Total Pageviews

Friday, January 17, 2020

Tamil-Children-Story-Mambazha-Kurangu-Kathai-part-1-by-N.Sugavanam.wmv




https://www.youtube.com/watch?v=8uzIXmDbwyQ

This is nice Tamil children story made for Tamil children all over the world. This story is dedicated to all Tamil Children - all over the world. If this story gives happiness to children, that is the happiness which will spread to all tamil people. We, Tamils, always want Non-Violence and Peace, taught by Mahatma Gandhi...
மாம்பழ குரங்கு - குழந்தைகள் கதை
ஒரு ஊரில் ஒரு அழகான மலை.
மலை மேல் ஒரு முருகன் கோயில். கோவிலுக்கு செல்லும் வழி எல்லாம் நிறைய கடைகள் இருந்தன. அங்கே ஒரு வியாபாரி மாம்பழங்களை கொட்டி கடை வைத்திருந்தான். பக்கத்தில் ஒரு மரத்தில் ஒரு குரங்கு அதை பார்த்தது. அந்த குரங்கு இது வரை மாம்பழம் பார்த்ததே இல்லை.
முதல் முறை மாம்பழத்தை பார்த்ததும் அதற்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. குரங்கு கடைக்காரனை பார்த்து "இது என்ன பழம்?" என்று கேட்டது. "இது பெயர் மாம்பழம்" என்றான் கடைக்காரன்.
"எனக்கு ஒரு மாம்பழம் சாப்பிட கொடு" என்று கேட்டது குரங்கு.
"சும்மா எல்லாம் கொடுக்க முடியாது. ஒரு பழம் பத்து ரூபாய். காசு கொடுத்தால்தான் பழம் கொடுப்பேன்" என்றான் கடைக்காரன்.
குரங்குக்கு மாம்பழம் சாப்பிட வேண்டும் என்ற ஆர்வம் கூடிகொண்டே போனது. "என்னிடம் காசு கிடையாது" " நான் கட்டில் வாழும் குரங்கு. எனக்கு ஒரு பழம் இலவசமாக கொடுக்க கூடாதா? " என்று குரங்கு கேட்டது.
"அதெல்லாம் முடியாது. காசில்லாவிட்டால் ஒரு பழம் கூட கிடையாது" என்றான் கடைக்காரன்.
குரங்குக்கு மிகவும் சோகமாக போய் விட்டது. குரங்குக்கு ஒரே அழுகையாக வந்தது. அது ஒரு மரத்தடியில் உட்கார்ந்து அழ ஆரம்பித்தது.
குரங்கின் அழு குரல் கேட்டு அங்கே தியானத்தில் ஆழ்ந்திருந்த ஒரு சித்தர் கண் விழித்தார்.
அவர் அந்த குரங்கிடம் "ஏன் அழுகிறாய்?" என்று கேட்டார்.
குரங்கு நடந்ததை கூறியது.
உடனே அந்த சித்தர் தனது பணப் பையில் தேடி ஒரு பத்து ரூபாயை எடுத்து அந்த கடைக்காரனிடம் கொடுத்து ஒரு நல்ல மாம்பழம் வாங்கினர்.
அதை குரங்கிடம் கொடுத்து சாப்பிட சொன்னார்.
குரங்கிற்கு ஒரே மகிழ்ச்சி. அது அந்த மாம்பழத்தை சாப்பிட ஆரம்பித்தது.
மாம்பழ சுவையில் குரங்கு மயங்கி போயிற்று.
"ஆஹா, இது போன்ற சுவையான பழத்தை இது வரை சாப்பிட்டதே இல்லை." என்றது
அப்போது சித்தர் "இது போன்ற மாம்பழம் உனக்கு தொடர்ந்து கிடைக்க நான் வழி சொல்லட்டுமா?" என்று கேட்டார்.
அதை கேட்ட குரங்கு மிகவும் மகிழ்ச்சி அடைந்து "ஐயா, சொல்லுங்கள்" என்று கேட்டது.
"இங்கு மாம்பழம் வாங்கும் எல்லோரும் மாம்பழம் சாப்பிட்டு விட்டு கொட்டையை இங்கேயே போட்டு விட்டு சென்று விடுவார்கள். நீ அதை எல்லாம் கொண்டு போய் மலை மேல் நட்டு தண்ணீர் ஊற்றி வந்தால் அதில் மாஞ்செடி முளைக்கும். மாஞ்செடி பிறகு வளர்ந்து மாமரமாக மாறும். பிறகு அதில் நிறைய மாம்பழம் பழுக்கும். அவற்றை நீங்கள் அனைவரும் பறித்து சாப்பிடலாம்" என்றார் சித்தர்.
இதை கேட்ட குரங்கு, அனைவரும் சாப்பிட்டு போட்ட கொட்டைகளை பொறுக்க ஆரம்பித்தது. இதை பார்த்த மற்ற குரங்குகள் " நீ என்ன செய்கிறாய்?" என்று கேட்டன.
" நான் இந்த கொட்டைகளை நமது மலை மேல் கொண்டு சென்று நட போகிறேன்" என்றது.
"எல்லோரும் சாப்பிட்டு எச்சை செய்து போட்ட கொட்டைகளை ஏன் பொறுக்குகிறாய்?" என்று மற்ற குரங்குகள் கேட்டன.
"அதனால் பரவாயில்லை. நமக்கு பிற்காலத்தில் நல்ல மாமரம் வளர்ந்து நல்ல மாம்பழங்கள் கிடைக்கும்". என்றது குரங்கு.
இதை கேட்ட மற்ற குரங்குகளும் கீழே கிடந்த எல்லா மாம்பழ கொட்டைகளையும் பொறுக்கி மேலே கொண்டு சென்று போய் நட்டன.
சில வருடங்களில் அந்த மலை உச்சி பெரிய மாந்தோப்பாக மாறியது. அங்கே நிறைய மாம்பழங்கள், மாங்காய்கள் குரங்குகளுக்கு கிடைத்தது. குரங்குக்கு மாம்பழம் வாங்கி கொடுத்த சித்தர் சிறிது காலம் பல ஊர்களுக்கு சென்று திரும்பி வந்தார். அவர் அந்த மாந்தோப்பை பார்த்து ஆச்சர்யபட்டு அந்த தோப்பிற்குள் சென்றார். அப்போது அந்த தோப்பிற்கு காவல் காத்து கொண்டிருந்த காவல் குரங்குகள் அவரை அடையாளம் கண்டு கொண்டு வணங்கின. அவரை தலைவர் குரங்கிடம் அழைத்து சென்றன.
அவரை பார்த்து தலைவர் குரங்கு, "அய்யா, நீங்கள் கொடுத்த ஆலோசனையினால் நாங்கள் இவ்வளவு பெரிய தோப்பை உருவாக்க முடிந்தது" என்றது. "என்னதான் நான் அறிவுரை கூறினாலும் நீங்கள் அதை கேட்டு செயல் பட்டது மிகவும் சந்தோசம்" என்றார் சித்தர்.
அவர் அந்த தலைவர் குரங்கை பார்த்து "நீ உன் கூட்டத்துடன் இணைந்து இவ்வளவு பெரிய மாந்தோப்பை உருவாக்கியதால் நீ இன்றிலிறிந்து "மாம்பழ குரங்கு" என்று அழைக்க படுவாய்" என்று ஆசிர்வதித்தார்.
அவர் ஆசியை பெற்று, மாம்பழ குரங்கும் அதன் கூட்டமும் மிகவும் சந்தோஷமாக அந்த மாந்தோப்பில் வாழ்ந்து வந்தன.
மாம்பழ குரங்கு கதை - பாகம் ஒன்று - முற்றும்.
N.Sugavanam 9176244989 ceo@sugaconsulting.in WhatsApp 8825518608

http://sugavanam-tamil-stories-jokes.blogspot.com/2020/01/tamil-children-story-mambazha-kurangu.html

https://www.youtube.com/watch?v=8uzIXmDbwyQ