ஒருவன் ஒரு பெண்ணின் மேல் ஆசைப்பட்டால் அது காதல். பல பெண்களின் மேல் ஆசைப்பட்டால் அது காமம். ஒருவன் நாள் முழுவதும் உழைத்து மற்றவர்களுக்கு நல்ல உதவிகளை செய்து பணம் சம்பாதித்தால் அது வருமானம். ஆனால் மற்றவர்களின் பணத்தில் ஆசைப்பட்டு அவர்கள் அறியாத சமயம் அவர்கள் பையில் இருந்து எடுத்தாலோ அல்லது வன்முறையை உபயோகித்து பிறரிடமிருந்து பணத்தைப் பிடுங்கினாலோ அவை திருட்டு, கொள்ளை எனப்படுகிறது. ஒரு ஆணும், பெண்ணும் கணவன் மனைவியாக வாழ்க்கையை ஏற்று உடல் உறவு கொண்டால் அது "இல்லறம்" என போற்றப்படுகிறது. அதுவே விருப்பம் இல்லாத பெண்ணை வற்புறுத்தி ஒருவன் உடல் உறவு கொண்டால் அது "கற்பழிப்பு" என தூற்றபடுகிறது.
இது போலவே மனிதர்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் நல்லது எது, கெட்டது எது என சமுதாயம் நிர்ணயம் செய்கிறது. தீய செயல்கள் பாவம் என சொல்லப்படுகிறது. இத்தீய செயல்களாகிய பாவத்தை செய்பவர்கள் கடைசியில் கொடிய மரணத்தை அடைகிறார்கள்.
மரணம் சாதாரணமாக வயதான காலத்தில்தான் வரும். ஆனால் அதிக பாவம் செய்பவர்களுக்கு மரணம் சீக்கிரமே வந்து விடும். ஆகவேதான் பாவத்தின் சம்பளம் மரணம் என்று சொல்லப்படுகிறது...
No comments:
Post a Comment