Total Pageviews

Tuesday, October 11, 2011

மாம்பழம்

மாம்பழம்
கோடைக்காலத்தில் விளையும் பொருட்களிலேயே மாம்பழம் மிகச் சிறந்த பழமாகும். மாம்பழத்தின் இனிமையையும் சுவையையும் வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. அதன் சுவையை அனுபவித்தே அறிய முடியும்.
மாம்பழத்தில் பல வகைகள் உள்ளன. அவற்றை அப்படியே சாப்பிட்டாலும் இனிமைதான். மாம்பழச் சாற்றை குடித்தாலும் அருஞ்சுவையாய் இருக்கும்.
மாம்பழத்தை விளைவிப்பதால் பல்லாயிரகணக்கான விவசாயிகள் பலன் பெறுகிறார்கள். மாம்பழத்தை விற்பதிலும் பல இடங்களுக்கு கொண்டு செல்வதிலும் பல லட்சம் மக்கள் வேலை வாய்ப்பைப் பெறுகின்றனர்.
மாம்பழச் சாறுகள் செய்வதிலும் மாங்காய் ஊறுகாய் செய்வதிலும் பல தொழிற்சாலைகள் ஈடுபட்டு உள்ளனர். இவற்றால் பலர் வேலை வாய்ப்பைப் பெறுகின்றனர்.
மாவடு, ஆவக்காய் மாங்காய், மாங்காய் தொக்கு ஆகியவை மறக்க முடியாத ஊறுகாய்கள் ஆகும். அவற்றின் சுவைக்கு நிகரில்லை.
இத்தகையை இனிய மாம்பழங்களையும் காய்களையும் அளிக்கும் மாமரங்களுக்கு நன்றி சொல்வோம். மாமரங்களை போற்றி வளர்ப்போம்.
மாமரங்கள் இயற்கையின் பரிணாம வளர்ச்சியில் தோன்றிய இனிய சேர்க்கையாகும்.
இத்தகைய இனிய மாமரங்கள் தோன்றக் காரணமையிருந்த இயற்கைக்கும் பூமித்தாய்க்கும் நாம் நன்றி சொல்வோம்.

No comments:

Post a Comment