Total Pageviews

Sunday, November 30, 2014

மாமிச உணவு சாப்பிடுவதில் என்ன தவறு?



தாவர உணவே சிறந்த உணவு...உலகை காப்பாற்ற தாவர உணவு உண்பவர்களாகவே இருப்போம்...

மாமிச உணவு சாப்பிடுவதில் என்ன தவறு?

மாமிச உணவு உண்பதால் நாம் மிருகங்களை கொல்லுகிறோம். ஆடு, மாடு, கோழி, ஒட்டகம் பெருவாரியாக கொல்லப்படுகிறது.  பெரும்பாலானவர்கள், மீன்கள் மற்றும் மீன்கள் சார்ந்த பொருள்களை சாப்பிடுகிறார்கள். வருடத்திற்கு ஒரு லட்சம் டன் மீன்கள் சாப்பிடப்படுகின்றன.  கிட்டத்தட்ட ஆயிரம் கோடி மீன்கள் மனிதனால் கொல்லப்படுகிறது. இது மீன்களுக்கு செய்யும் மிகப் பெரிய கொடுமையாகும்.   மீன் சாப்பிடும் அனைவரையும் உடனடியாக மீன்கள் சாப்பிடுவதை நிறுத்துமாறு வேண்டிக் கொள்கிறேன்.  மீன்கள் சாப்பிடுபவர்கள் உடனடியாக நிறுத்த முடியாவிட்டாலும் கொஞ்சம் கொஞ்சமாக மீன்கள் சாப்பிடுவதை முழுவதுமாக நிறுத்தி விடுமாறு வேண்டிக் கொள்கிறேன்.   இது தவிர சிலர் குதிரை, நாய், ஆமை போன்றவற்றை சாப்பிடுகிறார்கள். இன்னும் சிலர் பாம்பு, தேள், கரப்பான்பூச்சி, ஈசல், போன்றவற்றை சாப்பிடுகிறார்கள்.  மீன்கள் தவிர மற்ற உயிரினங்கள், புழு, பூச்சிகள், பாம்புகள், கால்நடைகள் கிட்டத்தட்ட ஆயிரம் கோடி உயிர்களை வருடத்திற்கு கொல்லுகிறோம்.   இது தேவையா?  உடனடியாக தயவு செய்து மாமிசம் சாப்பிடுவதை நிறுத்தி விடவும். 
அல்லது கொஞ்சம் கொஞ்சமாக  மாமிசம் சாப்பிடுவதை குறைத்து கடைசியில் சாப்பிடுவதை நிறுத்தி விடவும். 

No comments:

Post a Comment