராங்க. மூணு வேளை சாப்பாடு "
" நாம திரும்பி வரும்போது ஒரு நாள் தங்கிட்டு வரலாம்"
"ஆனா திரும்பி வர சார்ஜ் வாங்கிடனும்"
"நம்ம ராசையா வன்னாரபேட்டைல தங்கி இருக்கான் இல்ல?"
"அவன் ரூமுல ஒரு நாள் தங்கிடலாம்"
"மெட்ராசை சுத்தி பார்த்துட்டு வரலாம்"
"போன தடவையே சுத்தி பார்க்கவே இல்ல"
"டேய், அவங்க சொல்ற கோஷம் எல்லாம் ஒழுங்கா போடணும்"
"சரிண்ணே"
"எதாவது பிரச்சினை வந்தா எகிறி குதிச்சு ஓடி வந்துடனும். பெரிய தலைவருங்க ஒடம்புல ஒரு கீறல் கூட விழறது கிடையாது. நம்மளும் அதே மாதிரி ஜாக்கிரதையா இருக்கணும்"
"சரிண்ணே"
" இந்த மாதிரி நிறைய கட்சி வரணும். நிறைய கட்சி கூட்டம் வரணும். அப்பதான் நம்மள மாதிரி ஜனங்களுக்கு நல்லது"
"வாடா. மெட்ராஸ் போகலாம். தலைவர்கள் வாழ்க. கட்சிகள் வாழ்க"
No comments:
Post a Comment