Total Pageviews

25356

Sunday, July 10, 2011

அன்பின் அலைகள் 3 :மழலை அன்பு

அன்பின் அலைகள் 3 :மழலை அன்பு

இவ்வுலகில் குழந்தைகள் மேல் அன்பு செலுத்தாத மனிதர்களே இல்லை. ஒரு குழந்தையின் இனிய சிரித்த முகத்தை பார்க்கும்போது கல் நெஞ்சுள்ளவர்களின் மனம் இளகிவிடும்.  ஒரு குழந்தையின் சிரிப்பையும் மழலை மொழியையும் கேட்கும்போது கிடைக்கும் இனிமைக்கு நிகர் வேறில்லை.அதே போல் ஒரு குழந்தை பசியால் அழுவதை யாராலும் தாங்க முடியாது. குழந்தையின் பசியை தீர்க்கவே அனைவரும் முயற்சி செய்வார்கள்.  குழந்தையின் சந்தோஷமும் குதூகலமும் இவ்வுலகையே ஆட்சி புரிகிறது.  ஆனால் உலகையே மயக்கும் ஒரு சிறுகுழந்தைக்கு தனது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் சக்தி கிடையாது.ஆகவே குழந்தை மேல் அன்பு செலுத்தும் தாயும் தந்தையும் உற்றார் உறவினர்களும்  அக்குழந்தைக்கு பசி தெரியாமல் வளர்க்கிறார்கள். அக்குழந்தையை நோய் எதுவும் தாக்காமல் பாதுகாக்கிறார்கள். அப்படியே குழந்தையை ஏதாவது நோய் தாக்கினாலும் உடனடியாக டாக்டர் மூலமாக சிகிச்சை அளிக்கிறார்கள்.   தாயும் தந்தையும் சகோதர சகோதரிகளும் தங்கள் வீட்டு குழந்தையை ஒரு ஆபத்திலிருந்து காப்பாற்ற தங்கள் உயிரையும் தர தயாராக இருக்கிறார்கள்.  இதுவே ஒரு மழலை மேல் செலுத்தும் அன்பிற்கு அடித்தளமாகும்

No comments:

Post a Comment