Total Pageviews

Tuesday, January 31, 2012

என் இனிய கிராமத்து நண்பர்களுக்கு - 1

என் இனிய கிராமத்து நண்பர்களுக்கு - 1
உங்கள் கிராமங்களில் உற்பத்தியாகும் நெல்லினால்தான் எங்கள் நகரத்து மக்களின் பசியாறுகிறது. நீங்கள் அங்கே சேற்றில் இறங்கி, நாற்று நட்டு, களை பிடுங்கி, உரம் போட்டு, மோட்டார் பம்ப் செட் மூலம் நீர் பாய்ச்சி, நெல் விளைவித்து, அரிசியாக்கி எங்களுக்குக் கொடுப்பதால்தான் நாங்கள் எங்கள் சொகுசான வேலைகளைச் செய்து கொண்டு சௌகரியமாக இருக்க முடிகிறது. உங்கள்ளுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நண்பர்களே! இவ்வுலகில் உயர்ந்த நிலையில் இருப்பவர்கள் மற்றவர்களுக்கு உற்சாகமான வார்த்தைகளைக் கூறி மற்றவர்கள் செய்யும் காரியங்களுக்கு சிறந்த ஆலோசனைகளை வழங்கி இனிய சொற்களை உபயோகித்துப் பேசுகிறார்கள். அனால் தாழ்ந்த நிலையில் உள்ளவர்கள் மற்றவர்களை குறை கூறி, இழித்துப் பேசி, வன்மையான சொற்களைப் பயன்படுத்தி மற்றவர்களின் மனதைப் புண்படுத்துகிறார்கள்.

Sunday, January 29, 2012

SUGA Employment Services: சேல்ஸ் வேலைகளுக்கு சென்னையில் நிறைய ஆட்கள் தேவைப்ப...

SUGA Employment Services: சேல்ஸ் வேலைகளுக்கு சென்னையில் நிறைய ஆட்கள் தேவைப்ப...: சேல்ஸ் வேலைகளுக்கு சென்னையில் நிறைய ஆட்கள் தேவைப்படுகிறார்கள்... ஆனால் பெரும்பாலும் இன்றைய இளைஞர்கள் விற்பனை அதிகாரி பணிகளுக்கு வர தயங்குக...

Friday, January 20, 2012

Wednesday, January 18, 2012

கற்றது அணுவளவு. கல்லாதது பிரபஞ்சமளவு...

கற்றது அணுவளவு. கல்லாதது பிரபஞ்சமளவு... (பிரபஞ்சத்தின் அளவு ... 13000 கோடி ஒளிவருடம்... ஆமாம் ஒளி வருடம் என்றால் என்ன?)

Saturday, January 14, 2012

என் இனிய கிரமத்து மக்களுக்கு: 3

என் இனிய கிரமத்து மக்களுக்கு: 3

உங்கள் கிராமங்கள் உற்பத்தியாகும் பருத்தியால்தான் இங்கே பல ஏழைகளின் மானம் எளிதாய் காப்பாற்றப்படுகிறது நீங்கள் பாடுபட்டு பருத்தி பயிர் செய்து, கஷ்டப்பட்டு பருத்திக் காயில் கொட்டைகளைப் பிரித்து எடுத்து, பஞ்சிலிருந்து நூலாக நூற்று, உங்கள் கைத்தறிகளில் எளிய துணிகளாக நெய்து, இங்கே நகரில் குறைந்த விலையில் வாங்க சிறந்த துணியாக உள்ளன. சிலர் இங்கே பருத்தித் துணிகளை விலை குறைவு என்பதற்காகவும், வெயிலுக்காகவும்,சிலர் அழகுக்காகவும், ஆடம்பரத்திற்கும் வாங்குகிறார்கள். எங்களுக்காக பாடுபட்டு பருத்தித் துணிகளை நெய்து தரும் உங்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நண்பர்களே! உயர்ந்த உள்ளம் படைத்தவர்கள் மற்றவர்களை ஏவி ஒரு காரியம் செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டால், மற்றவர்களை அன்புடனும், அடக்கத்துடனும் வேண்டி அவர்களால் அக்காரியம் செய்யப்படாத நேரத்திலும் சிறிதும் கோபப்படாமல் தாங்களே செய்து முடிப்பார்கள்.

புதிய சிந்தனைகள்:

புதிய சிந்தனைகள்:

புதிய சிந்தனைகள் எழுத்தாளர்களுக்கும், பேச்சாளர்களுக்கும், தொழிலாளர்களுக்கும், கலைஞர்களுக்கும் விஞ்ஞானிகளுக்கும் மற்றும் பல மனிதர்களுக்கும் தோன்றுகின்றன. இவ்வாறு மனதில் தோன்றும் புதிய சிந்தனைகளை வெளிப்படுத்த அனைவருமே ஆவலுடன் இருக்கிறார்கள். ஒவ்வொரு துறையிலும் உள்ள ஆக்கத்திறன் படைத்தவர்கள் மற்றவர்களுக்கு நன்மையளித்து,மற்றவர்களின் மனதிற்க்கும் புடித்தமாய், திருப்தியளிக்கும் சிந்தனைகளை வெளிப்படுத்தினால் அச்சிந்தனைகள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. புதிய சிந்தனைகளே ஒவ்வொரு துறையிலும் புதிய புரட்சிகளை உண்டுபண்ணுகின்றன. ஆகவே இப்புதிய புரட்சிகள் மக்களுக்கு நன்மை அளிக்காவிட்டால் அவை மக்களால் தகர்த்தெறியப்படுகின்றன. ஆகவே அனைவருக்கும் நன்மை பயக்கும் புரட்சிகளை உருவாக்குவதே புரட்சியாளர்களுக்கும், மக்களுக்கும் நல்லது.