Total Pageviews

Tuesday, January 31, 2012

என் இனிய கிராமத்து நண்பர்களுக்கு - 1

என் இனிய கிராமத்து நண்பர்களுக்கு - 1
உங்கள் கிராமங்களில் உற்பத்தியாகும் நெல்லினால்தான் எங்கள் நகரத்து மக்களின் பசியாறுகிறது. நீங்கள் அங்கே சேற்றில் இறங்கி, நாற்று நட்டு, களை பிடுங்கி, உரம் போட்டு, மோட்டார் பம்ப் செட் மூலம் நீர் பாய்ச்சி, நெல் விளைவித்து, அரிசியாக்கி எங்களுக்குக் கொடுப்பதால்தான் நாங்கள் எங்கள் சொகுசான வேலைகளைச் செய்து கொண்டு சௌகரியமாக இருக்க முடிகிறது. உங்கள்ளுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நண்பர்களே! இவ்வுலகில் உயர்ந்த நிலையில் இருப்பவர்கள் மற்றவர்களுக்கு உற்சாகமான வார்த்தைகளைக் கூறி மற்றவர்கள் செய்யும் காரியங்களுக்கு சிறந்த ஆலோசனைகளை வழங்கி இனிய சொற்களை உபயோகித்துப் பேசுகிறார்கள். அனால் தாழ்ந்த நிலையில் உள்ளவர்கள் மற்றவர்களை குறை கூறி, இழித்துப் பேசி, வன்மையான சொற்களைப் பயன்படுத்தி மற்றவர்களின் மனதைப் புண்படுத்துகிறார்கள்.

No comments:

Post a Comment