புதிய சிந்தனைகள்:
புதிய சிந்தனைகள் எழுத்தாளர்களுக்கும், பேச்சாளர்களுக்கும், தொழிலாளர்களுக்கும், கலைஞர்களுக்கும் விஞ்ஞானிகளுக்கும் மற்றும் பல மனிதர்களுக்கும் தோன்றுகின்றன. இவ்வாறு மனதில் தோன்றும் புதிய சிந்தனைகளை வெளிப்படுத்த அனைவருமே ஆவலுடன் இருக்கிறார்கள். ஒவ்வொரு துறையிலும் உள்ள ஆக்கத்திறன் படைத்தவர்கள் மற்றவர்களுக்கு நன்மையளித்து,மற்றவர்களின் மனதிற்க்கும் புடித்தமாய், திருப்தியளிக்கும் சிந்தனைகளை வெளிப்படுத்தினால் அச்சிந்தனைகள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. புதிய சிந்தனைகளே ஒவ்வொரு துறையிலும் புதிய புரட்சிகளை உண்டுபண்ணுகின்றன. ஆகவே இப்புதிய புரட்சிகள் மக்களுக்கு நன்மை அளிக்காவிட்டால் அவை மக்களால் தகர்த்தெறியப்படுகின்றன. ஆகவே அனைவருக்கும் நன்மை பயக்கும் புரட்சிகளை உருவாக்குவதே புரட்சியாளர்களுக்கும், மக்களுக்கும் நல்லது.
No comments:
Post a Comment