Total Pageviews

Tuesday, October 18, 2011

மொழி

மொழி

கோடானுகோடி உயிரினங்கள் வாழும் பூமியில் பரிணாம வளர்ச்சியின் உச்சத்தில் தோன்றிய மனித இனத்தில் சிறந்த மனிதர்கள் பல்லாயிரக்கணக்கான வருடங்களாக தங்கள் எண்ணங்களையும் சிந்தனைகளையும் வெளிப்படுத்த பலவித ஒலிகளையும், பலவித சைகைகளையும் பயன்படுத்தி வந்தனர். பிறகு சிறிது சிறிதாக வளர்ச்சி அடைந்து மனிதர்கள் எழுப்பும் ஒலிகளுக்கு ஒரு ஒழுங்கான வடிவம் கொடுத்து பேசும் மொழி உறவானது. பேசும் மொழி பலவிதங்களில் வளர்ச்சி அடைந்து அவற்றிற்கு எழுத்து கொடுக்கப்பட்டது. இவ்வாறு பலபகுதிகளில் உள்ள மக்கள் பலவித பேச்சு மற்றும் எழுத்து வடிவங்களை உருவாக்கி, பல மொழிகளை தோன்றின. இந்த மொழிகள் பலவும் இப்பொழுது ஒன்று சேர்ந்து இப்போது பலவித புதிய கலப்பு மொழிகள் தோன்றி வருகின்றன இவ்வாறு மனித சிந்தனைகளை வெளிபடுத்த உதவும் மொழிகளில் பல புதிய மாற்றங்கள் தோன்றிக்கொண்டே இருக்கின்றன. மொழிகள் வளர்ந்து கொண்டே இருக்கின்றன.

Tuesday, October 11, 2011

மாம்பழம்

மாம்பழம்
கோடைக்காலத்தில் விளையும் பொருட்களிலேயே மாம்பழம் மிகச் சிறந்த பழமாகும். மாம்பழத்தின் இனிமையையும் சுவையையும் வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. அதன் சுவையை அனுபவித்தே அறிய முடியும்.
மாம்பழத்தில் பல வகைகள் உள்ளன. அவற்றை அப்படியே சாப்பிட்டாலும் இனிமைதான். மாம்பழச் சாற்றை குடித்தாலும் அருஞ்சுவையாய் இருக்கும்.
மாம்பழத்தை விளைவிப்பதால் பல்லாயிரகணக்கான விவசாயிகள் பலன் பெறுகிறார்கள். மாம்பழத்தை விற்பதிலும் பல இடங்களுக்கு கொண்டு செல்வதிலும் பல லட்சம் மக்கள் வேலை வாய்ப்பைப் பெறுகின்றனர்.
மாம்பழச் சாறுகள் செய்வதிலும் மாங்காய் ஊறுகாய் செய்வதிலும் பல தொழிற்சாலைகள் ஈடுபட்டு உள்ளனர். இவற்றால் பலர் வேலை வாய்ப்பைப் பெறுகின்றனர்.
மாவடு, ஆவக்காய் மாங்காய், மாங்காய் தொக்கு ஆகியவை மறக்க முடியாத ஊறுகாய்கள் ஆகும். அவற்றின் சுவைக்கு நிகரில்லை.
இத்தகையை இனிய மாம்பழங்களையும் காய்களையும் அளிக்கும் மாமரங்களுக்கு நன்றி சொல்வோம். மாமரங்களை போற்றி வளர்ப்போம்.
மாமரங்கள் இயற்கையின் பரிணாம வளர்ச்சியில் தோன்றிய இனிய சேர்க்கையாகும்.
இத்தகைய இனிய மாமரங்கள் தோன்றக் காரணமையிருந்த இயற்கைக்கும் பூமித்தாய்க்கும் நாம் நன்றி சொல்வோம்.

Monday, October 10, 2011

தாமஸ் ஆல்வா எடிசன்

தாமஸ் ஆல்வா எடிசன்
--தாமஸ் ஆல்வா எடிசனே ! உங்களுக்கு எனது பணிவான வணக்கங்கள். ஆயிரத்திற்கும் மேற்பட்ட அறிவியல் அற்புதங்களை கண்டு பிடித்து, மனித வாழ்வில் இனிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்த நல்லவரே ! நீங்கள் என்னை விட கோடானுகோடி மடங்கு உயர்ந்தவர். நீங்கள் கண்டுபிடித்த அனைத்து கருவிகளையும் அற்புதமான அறிவியல் தத்துவங்களையும் புரிந்து கொள்ளும் சக்தி கூட எனக்கு இல்லை. அறிவின் அடிப்படை விஷயங்களையே புரிந்து கொள்ள திணறும் சாதாரண மனிதனாகிய நான், அறிவியல் மாமேதையாகிய தங்களுக்கு என்ன கைம்மாறு செய்ய முடியும்? நான் அறிந்ததெல்லாம் தங்களைப் போன்ற மாமனிதர்களை, அவதார புருஷர்களை, பணிந்து வணங்குவது ஒன்றுதான். அழியாப் புகழ் பெற்ற தங்களுக்கு என் கோடானு கோடி நமஸ்காரங்கள்.

மின்சாரம்

மின்சாரம்
மனித அறிவினால் கண்டறியப்பட்டவிஷயங்களில் மின்சாரம் ஒரு மிகச் சிறந்த கண்டுபிடிப்பாகும். மின்சாரம் சக்தியின் மிகச் சிறந்த வடிவமாகும். மின்சக்தியை எந்த வித சக்தியாகவும் மிக எளிதில் மாற்ற நமக்கு பல கருவிகள் உள்ளன. மனிதர்கள் பணத்தைக் கொண்டு பல விஷயங்களை இவ்வுலகில் விலைக்கு வாங்க முடிவது போல மின்சாரத்தைக் கொண்டு பல காரியங்களை எளிதாச் செய்யலாம். நமது அன்றாட வாழ்வில் மின்சாரம் தற்போது சர்வ சாதாரணமாக உபயோகப்பட்டு வருகிறது. இத்தைகைய மின்சார உற்பத்தி தொழில்களான அனல் மின் சக்தி, நீர் மின் சக்தி, அணு மின் சக்தி நிலையங்களில் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெற்று வாழ்ந்து வருகிறார்கள். வீடுகளில் உபயோகபடுவது மட்டுமில்லாமல் பல லட்சக்கணக்கான தொழிற்சாலைகளில் உலகம் முழுவதும் பலவித வளர்ச்சிப் பணிகளுக்காகவும் ஆக்கப் பணிகளுக்காகவும் மின்சாரம் பயன்படுகிறது. மின்சாரம் மனித வாழ்வின் அத்யாவசிய தேவையாக மாறி விட்டது.

நல்லவர்களின் சிந்தனை

'மனிதர்களுக்கு ஏற்படும் கஷ்டங்களை களைய வேண்டும், மனிதர்களுக்கு நம்மால் முடிந்த அளவு உதவ வேண்டும்' என்பதே அறிவுடையோரின், நல்லவர்களின் சிந்தனையாக இருக்கிறது.

Tuesday, October 4, 2011

பணம்

பணம்

மனிதனின் மிகச்சிறந்த கண்டுபிடிப்புகளில் பணமும் ஒன்று. மிகச்சிறந்த உழைப்பாளி தனது உழைப்பை பணமாக மாற்ற இயலும். மிகச்சிறந்த கலைஞர்கள் தங்கள் கலைத்திறனை பணமாக மாற்ற இயலும். மிகச்சிறந்த அறிவாளி தனது அறிவை பணமாக மாற்ற இயலும். ஆகவே மனிதர்கள் தங்கள் அறிவை, திறமையை, புத்திசாலிதனத்தை, கலைத்திறனை, காலத்தை, உழைப்பை, சரியாக உபயோகிக்கவும் அளவிடவும் பணம் மிகச்சிறந்த கருவியாக செயல்படுகிறது. மனிதர்கள் தங்களிடம் உள்ளதை பணமாக மாற்றி தங்களுக்கு தேவையானவற்றை அந்த பணத்தை உபயோகித்து வாங்கி கொள்ள இயலும். மனிதர்கள் தாங்கள் சேர்த்த பணத்தை நல்ல வழியில் செலவழித்தால் நல்ல பெயரையும் அனைவரின் ஆதரவையும் அன்பையும் பெறுகிறார்கள். அதே போல் மனிதர்கள் தங்கள் பணத்தை நல்ல வியாபாரங்களிலும் நல்ல தொழில்களிலும் முதலீடு செய்தால் அவை சிறப்பாக வளர்ச்சியடைந்து அனைவருக்கும் நன்மை பயக்கிறது. மனிதர்கள் பணத்தை நல்ல வழியில் சம்பாதித்து நல்ல வழியில் செலவழிப்பது நல்லது.