Total Pageviews

Saturday, January 14, 2012

என் இனிய கிரமத்து மக்களுக்கு: 3

என் இனிய கிரமத்து மக்களுக்கு: 3

உங்கள் கிராமங்கள் உற்பத்தியாகும் பருத்தியால்தான் இங்கே பல ஏழைகளின் மானம் எளிதாய் காப்பாற்றப்படுகிறது நீங்கள் பாடுபட்டு பருத்தி பயிர் செய்து, கஷ்டப்பட்டு பருத்திக் காயில் கொட்டைகளைப் பிரித்து எடுத்து, பஞ்சிலிருந்து நூலாக நூற்று, உங்கள் கைத்தறிகளில் எளிய துணிகளாக நெய்து, இங்கே நகரில் குறைந்த விலையில் வாங்க சிறந்த துணியாக உள்ளன. சிலர் இங்கே பருத்தித் துணிகளை விலை குறைவு என்பதற்காகவும், வெயிலுக்காகவும்,சிலர் அழகுக்காகவும், ஆடம்பரத்திற்கும் வாங்குகிறார்கள். எங்களுக்காக பாடுபட்டு பருத்தித் துணிகளை நெய்து தரும் உங்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நண்பர்களே! உயர்ந்த உள்ளம் படைத்தவர்கள் மற்றவர்களை ஏவி ஒரு காரியம் செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டால், மற்றவர்களை அன்புடனும், அடக்கத்துடனும் வேண்டி அவர்களால் அக்காரியம் செய்யப்படாத நேரத்திலும் சிறிதும் கோபப்படாமல் தாங்களே செய்து முடிப்பார்கள்.

No comments:

Post a Comment